'மெதுவாகப் போ ரோட்டில்...
மனைவி காத்திருப்பாள் வீட்டில்!’

- இப்படி முக்கியமான சிக்னல்களில் போர்டு வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு உணர்வு கொடுப்பது தானே போக்குவரத்துக் காவல் துறையின் ஸ்டைல். ஆனால், தூத்துக்குடி டிராஃபிக் போலீஸார் வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எங்கேயாவது நோ பார்க்கிங் ஏரியாவில் வண்டி நிறுத்தப்பட்டு இருந்தால், 'போக்குவரத்துக்கு இடையூறாக இப்படி வாகனத்தை நிறுத்தலாமா? சற்றே யோசியுங்கள்!’ என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை வாகனத்தின் மேல் ஒட்டி விடுகிறார்கள்.

இந்த பளிச் ஐடியாவைப் பிடித்திருப்பவர் தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணகுமார். ''தூத்துக்குடிக்கு முன்னாடியே கன்னியாகுமரியில்தான் இப்படி ஸ்டிக்கரை முதன்முதலா ஒட்ட ஆரம்பிச்சோம். இங்கேயும் இதை அமல்படுத்தலாமேனு தோணுச்சு. உடனே, எஸ்.பி. ராஜேந்திரன் சார்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே ஓ.கே. சொல்லிட்டார். இதுவரைக்கும் 1,500-க்கும் அதிகமான வாகனத்துல இந்த ஸ்டிக்கரை ஒட்டியிருக்கோம். ஸ்டிக்கர் ஒட்டின பிறகு, நல்ல ரிசல்ட் இருக்கு. ஒட்டினதுக்கு அப்புறம் மக்கள் நோ பார்க்கிங்ல வாகனத்தை நிப்பாட்டுறது இல்லை. இந்த ஸ்டிக்கர்ல ரொம்ப ஸ்டிராங்கான பசையைப் பயன்படுத்தி இருக்கிறதால, அவ்ளோ ஈஸியா கிழிக்க முடியாது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டுறதும் ஒரு வகையில் பனிஷ்மென்ட்தான். ஃபைன் போடுறதைவிட, ஸ்டிக்கர் ஒட்டினா மக்கள் தப்பைத் திரும்பச் செய்ய மாட்டேங்கிறாங்க. போலீஸுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவும் ஏற்படுது!' என்கிறார் புன்னகையோடு!