Published:Updated:

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

தோழியா... நீ காதலியா?

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

தோழியா... நீ காதலியா?

Published:Updated:
##~##

வி.எஸ்.சந்திரன், காஞ்சிபுரம்.

 ''நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். பள்ளி இறுதி வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்தவன் என்பதால், கல்லூரியில் சக மாணவிகளிடம் இயல்பாகப் பேசவும் பழகவும் கூச்சமாக இருக்கிறது. எந்தப் பெண் என்னிடம் பேசினாலும், அவர் என் மீது பிரியம் வைத்து இருப்பதாகவே தோன்றுகிறது. இது தவறு என்று எனக்கே புரிகிறது. இதை எப்படிச் சரிசெய்வது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''உங்களைப் போல ஆண்கள் பள்ளியில் மட்டுமே படித்த பலர் சந்திக்கும் பிரச்னைதான் இது சந்திரன். ஆண்கள் பள்ளியிலேயே படித்தது, வீட்டில் அக்கா, தங்கை இல்லாமல் வளர்ந்தது, உறவினர்கள் வீட் டுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லாமல் வளர்ந்த சூழல் எனப் பல காரணங்கள் இருக் கலாம். இதனால், பிறருடன் கூச்சம் இல்லாமல் சகஜமாகப் பேசுவது, பழகுவது போன்ற சமூகத் திறமைகளை வளர்த் துக்கொள்ளும் வாய்ப்பு இல்லா மல் போயிருக்கலாம். ஆனால், இனிமேலாவது 'சமூகத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத் தோடு செயல்படுங்கள். திடீரென்று ஒரு பெண் உங்களிடம் 'சாப்பிட்டியா?’, 'அசைன்மென்ட் முடிச்சிட்டியா?’ என்று சகஜமாகக் கேட்பதுகூட உங்களை அதீதமாக உணர்ச்சிவசப்படச் செய்யும். ஆனால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள் ளுங்கள் சந்திரன்... இப்போது எல்லாம் பெண்கள் ஆண் நண்பர்களிடம் உலகின் அத்தனை உரிமையுடனும் சுதந்திரத்துடனும் பழகுகிறார்கள். அதனால், பெண் தோழிகளின் இயல்பான கரிசனத்தைக்கூட 'காதல்’ என்று உருவகப்படுத்திக் கொண்டுவிடாதீர்கள். உங்கள் கூச்சத்தைத் தவிர்க்க தனிமையைத் தவிருங்கள். திருமணங்கள், கலை நிகழ்ச்சிகள் என எப்போதும் கூட்டமாக இருக்கும் இடத்துக்குச் சென்று புதுப் புது நபர் களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எந்தப் பெண்ணையும் நெருக்கமான தோழியாக மட்டுமே நினைத்துப் பழகுங்கள். நாளடைவில் உங்கள் கூச்ச சுபாவம் காணாமல் போய்விடும்!''

சி.சித்ரா, காரைக்கால்.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''என் மகன், வீட்டுத் தோட்டத்தில் உலவும் பூனையைப் பிடித்துக் கொஞ்சுகிறான்... முத்தம் கொடுக் கிறான். 'அப்படிச் செய்யக் கூடாது’ என்று அதட்டினாலும் சொல்பேச்சு கேட்பது இல்லை. அந்தப் பழக்கம் அத்தனை ஆபத்தானதா?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் கொஞ்சும்போதும், முத்தம் கொடுக்கும்போதும் எச்சரிக் கையாக இருப்பது மிக மிக அவசியம். அதிலும் பூனையைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினால், சிரங்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குழந்தையின் உடலில் சிவப்பு சிவப் பான தடிப்புகள் ஏற்படும். பூனையிடம் கடி வாங்கினால், குழந்தைக்கு அதிக அரிப்பு ஏற்படும். மேலும், ஏதேனும் தொற்று நோய்கள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. பூனை ரோமம் பச்சிளங் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும். அந்த அலர்ஜியே நாளடைவில் ஆஸ்துமா வரை கூட இழுத்துச் சென்றுவிடும். எதிர்ப்புச் சக்தி இல்லாத குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர். எனவே, குழந்தைகளை செல்லப் பிராணிகளிடம் அளவோடு பழகவிடுங்கள். முக்கியமாக, வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தால், அவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பதோடு, தக்க தடுப்பு ஊசி களையும் அவற்றுக்குப் போடத் தவறாதீர்கள்.''

