Published:Updated:

முதல் போட்டி... கடைசிப் போட்டி ஃபார்முலா!

சார்லஸ், படங்கள்: பொன்.காசிராஜன்

முதல் போட்டி... கடைசிப் போட்டி ஃபார்முலா!

சார்லஸ், படங்கள்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

ற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எகிறி அடித்த அஷ்வினின் சூறாவளி சுழற்பந்துகள் ஆஸ்திரேலிய அணியைச் சுருட்டி இந்திய அணிக்கு அபார வெற்றி பெற்றுக்கொடுத்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஏழு, இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து என ஒட்டுமொத்தமாக 12 விக்கெட்கள் கொய்த  அஷ்வினிடம் பேசினேன்...

 ''ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என் சொந்த ஊர் சென்னையில் நான் விளையாடிய முதல் டெஸ்ட் இது. 12 விக்கெட். செம சர்ப்ரைஸ் போனஸ். பந்து எப்படி ஸ்பின் ஆகும்னு பேட்ஸ்மேன் கணிக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பந்துகளைச் சுழற்றி விசினேன். அதுதான் ஜாக்பாட் கொடுத்திருக்கு!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் போட்டி... கடைசிப் போட்டி ஃபார்முலா!

''முதல் ஆறு விக்கெட்டையும் நீங்களே வீழ்த்தியதும் கும்ப்ளேவின் ஒரே இன்னிங்ஸ் பத்து விக்கெட் சாதனையை முறியடிக்க நினைச்சீங்களா?''

''அதைப் பத்தி நினைச்சுப் பார்க்கலைனு சொன்னா, அது பொய். நினைச்சேன்... அதை மட்டும் மனசுலவெச்சுக்கிட்டே பவுல் பண்ணலை. நடுவுல சின்னக் காயம்பட்டு சிகிச்சைக்காகப் போயிட்டு வந்ததில் ரிதம் போயிருச்சு. இன்னும் நிறைய டெஸ்ட் இருக்கே... பார்க்கலாம்!''

முதல் போட்டி... கடைசிப் போட்டி ஃபார்முலா!

''இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரிய அளவில் நீங்க விக்கெட் எடுக்கலை. இவ்ளோ குறுகிய இடைவெளியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா எப்படிச் சாதிச்சீங்க?''

''இங்கிலாந்து, ஆஸ்திரேலியானு யாருக்கு எதிராகவும் என் லைன் அண்ட் லெங்க்த் பக்காவா இருக்கும். ஆனா, பந்தை வீசுறதுக்கு முன்னாடி என் இடது காலை லேண்ட் பண்றதுல ஒரு சின்ன பிரச்னை இருந்தது. அதை என் கோச் சுனில் சுப்ரமணியம் சுட்டிக்காட்டினார். அப்புறம் பயிற்சியில் முழுக்க என் இடது காலைக் கச்சிதமா லேண்ட் பண்றதில் ஃபோகஸ் பண்ணேன். விக்கெட் வேட்டை!''

''ஹர்பஜன் சிங்கும் இப்போ டீம்ல இருக்கார். ஒரே டீம்ல ரெண்டு ஆஃப் ஸ்பின்னர்கள் இருக்கிறப்போ, உங்களுக்குக் கூடுதல் பிரஷர் இருக்குமே?''

''ஹர்பஜன் சிங் இருந்தாலும் இல்லைன்னாலும் நான் எப்பவுமே பிரஷருடன்தான் விளையாடுவேன். 'இதுதான் நான் விளையாடுற முதல் போட்டி... இதுதான் நான் விளையாடுற கடைசிப் போட்டி’ - இப்படி எனக்குள்ளயே ஒரு பிரஷரை வெச்சுக்கிட்டுதான் ஒவ்வொரு போட்டிக்கும் களம் இறங்குவேன். இப்போ டிரெண்ட்ல டீம்ல நிரந்தர இடம்னு யாருக்குமே கிடையாது. அதனால, ஹர்பஜன் சிங் இருக்கார், ஜடேஜா இருக்கார்னு நினைச்சுட்டு நான் விளையாடுறது இல்லை. நான் எப்படி பவுல் பண்றேன், என் கேம் எப்படி இருக்கணும்... அதில்தான் என் கவனம் இருக்கும். எல்லாப் போட்டிகளிலுமே நல்லா விளையாடணும்னு நினைக்கிறவங்களுக்குக் கூடுதல் பிரஷர் எப்பவுமே வராது!''

''திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?''

முதல் போட்டி... கடைசிப் போட்டி ஃபார்முலா!

''தொடர்ந்து போட்டிகள் இருக்கிறதால, என் மனைவி ப்ரீத்தியை வெளியே அழைச்சுட்டுப் போகக்கூட நேரம் இல்லை. சீக்கிரமே ஒரு ஹனிமூன் ட்ரிப் பிளான் பண்ணணும். ப்ரீத்தி வீட்ல குட்டிக் குட்டியா நாய்கள் வளர்க்கிறாங்க. அதுங்களோட விளையாடிட்டு இருப்பேன். கொஞ்சமே கொஞ்சம் நேரம் கிடைச்சா... ஷாப்பிங். இதுதான் இப்போ என் ரிலாக்சேஷன்!''

''பயங்கர சினிமா ரசிகர் ஆச்சே நீங்க... கடைசியா என்ன படம் பார்த்தீங்க?''

'' 'விஸ்வரூபம்’... சூப்பர்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism