கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை சுற்றுவட்டார மலைக் கிராமங்கள் கேரளாவின் பசுமை யான வனங்களைப்போல இருக்கின்றன.

வனப் பகுதியை ஒட்டி இருப்பதால், யானை, காட்டுப்பன்றிக் கூட்டங்கள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை நாசம் செய்துவிடும். விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை. பின் எப்படி விலங்குகளிடம் இருந்து வயல்களைக் காப்பாற்று கிறார்கள்?

ஆதிகாலத்தில் இருந்து இவர்கள் பயன்படுத் தும் பயிர் பாதுகாப்புக்கான ஒரு வழிமுறை தான் 'மூங்கில் பன்றி முடுக்கி’! '' 'லிட்டர் படி’ அளவிலான சுற்றளவுகொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசா வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். நடுக் கணுவில் வாசல் போலத் துளையிட்டு காற்றோட்டம் இருக்கும்படி செய்கிறார்கள். மேல், கீழ் கணுக்களைச் செதுக்கி, வில்லைப் போல வளைத்து, கயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்கிறார்கள். இப்போது அம்புபோல ஒரு குச்சியை அந்தக் கயிற்றில் கட்டிவிடுகிறார் கள். இதைப் போல நிறைய செய்து விவசாய நிலத்தைச் சுற்றி இருக்கும் மரங்களில் கட்டித் தொங்கவிடுகிறார்கள்.

''காத்து வீசும்போது விரட்டியின் நடுவில் கட்டி இருக்கிற குச்சி நடுவுல இருக்கிற 'மூங்கப்பொனாய்’ மேல மோதும். அப்ப மத்தளம்அடிக் கிறதுபோல 'டம டம’னு பெரிய சத்தம் வரும். யானை, பன்னி எல்லாம் ஓடியே போயிரும்!'' என்கிறார் மண்ணின் மைந்தர் சென்னப்பசவன்.