Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ராஜா... ராஜா... ராக்கெட் ராஜா!

 ##~##
'ஊழலை ஒழிக்க வேண்டும்’ என்று ராகுல்காந்தி அடிக்கடி கடுமையாகவும் தீவிரமாகவும் பேசி வருகிறாரே?

ஆனால் என்ன செய்ய?  பேக்ரவுண்டில் 'ராஜா ராஜா... ராக்கெட் ராஜா’ என்று பாட்டு கேட்கிறதே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- எஸ்.பழனிவேல், திருமளம்.

அடுத்த முறையும் ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர்  பிரச்னையைத் தீர்க்க கருணாநிதி என்ன செய்வார்?

என்ன பாஸ் கேள்வி இது? மீன்களுக்குப் பொரி போட்டுவிட்டு மீனவர்களுக்காகத் தந்தி கொடுப்பார்!

- எஸ்.பழனிவேல், திருமளம்.

நானே கேள்வி... நானே பதில்!

முரண்பாடுகளின் மூட்டை என்றால் என்ன?

போன வாரத்து பேப்பரைப் புரட்டுங்கள். ''மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அரசியல் நாகரிகம் குறைந்திருக்கிறது'' - இது ஜீவா குடும்பத் திருமண விழாவில் கருணாநிதி வருத்தப்பட்டு பேசியது.

''விளம்பரம் கிடைக்கும் என்றால், மனிதக் கழிவையும்கூட தொடத் துணியும் அற்பப் பேர்வழி'' - இது அதே நாளிதழில் சுப்பிரமணியசாமியை விமர்சித்து துரைமுருகன் விடுத்த அறிக்கை. சந்தேகம் தீர்ந்தாச்சா?

- கா.மலர், தேனி.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

வித்தியாசம் அல்ல, வித்தியாசங்கள்.

வித்தியாசம் 1: அரசுப் பணியாளர் - ஏதாவது ஒரு காரணத்தால் கைது செய்யப்பட்டால், 48 மணி நேரத்துக்குள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதி - கைது செய்யப்பட்டதாலேயே, அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார்.

வித்தியாசம் 2: அரசுப் பணியாளர் - ஜாமீனில் வெளியே வந்தாலும் அலுவலகத்துக்குச் செல்ல முடியாது.

அரசியல்வாதி - ஜாமீனில் வெளிவந்தால் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றலாம்.

வித்தியாசம் 3: அரசுப் பணியாளர் - நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்போது பத்திரிகையாளர்கள் படமெடுத்தால், முகத்தைத் துண்டால் மூடிக்கொள்வார்.

அரசியல்வாதி -  நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்போது பத்திரிகையாளர்கள் படமெடுத்தால் முகம்கொள்ளாத பூரிப்பு இருக்கும். பட்டாசுகூட வெடிப்பார்கள்.

வித்தியாசம் 4: அரசுப் பணியாளர் - கைது ஆனவுடன் ஊரே கூடி தூற்றுவார்கள், சாபம் இடுவார்கள்.

அரசியல்வாதி: 'ஏழை மக்களின்’ சார்பில் முதல்வரே சிறையில் இருக்கும் அவரை வாழ்த்துவார்.

- ஆர்.கே.சுந்தரம், சென்னை 26.

நானே கேள்வி... நானே பதில்!