Published:Updated:

பேட்டை ராப் @ மடிசார்!

வீயெஸ்வி

பேட்டை ராப் @ மடிசார்!

வீயெஸ்வி

Published:Updated:
##~##

ர்பாரில் நுழைவதற்கு முன்பாக சண்முகப்ரியாவில் வர்ணம் பாடி தொண்டைக் குச் சூடு ஏற்றிக்கொண்டார்கள், விசாகா ஹரியும் சாகேத்தராமனும்.

 ஹரிகதை மேடைகளில் ஏற்கெனவே புகழின் உச்சத்தில் இருப்பவர் விசாகா ஹரி. கதையைவிடவும், கதையின் ஊடே தேனில் தோய்த்த பலாச் சுளையின் இனிப்புகொண்ட குரலில் இவர் பாடுவதைக் கேட்க ஈ மாதிரியாகக் கூட்டம் மொய்த்துவருகிறது... இன்று வரையில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாகாவின் தம்பி சாகேத்தராமன், வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டு இருக்கும் இளம் பாடகர். பெரிய படிப்பு. பெங்களூரில் தனியார் கம்பெனியில் உயர் பதவி. விடாப்பிடியாகப் பாட்டிலும் கவனம் செலுத்திவருகிறார்.

பேட்டை ராப் @ மடிசார்!

வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் சீடர்களான அக்காவும் தம்பியும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, அண்மையில் ஒன்றாக மேடை ஏறிப் பாடினார்கள் (பாரத் சங்கீத உற்சவம்). அந்த நாளில், டி.கே.பட்டம்மாளும் அவருடைய சகோதரர் டி.கே.ஜெயராமனும் ஒரு மேடையில் இணைந்து கச்சேரி செய்தது யாவரும் அறிந்ததே.

மேடையில் அன்று 'மேல்’ டாமி னேஷன்தான். சாகேத்தராமன் குரல் உயர்த்தி சங்கதிகளைப் புரட்டிப் போடுவதையும், கமகங்களுடன் கபடி ஆடுவதையும் கண்டு அகம் மகிழ்ந்த விசாகா, அடக்க ஒடுக்க மாகத் தம்பியைப் பின்தொடர்ந்து கொண்டு இருந்தார். வழக்கமான வேகமும் வீரியமும் இவரிடம் மிஸ்ஸிங்!

தோடி ராகத்தை உடன் பிறப்புகள் பங்கு போட்டு ஆலாபனை செய்தார்கள். இருவரின் கவனமும் சுருதி பேதம் செய்வதிலேயே இருந்த தால், முழு சொரூபத்தைக் காட்டாமல் தோடி, தெருக்கோடிக்கு ஓடி மறைந்துவிட்டது. 'கவலைப் படாதே... நான் இருக்கேன்’ என்று தோடியை அழைத்து வந்து அழகுத் தோரணம் கட்டினார், வயலின் வாசித்த அக்கரை சுப்புலட்சுமி. அட்றா சக்கை!

தனது ஹரிகதை மேடை காஸ்ட்யூமில்தான் கச்சேரி மேடையில் ஏறினார் விசாகா. அதாவது, மடிசாரில்.

''இவர் பேட்டை ராப் பாட நேரிட்டாலும் மடிசாரை விட மாட்டார்'' என்றார் பக்கத்து இருக்கை நண்பர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism