Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

முத்தத்துக்கு ஏங்கித் தவித்த டேனியல் க்ரேய்க்!

நானே கேள்வி... நானே பதில்!

முத்தத்துக்கு ஏங்கித் தவித்த டேனியல் க்ரேய்க்!

Published:Updated:

''சமீபத்தில் ரசித்த வாழ்க்கையின் முரண்?''

நானே கேள்வி... நானே பதில்!

 ''சினிமா ஹீரோக்களிலேயே பிரமாதமான ப்ளேபாய் என்று உலகமே கொண்டாடுவது ஜேம்ஸ் பாண்டைத்தானே? இப்போது ஜேம்ஸ் பாண்டாக நடித்துக்கொண்டு இருக்கும் டேனியல் க்ரேய்க் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதைப் பாருங்கள், 'என் டீன் ஏஜ் பருவத்தில் நான் பெண்களின் முத்தங்களுக்காக ஏங்கித் தவித்து இருக்கிறேன். ஒரே ஒரு முத்தத்துக்காக மொத்த மைதானத்தையும் சுற்றிச் சுற்றி வந்து ரகசியமாக, அதுவும் அரைகுறையாக முத்தம் பெற்றுச் சென்று இருக்கிறேன். அதிலும் பருவம் அடைந்த பிறகு, எனக்குள் காதலைவிடக் காமமே கொழுந்துவிட்டு எரிந்தது. ஹூம்... அப்போது எல்லாம் எனக்கு எந்தத் தீனியும் கிடைக்கவில்லை. இந்த 44 வயதில் விதவிதமான அழகிகளுடன் என்னை நடிக்கச் சொல்கிறார்கள்’ என்றிருக்கிறார்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மீனாட்சி சுந்தரம், தஞ்சாவூர்.  

##~##

''அ.தி.மு.க. அமைச்சர்கள் ரொம்பவும் பாவம்தான் இல்லையா?''

''பின்னே... ஒரு கட்சி ஆட்சியை இழந்தால்தான், அதில் முன்னாள் அமைச்சர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் மட்டும்தான் ஆட்சி இருக்கும்போதே பலர் முன்னாள்கள் ஆகிவிடுகின்றனர்!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

''இலவசங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''நான் நினைப்பது இருக்கட்டும்... ஒரு முறை சந்திரகுப்தரும் சாணக்கியரும் சாலையில் நடந்து சென்றபோது, சாலை ஓரத்தில் ஒருவர் விலை உயர்ந்த பட்டுத் துணியால் செருப்புகளைத் துடைத்துக்கொண்டு இருந்தார். அதுபற்றி சாணக்கியரிடம் சந்திரகுப்தர் கேட்க, அதற்கு அவர் சொன்னார், 'அந்த நபர் செருப்பை விலை கொடுத்து வாங்கியிருப்பார். பட்டுத் துணி இலவசமாகக் கிடைத்திருக்கும்!''

- மு.தூர்யன், தென்காசி.

''கவிஞர்கள் கர்வக்காரர்களாகவும் இருக்கிறார்களே?''

''கர்வக்காரர்கள் மட்டுமல்ல; துணிச்சல்காரர்களும்கூட. ஒருமுறை அரசர் தைமூர் தனது அரசவைக் கவிஞர் கிர்மானியுடன் உரையாடும்போது 'எனக்கான விலை என்ன என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அஞ்சா நெஞ்சனான கிர்மானி, 'அரசே! உங்களுக்கு நான் நூறு காசுகள் கொடுப்பேன்’ என்றார். அதிர்ச்சியான தைமூர், 'என் இடுப்புக் கச்சையே நூறு காசுகள் பெறுமே!’ என்று சொல்ல, அதற்கு கிர்மானி சொன்னார், 'மன்னா, நான் சொன்ன விலையே அந்தக் கச்சைக்குத்தான்!’ ''

- கே.சரஸ்வதி, ஈரோடு-12.

''தமிழக, கேரள சட்டமன்ற நடவடிக்கைகளில் உள்ள வேறுபாடுகள் என்ன?''

''சமீபத்தில் ஜனாதிபதியின் கேரள வருகையின்போது, அவரை வரவேற்க அரசு சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் கவர்னர், முதல்வர், சபாநாயகர் படங்களுடன் எதிர்க் கட்சித் தலைவர் படமும் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில், அரசு சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில்  இப்படி எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் படமும் இடம் பெறுமா என்பதை யோசித்துப் பாருங்கள்!''

- எஸ்.கருணையானந்தம், உசிலம்பட்டி.

''பிரதமருக்கு நீங்க ஏதாவது டெடிகேட் பண்ண விரும்புகிறீர்களா?''

'' 'திவ்யா... நம்ம வீட்ல பிம்பிள்ஸ் பத்தி (சாரி, பீப்பிள்ஸ் என்று திருத்தி வாசிக்கவும்) நோ டென்ஷன்’ - இது அவர் நமக்கு டெடிகேட் பண்ணினது. நாம என்ன செய்யலாம்னு இனிமேதான் யோசிக்கணும்!''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

''கடவுள், பேய் - எதன் மீது அதிகம் பயம் வரும்?''

''பயம் வருவது ஒரு பக்கம். முதலில் நம்பிக்கை வர வேண்டும். இயக்குநர் ராம்கோபால் வர்மா, 'பேய்கள் இங்கும் அங்குமாக ஏதாவது செய்வதை அறிந்துள்ளேன். கடவுள் எதையும் செய்து நான் பார்த்தது இல்லை’ என்கிறாரே... இதற்கு என்ன சொல்கிறீர்கள்?''  

- தென்றல் நாசர், சங்ககிரி.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism