Published:Updated:

கூச்சம் தவிர்!

ஆ.அலெக்ஸ் பாண்டியன்படங்கள் : ப்ரீத்தி கார்த்திக்

பிரீமியம் ஸ்டோரி

ந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கைப் படி, நகரங்களில் உள்ள பெண்களில் 22 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். இதை உணர்ந்துதான் வருமுன் காக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது திருச்சியின் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை. அதற்காக ஊர் முழுவதும் சுற்றிச் சுழன்று வருகிறது 'மேமோ பஸ்’!

 ''நம் பெண்கள் பலரிடம் மார்பகப் புற்றுநோய்பற்றிய விழிப்பு உணர்வே இல்லை. காரணம், கூச்ச சுபாவம். பலரும் பரிசோதனை செய்துகொள்ளக்கூடத் தயாராக இல்லை. அதனால்தான், நாங்களே அவர்களைத் தேடிச் சென்று பரிசோதனை செய்கிறோம்!'' என்று அக்கறையோடு பேசுகிறார் அறக்கட்டளையின் இயக்குநரும் மருத் துவருமான கோவிந்தராஜ்.

கூச்சம் தவிர்!

''மாறி வரும் உணவுப் பழக்கமும் உணவில் அதிகரிக்கும் கொழுப்புமே புற்று நோயைத் தூண்டுகிறது. மார்பகப் புற்றுநோயில் நான்கு நிலைகள் இருக்கின்றன. அதில் முதல் நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், பிரச்னை இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களைத் தேடிச் சென்று பரிசோதனை அளிப்பதே இந்தப் பேருந்தின் நோக்கம். தனியார் மருத்துவமனைகளில் சுமார் 5,000 ரூபாய் வரை செலவாகும் இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் வசூலிக்கும் கட்டணம் 500 ரூபாய்தான். கிராமப்புற ஏழைப் பெண்களுக்குப் பரிசோதனை முழுக்கவே இலவசம். வருடத்தில் 365 நாட்களும் இந்தப் பேருந்து இயங்கும். இது வரை திருச்சியில் நாங்கள் பரிசோதனை செய்த 300 பெண்களில் இருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!'' என்கிறார் கோவிந்தராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு