Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

365 இரவுகள்!

நானே கேள்வி... நானே பதில்!

365 இரவுகள்!

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!
##~##

''பத்திரிகைகளில் வெளியாகும் ஜோக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும் சின்னத்திரைக்காரர்களும் சினிமாக்காரர்களும் தைரியமாகச் சுடுகிறார்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பழைய சம்பவம் ஒன்று. பி.ஆர்.பந்துலு தயாரித்த 'சபாஷ் மீனா’ படத்தில் ரிக்ஷாக்காரனாக வரும் பாத்திரம் தனது சிறுகதைகளில் ஒன்றில் வரும் பாத்திரம்போல் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் விந்தன், பந்துலுவுக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தை எடுத்துக்கொண்டு வீடு தேடிப் போனார் பந்துலு. அவரும் பேசி சமரசம் செய்து 7,000 ரூபா கொடுத்தார். அதோடு, புதிய திரைப்படத்துக்குக் கதை, வசனம் எழுதும் வாய்ப்பையும் கொடுத்தார். இன்றைக்கு நகல் எடுப்பவர்களால் பாதிக்கப்படும் ஆயிரமாயிரம் விந்தன்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பந்துலுகூட இல்லை என்பதுதான் துயரம்!''

- தாமு, தஞ்சாவூர்-4.

''தோல்வியில் துவள்வதையும் வெற்றியில் துள்ளுவதையும் மாற்ற முடியுமா?''

''மாற்றலாம். ஆல்ஃப்ரெட் ஹிட்ச் காக் இப்படிச் சொல்வதைப் பின்பற்றினால்... 'தோல்வி வந்தால் உனக்கு அது பிரியமானதைப்போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு பழக்கமானதைப்போல் காட்டிக்கொள்!''

- தாமு, தஞ்சாவூர்-4.

நானே கேள்வி... நானே பதில்!

''பிரச்னைகளைச் சுலபமாகத் தீர்ப்பது எப்படி?''

''இதற்கு உதாரணங்களை எல்லாம் தேட வேண்டாம். அண்மையில் 'துப்பாக்கி’ படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராடின. அவர்களுடன் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எஸ்.ஏ.சி. சொன்ன சமாதானம், 'இதற்குப் பிராயச்சித்தமாக அடுத்த படத்தில் விஜய் முஸ்லிமாக நடிப்பார்’. எப்பூடி?!''

- ஆர்.பி.ஷாதனா, சங்கராம்பேட்டை.

''சினிமாவில் நடிக்க அழைத்தால் தமிழ்ப் பெண்கள் முகம் சுளித்து மறுப்பதேன்?''

'' 'அவள் ஒரு தொடர்கதை’ 100-வது நாள் விழாவில் கவியரசு கண்ணதாசன் பேசியது... 'நானும் கலைஞரும் சினிமாவில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஓர் அழகி சினிமா வாய்ப்பு கேட்டு வந்தாள். ஏதோ காரணத்தால் வாய்ப்பு தரப்படவில்லை. ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தாள். எனக்கோ ஆச்சர்யம்... 'எவ்வளவு அழகாயிருந்தவள் ஒரே வருடத்தில் இப்படிச் சீர்குலைந்து போய்விட்டாளே’ என்று வருத்தப்பட்டேன். அருகில் இருந்த கலைஞர் மெள்ள என்னிடம் சொன்னார், 'ஒரு வருடத்துக்கு 365 இரவுகள் ஆயிற்றே!''’

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''மைனாரிட்டி ஆட்சி, மெஜாரிட்டி ஆட்சி... என்ன வேறுபாடு?''

''கொஞ்ச நேரம் கரன்ட் கட் பண்ணா, அது மைனாரிட்டி ஆட்சி. ரொம்ப நேரம் கரன்ட் கட் பண்ணா, அது மெஜாரிட்டி ஆட்சி!''

- என்.ஷாகிதா, சங்ககிரி.

''எதில் கருணாநிதியை ஜெயலலிதா பின்பற்றுகிறார்?''

''தி.மு.க. ஆட்சியில் பால், பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்போது எல்லாம் கலைஞர், அண்டை

நானே கேள்வி... நானே பதில்!

மாநிலங்களின் விலைவாசியை ஒப்பிட்டு விலை ஏற்றத்தைச் சமாளித்துப் பேசுவார். தற்போது ஜெயலலிதா ஒரு படி மேலே போய், 'அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் காய்ச்சல் சதவிகிதம் குறைவு’ என்கிறார். எப்படி இருக்காங்க பாருங்க?!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

'' 'சுந்தரபாண்டியன்’ நாயகி லட்சுமி மேனனுக்குப் 16 வயதுதான் ஆகிறதாமே?''

''அந்தக் குழந்தையே நீங்கதான் மேடம்!''

- ஜெ.கண்ணன், சென்னை-101.

''அரசுப் பணியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த அப்பழுக்கற்ற ஊழியர்களுக்கு நான் வழங்கி வந்த 'கிஸான் விகாஸ் பத்திரம்’ திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டது’ என்கிறாரே முதல்வர் ஜெயலலிதா?''  

''அவர்களும் எத்தனை நாளைக்குத்தான் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவார்கள்?!''                            

- பெ.வேலுமணி, மோரூர்.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism