Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

வணக்கங்க... நான் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா பேசுறேன்...

 ல்லாரும் நலமா இருக்கீங்களா? நாம மட்டும் நலமா இருந்தா பத்தாது. நம்மைச் சுத்தி இருக்கிறவங்களையும் நலமா வெச்சுக்கணும்ல? அது சம்பந்தமா சில விஷயங்களை உங்களோட பேச ஆசை.  

சிலர் நம்மைப் பாராட்டுறாங்க, சிலர் மதிக்கிறாங்க, சிலர் கோச்சுக்கிறாங்க, சிலர் எரிச்சல் ஆகுறாங்க. ஏன்னா, நம்மோட செய்கைகள் அப்படி. எந்த மாதிரியான செய்கைகள் மத்தவங்களைக் கோபப்படுத்துது, அதை எப்படிச் சமாளிக்கிறதுனு பேசலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்று... ஒன்று... நன்று!

சமீபத்துல ஒரு ஜவுளிக் கடைக்குப் போய்இருந்தேன். பட்டுப் பிரிவுல நின்னுட்டு இருக் கிறப்போ, பக்கத்துல இருந்த ஒரு அம்மா, 'இங்க பட்டுப் பாவடை இருக்கா?’ன்னுதான் கடைக் காரர்கிட்டே கேட்டாங்க. உடனே, அவங்ககூட வந்திருந்த 11 வயதுப் பொண்ணு கடைக்கே கேட்கிற மாதிரி, 'நான் பட்டுத் துணியெல்லாம் உடுத்த மாட்டேன்’னு கத்துச்சு. இப்போ டீன் ஏஜ் பசங்க, பொண்ணுங்க எல்லாம் அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேசுறதை ஒரு விரதமாவே செய்றாங்க. ஒரு காலத்துல அப்பா பேசுனா, குடும்பமே அமைதியா இருக்கும். ஆனா, இப்ப குழந்தைங்க பேசுனா குடும்பமே கை கட்டிக்கிட்டு நிக்கணும். டீன்ஏஜ் குழந்தைகளோட பிடிவாதம் பத்தி சொல்றேன். அதோட பிரச்னைகளைச் சொல்றேன்.

தினமும் எல்லாரும்தான் வாக்கிங் போறோம், உடற் பயிற்சி செய்றோம். உடம்பு ஆரோக்கியத்துக்காக ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கோம். ஆனாலும், இந்தியாதான் சர்க்கரை நோயின் தலைமையகமா இருக்கு. உடல் பருமன் நோயிலும் கூடிய சீக்கிரம் அதே நிலைமை வந்திரும். இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு இயற்கை உணவுகளில்தான் இருக்கு. இந்த விஷயத்துல நாம பாரம்பரியத்துக்குத் திரும்பியே ஆகணும்.

இந்த வருஷம் விவேகானந்தரோட 150-வது பிறந்த நாளைக் கொண்டாடிட்டு இருக்கோம். ஆனா, அந்த மகான் வாழ்ந்ததோ 39 ஆண்டுகள்தான். சிகாகோவில் அவர் பேசின உரைதான் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை உலகுக்குச் சொல்லுச்சு. அந்த விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்த கதை தெரியுமா உங்களுக்கு?

'சுதந்திர இந்தியாவில் பெருகி இருப்பது எது, சுயநலமா... பொது நலமா? என்ன... பட்டிமன்றத் தலைப்பு மாதிரி இருக்கா? ஆனா, இப்போதைய உலகத்துல சுயநலம் இல்லாத மனுஷனே இல்லைங்க. நாம ஏன் இப்படி இருக்கோம்... பொதுநலத்தோட செயல்பட்டா கிடைக்கிற நன்மையின் வீரியம் என்ன தெரியுமா?  

இன்னும் விளக்கமாப் பேசுறேன். 24.1.13 முதல் 30.1.13 வரை 044 - 66802911 என்ற எண்ணில் அழையுங்கள். கொஞ்சம் இதமா நேசமும் பாசமும் பரிமாறிக்குவோம்!

அன்புடன்
உங்கள் ராஜா.