எம்.பாலா, சென்னை-45.

''நான் கேபிள் டி.வி. இணைப்பு வைத்து இருக்கிறேன். விரைவில் சென்னையில் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வைப்பது அவசியம் என்கிறார்களே... உண்மையா?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''மத்திய அரசு செட்டாப் பாக்ஸ் அவசியம் என்று வலியுறுத்துகிறது. அதனால், அனலாக் முறையில் கேபிள் இணைப்பில் பார்த்த சேனல் கள் இனி டிஜிட்டல் வசமாகும். ஆனால், சென்னையில் தற்போது இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே இருக்கின்றன. இன்னும் குறைந்தபட்சம் 38 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் தேவை. உடனடியாக, அத்தனை  பாக்ஸ்களைத் தருவிப்பது என்பது சிரமமான காரியம். டி.டி.ஹெச். இணைப்புகளில் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் செட்டாப் பாக்ஸ் களில் இருக்காது. எனவே, உங்களுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பவரி டமே ஒரு முறை கட்டணம் செலுத்தி செட்டாப் பாக்ஸ் வாங்கிவிட்டால், பிறகு வழக் கமான மாதாந்திரக் கட்ட ணத்துக்கு அதிகபட்ச சேனல்களை ஒளிபரப்புவார்கள். மத்திய அரசே வலியுறுத்து வதால், இனிமேல் செட்டாப் பாக்ஸ் அல்லது டி.டி.ஹெச். என ஏதேனும் ஒரு இணைப்பின் மூலமே சேட்டிலைட் சேனல்களின் நிகழ்ச்சிகளைக் காண முடியும்!''

கே.மகேஷ், விழுப்புரம்.

''நான் பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறேன். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின் அடிப்படைக் கட்டமைப்பு என்ன... அவற்றுக்கான தேர்ச்சி முறை களில் மாற்றம் இருக்கிறதாமே... அந்தத் தேர்வுகளுக்குத் தயாராவதன் பயிற்சி முறைகள் என்ன... விளக்க முடியுமா?''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் மூன்று கட்டத் தேர்வு, இரண்டு கட்டத் தேர்வு, ஒரு கட்டத் தேர்வு என்று மூன்று வகைகள் உள்ளன. மூன்று கட்டத் தேர்வில் முதல் நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று படிநிலைகளில் நடைபெறும். துணை ஆட்சியர், வனத் துறை அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் குரூப் 1 தேர்வு மூன்று கட்டமாக நடக்கும். இந்தத் தேர்வுக்குப் பட்டப் படிப்பு தேர்ச்சி என்பது அடிப்படைத் தகுதி. குரூப் 2 தேர்வு என்பது இரண்டு கட்டத் தேர்வாக நடைபெறும். இதில் எழுத்துத் தேர்வும், நேர்காணலும் மட்டுமே இடம்பெறும். இதில் தேர்ச்சி அடைபவர்கள் துணைப் பதிவாளர்,வேலை வாய்ப்பு அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட இரண்டாம் நிலை அதிகாரிகளாகப் பணிபுரியலாம். இளநிலை உதவியாளர்களுக்கான நபர்களைத் தேர்வுசெய்வது குரூப் 4 தேர்வுகள். இதில் எழுத்துத் தேர்வு மட்டுமே இடம்பெறும். குறைந்தபட்சத் தகுதி பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி.  

இந்திய சரித்திரம், கலாசாரம், பாரம்பரியம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், புவியியல், அரசியல் சாசனத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக அமைப்பு, சுற்றுப்புறச் சூழல், உலக வெப்பமயமாதல், நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முந்தைய பல வருடங்களைப் போல மனப்பாடம் செய்ததை நினைவுபடுத்திப் பதில் அளிக்கும் முறை இல்லாமல், சிந்தித்துப் பதில் எழுதக்கூடிய அளவிலான கேள்விகள் கேட்கப்படும். திட்டமிட்டுப் புரிந்து படித்தால், இந்தத் தேர்வுகளில் எளிமையாகத் தேர்ச்சி அடையலாம். தேர்வுகுறித்த அறிவிப்புகள், பாடத்திட்டங்கள், சந்தேகங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தளத்தைப் பாருங்கள். மேலும், விளக்கங்களுக்கு 18004251002 என்ற இலவசத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!''

படம்: ஆ.வின்சென்ட் பால்