Published:Updated:

அபூர்வம்... அசாத்தியம்... அசத்தல்!

வீயெஸ்விபடம் : சொ.பாலசுப்பிரமணியன்

அபூர்வம்... அசாத்தியம்... அசத்தல்!

வீயெஸ்விபடம் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:

வம்பர் 2...

 ஆபரேஷன் தியேட்டரைச் சுற்றி டாக்டர்கள் நிற்பதுபோல், கச்சேரி மேடையைச் சுற்றிலும் நான்கு டாக்டர்கள். டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, டாக்டர் எம்.சந்திரசேகரன் - வயலின், டாக்டர் உமையாள்புரம் சிவராமன் - மிருதங்கம், டாக்டர் எஸ்.கார்த்திக் - கடம். இந்த நான்கு டாக்டர்களும் மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வன்முறை போன்று ரசிகர்களுக்கு இருக்கும் அன்றாடத் தலைவலிகளுக்கு ஒன்றரை மணி நேரம் தைலம் தடவி அனுப்பினார்கள்.

நாரதகான சபா அரங்கில் பார்த்தசாரதி சுவாமி சபாவுடன் இணைந்து கே.என்.சசிகிரண் குழுவின் கர்னாடிகா நடத்தும் 'அப்பல்லோ’ பாரத் சங்கீத உற்சவம் 2012 துவக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபூர்வம்... அசாத்தியம்... அசத்தல்!

மிக அபூர்வமாகத்தான் பாடுகிறார் பாலமுரளி. ஆனால், மிகமிக அசாத்தியமாகப் பாடி அசத்திவிடுகிறார். அன்று 90 ப்ளஸ் நிமிடங்கள் மட்டுமே பாடினார் இந்த 80 ப்ளஸ் வயதுக்காரர். அடேங்கப்பா! இந்த வயதிலும் என்ன ஒரு குரல் வளம்... அதில் என்ன ஒரு மாடுலேஷன். ஜீனியஸ்னா சும்மாவா!

பாலமுரளியை அடுத்து எப்போது கேட்கலாம்? தை பிறந்தால் வழி பிறக்கும் - அழைப்பிதழ் கிடைக்கப் பெறுபவர்களுக்கு. ஜனவரியில் சுதா ரகுநாதனின் மகன் திருமண வரவேற்பில் பாடுவதற்கு பாலமுரளி ஒப்புக்கொண்டு இருப்பதாகத் தகவல்.

அக்டோபர் 31...

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவு நாள். அன்று டெல்லியில் அவரது சமாதிக்கு முன் பாடிவிட்டு வந்திருக்கிறார் டி.எம்.கிருஷ்ணா. இந்திரா காந்தி மெமோரியல் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் கிருஷ்ணா டெல்லி சென்று பாடியதைக் கேட்டு உருகியவர்கள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் மைய அரசின் மந்திரிப் பிரதானிகள். நிகழ்ச்சி முடிந் ததும் கிருஷ்ணாவிடம், ''உங்க இசையைக் கேட்டு நிஜமா நெகிழ்ந்துட்டேன்... மறுபடியும் நீங்க பாடறதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்...'' என்று கூறியிருக்கிறார் மன்மோகன் சிங்.

டிசம்பரில் சென்னை வந்தால் கிருஷ்ணாவை நிறையவே கேட்கலாம் பிரதமர். டிக்கெட்கூட வாங்க வேண்டாம். ஆம். இந்த சீஸனில் எல்லா சபாக்களிலும் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்கு அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இது, இந்த முறை பாடகர் செய்திருக்கும் புது ஏற்பாடு!