Published:Updated:

நானே கேள்வி...நானே பதில் !

குறையொன்றுமில்லை !

நானே கேள்வி...நானே பதில் !

குறையொன்றுமில்லை !

Published:Updated:
##~##
''நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?''

''கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று நடிகர்கள் சொல்வதற்கும், நடிகைகள் சொல்வதற்கும் நிறையவே வித்தியா சங்கள் இருக்கின்றன. நடிகர்கள் சொன்னால், போராளி, தீவிரவாதி, பிச்சைக்காரன், அரசியல்வாதி, மனநிலை சரியில்லாதவன், மனவளர்ச்சிஅற்றவன், பார்வையற்றவன் என்று பல விதங்களில் கேரக்டர்கள் தருகிறார்கள். இதையே நடிகைகள் சொன்னால், கவர்ச்சிக் குத்தாட்டம், அரை நிர்வாணப் பாடல்கள் என்று காட்சிகள் வைக்கிறார்கள். நடிகைகள் நடிப்பின் உச்சக்கட்டம் நிர்வாணம்தானா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நா.சக்தி, கிருஷ்ணகிரி.

''கட்டுப்பாட்டை நாம் யாரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்?''

''ராணுவத்தைப் பார்த்தா, இல்லை போலீஸைப் பார்த்தா... யாரைப் பார்த்துக் கற்றுக்கொள்வது என்று குழம்ப வேண்டாம். நம் தமிழக அமைச்சர் களைக் கவனித்தாலே போதும். முதல்வர் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தே வரிசையாக உடலை வளைத்து, குனிந்து நின்று, அவர் வரும்போது ஒருசேரக் கையைத் தூக்கி முதல்வரின் கார் மறையும் வரை கையை இறக்காமல் அப்படியே நிற்கிறார்களே... இந்த சுயக் கட்டுப்பாட்டை நீங்கள் ராணுவத்திடம்கூடப் பார்க்க முடியாது!''

- தீ.அசோகன், சென்னை-19.

நானே கேள்வி...நானே பதில் !

''பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது எந்த அளவுக்குச் சரி?''

''உங்களுக்கு இரு செய்திகளைச் சொல்கிறேன்... நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். தன் குழந்தையை எல்.கே.ஜி. படிக்கவைப்பதற்காக அலைந்து திரிந்த தந்தை ஒரு வழியாக கீழ்ப்பாக் கத்தில் உள்ள பிரபலமான பள்ளியில் தன் குழந்தையைச் சேர்த்தார். ஆனால், அந்த அனுமதி கிடைக்க அவர் அளித்த பரிசு, ஏழு லட்சம் ரூபாய் செலவில் ஒரு கம்ப்யூட்டர் லேப். இன்னொரு தந்தை மயிலாப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க முயன்றார். முடியாது என நிர்வாகம் மறுத்ததும் 17 லட்ச ரூபாய் செலவில் கூடைப் பந்தாட்ட மைதானம் உருவாக்கித்தருவதாகச் சொன்னார். இந்த இலவச சலுகையில் அவரின் குழந்தை இப்போது அதே பள்ளியில் படிக்கிறது. உங்க ளுக்குப் பதில் கிடைத்துவிட்டதா?''

- இராம.பாலு, திருப்பத்தூர்.

''அண்மையில் ரசித்தது?''

'' 'காங்கிரஸின் சச்சின், ராகுல்’ என்ற சல்மான் குர்ஷித்தின் பேச்சு. 'நான் கேப்டன் பதவிக்குப் பொருத்தமானவன் அல்ல’ என்று சச்சினே சொல்லிவிட்ட நிலையில், குர்ஷித்தின் பேச்சு உள்ளபடியே உள்குத்துதான்!''

- கந்தசாமி, மெலட்டூர்.

''எம்.ஜி.ஆருக்கும் விஜயகாந்துக்கும் ஏதாவது ஒற்றுமை?''

நானே கேள்வி...நானே பதில் !

''எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது அவரோடு ஏற்பட்ட புகைச்சலில் எஸ்.டி.எஸ். தலைமையில் ஒரு நால்வர் அணி அதிருப்தியோடு அ.தி.மு.க-வைவிட்டு வெளியேறியது. அதேபோல, இன்று கறுப்பு எம்.ஜி.ஆரோடு ஏற்பட்ட புகைச்சலில் சுந்தரராஜன் தலைமையில் ஒரு நால்வர் அணி உருவாகியிருக்கிறதே... இதுவும் ஓர் ஒற்றுமைதானே?!''

- கே.எம்.ஃபாரூக், சென்னை-92.

''எரிச்சலோடு போன் செய்தபோது, எதிர்முனையில் கிடைத்த பதில் கேட்டுச் சிரித்தது உண்டா?''

''சமீபத்தில் இரவு நேரத்தில் மதுரையில் மணிக்கு ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது, நள்ளிரவு இரண்டு மணிக்கு மின்சார வாரியத்துக்கு எரிச்சலோடு போன் செய்தேன். எதிர்முனையில் ஒலித்த ஹலோ டியூன் பாட்டு, 'குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’! சிரிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை''

- நா.கிருஷ்ணமூர்த்தி, மதுரை-17.

''மனதை உறுத்தும் முரண்பாடுகள் பற்றி?''

''கோர்ட்டில், அனைத்துத் தரப்பினரும், 'இது உண்மை... உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்று சத்தியம் செய்கிறார்கள். அதில் ஒரு தரப்பினர் நிச்சயம் குற்றம் செய்தவர்கள்தான். அந்த குற்றவாளி தண்டிக்கப்படும்போது, அவர்களிடம் வாங்கிய சத்தியப்பிரமாணம் கேலிக்கூத்தாகிவிடுகிறது. ஆனால், அதற்கெனத் தனித் தண்டனை எதுவும் கிடையாது. அரசியல்வாதிகள் அமைச்சர் பதவி ஏற்கும்போது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டும், கீழ்ப்படிந்தும் நடப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள். அவர்கள் பதவியில் இருக்கும்போது அந்த உறுதிமொழிகளுக்குப் பங்கம் ஏற்படும்படியாக நடந்துகொள்கிறார்கள். அப்படி உறுதிமொழியை மீறி நடந்துகொண்டதற்காக அவர்கள் மீது தனி நடவடிக்கை எதுவும் இல்லை. சடங்குகளாகிவிட்ட சத்தியப்பிரமாணங்கள் மனதை உறுத்தும் முரண்பாடுகள்தான் இல்லையா?''

- எஸ்.ராமன், சென்னை-17.

''ஒரு பிரதமரை அவரது கட்சி எம்.பி-யே நாடாளுமன்றத்தில் விமர்சித்ததாக வரலாறு உண்டா?''

''உண்டே. 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீன போரில் இந்தியா தோல்வியுற்று, 'அக்சைசின்’ (கிளீsணீவீ சிலீவீஸீ) என்ற பகுதியை இழந்தது. 'அங்கு புல், பூண்டு எதுவுமே விளைவது இல்லை’ என்று தோல்வியை நியாயப்படுத்தினார் நேரு. அதற்கு மகாவீர் தியாகி என்ற காங்கிரஸ் எம்.பி. நேருவைப் பார்த்து, 'பிரதமர் அவர்களே, உங்கள் தலையில்கூட முடி எதுவும் வளர்வது இல்லை. அதனால் உங்கள் தலையை யாருக்காவது கொடுத்துவிடலாமா?’ என்று கேட்டார்!''

- ஏ.சாந்தலட்சுமி, சென்னை-92.

நானே கேள்வி...நானே பதில் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism