Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு எஃப்.எம். பாலாஜியின் அன்பு வணக்கங்கள்...

 என்னாடா ஆர்.ஜேன்னா ரேடியோல பாட்டுதானே போடணும்... பேச வந்துட்டானேனு கேக்கக் கூடாது. அதெல்லாம் அப்படித்தான். காலம் முன்னாடி மாதிரிலாம் இல்லை பாஸ். இன்னைக்கு நீங்க உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், உங்க திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனா, அதைச் சரியான நேரத்துல, சரியான இடத்தில் நிரூபிக்கிறது ஒரு கலை. அந்த புத்திசாலித்தனத்தைக் கத்துக்கிறது எப்படி? தெளிவா... ஜாலியா சொல்றேன். கேளுங்க ஃப்ரெண்ட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று... ஒன்று... நன்று!

ஒபாமா அமெரிக்கத் தேர்தல்ல ஜெயிச்சா, இங்கே எல்லாரும் கொண்டாடுறோம். ஃபேஸ்புக்ல உடனே வத்சலா ஆன்ட்டி ஒபாமாவுக்கே வாழ்த்து தெரிவிக்கிறாங்க. சூப்பர்! ஆனா, உங்க ஏரியா கவுன்சிலர் பேரு தெரியுமா? ரேஷன்ல இலவச சர்க்கரை யாருக்கெல்லாம் கொடுக்குறாங்க? இதப் பத்திலாம் தெரிஞ்சுவெச்சுருக்கோமா நாம? உலகத் தலைவர்கள் பத்தியும், தேசத் தலைவர்களோட ஊழல்பத்தி மட்டும் பேசுறது அரசியல் புரிதல் இல்லைங்க. நம்மளைச் சுத்தி நடக்கிற கெட்டது பத்திலாம் தெரிஞ்சுக்கிட்டு செயல்படுறதுதான் உண்மையான அரசியல். ஆனா, இளைஞர்கள் அரசியல்னாலே சாக்கடைனு சொல்றாங்க. அரசியல்னா என்ன, எப்படிலாம் பிரயோஜனமா அரசியல் பண்ணலாம். தெரிஞ்சுக்கலாமா?

ஷாப்பிங் மாலுக்குப் போனா 998 ரூபாய்க்குப் பொருள் வாங்குனா மீதி 2 ரூபாயைக் கொடுக்காம, 'சாரிட்டிக்கு எடுத்துக்கிட்டோம்’னு கணக்குச் சொல்வாங்க. நாமளும் அதைப் பத்திக் கேள்வி கேட்கக் கூச்சப்பட்டுக்கிட்டு வந்துடு றோம். அது என்ன சாரிட்டினு தெரியுமா? ஆனா, அதெல்லாம் பக்கா பிசினஸ். எதெல்லாம் சேவை, எப்படி சேவை செய்தால் அது தகுதியானவர்களுக்குப் போய்ச் சேரும்... இதெல்லாம் சொல்றேன்!  

நம்மள்ல பலருக்கு சினிமா மீது அதீத ஆர்வம். அதைத் தப்புனு சொல்லலை. ஆனா, நடிகர் கட்-அவுட்டுக் குப் பால் அபிஷேகம் பண்றது, மாலை போடுறதுலாம் டூ மச்சுங்க. சினிமாவை சினிமாவா பார்க்கிறது எப்படி? சினிமாவின் அர்த்தம், ஆன்மாவும் புரிஞ்சு அதை

ரசிக்கிறது எப்படி..? சொல்றேன்... கேட்டுக்கங்க!

லைஃப் ஸ்டைல்... லைஃப் ஸ்டைல்னு ஸ்டைலா சொல்றோம். உண்மையான லைஃப் ஸ்டைல்னா என்னன்னு தெரியுங்களா? அப்பல்லாம் நம்ம அம்மா, அப்பா பத்து மாசச் சம்பளத்தை மிச்சம் பிடிச்சு ஒரு டி.வி. வாங்குவாங்க. ஆனா, இப்போ நாம வாங்காத பத்து மாசச் சம்பளத்தை முன்னாடியே கொடுத்துட்டு, கடன்ல பொருளை வாங்குறோம். பத்தும்பத்தாததுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டைத் தேயுதேயுனு தேய்க்கிறோம். செலவைக் குறைக்கவும் கடன் வாங்காம அழகான லைஃப் ஸ்டைல் வாழவும் வழி சொல்றேன். கேளுங்க ஃப்ரெண்ட்ஸ்!

28.2.13 முதல் 6.3.13 வரை 044 - 66802911 * என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். கலகலனு பேசிக்கலாம்!

அன்புடன்,

பாலாஜி.

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism