Published:Updated:

ஜில்லுனு ஒரு தோழி!

இர.ப்ரீத்தி, படங்கள் : உசேன்

##~##
பீ
ட்டர் இங்கிலீஷில் பிரித்து மேயும் எஸ்.எஸ்.மியூஸிக் பிரியங்காவும், 'வணக்கம்’ முதல் 'நன்றி’ வரை தமிழ் நவிலும் 'மக்கள் தொலைக்காட்சி’ ஆர்த்தியும் சந்தித்தால்... சந்திக்க வைத்தேன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஹாய்... ஹவ் ஆர் யூ?'' என்று கண்கள் விரிய ஆர்த்தியை வரவேற்றார் பிரியங்கா. க்ளோசப் புன்னகையுடன் பேச முயற்சித்த ஆர்த்திக்கு வெறும் காற்றுதான் வந்தது! ''அச்சச்சோ... என்ன ஆச்சு ஆர்த்தி?'' என்ற பிரியங்கா குரலில் கலவரம்!

'' 'சின்னச் சின்ன ஆசை’ நிகழ்ச்சிக்காக குழந்தைங்களோடு சேர்ந்து ஐஸ்க்ரீம், சாக்லேட் சாப்பிட்டேன். குரல் காலி!'' என்று ஆர்த்தி கரகரக்க, ''ஓ காட்... டாக்டர்கிட்ட போனீங்களா?'' என்று விசாரித்தார் பிரியங்கா.

''அம்மா கையால செஞ்ச கஷாயம் குடிச்சா குரல் பளிங்கா மாறிடும்!'' என்று பாட்டி வைத்தியம் சொன்னார் ஆர்த்தி. ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டார் பிரியங்கா.

ஜில்லுனு ஒரு தோழி!

''என்ன படிக்கிறீங்க பிரியங்கா?'' என்று ஆர்த்தி கேட்க, ''எம்.ஓ.பி-யில் ஃபர்ஸ்ட் இயர் விஸ்காம். அதனால நோ 'வாங்க’, 'போங்க’!'' என்று பிரியங்கா சிரிக்க, ''நேர்ல நல்லாவே தமிழ் பேசுறியே! எப்போ கத்துக்கிட்டே?'' என்று தனது ஆச்சர்யத்தை அடுத்த கேள்வி ஆக்கினார் ஆர்த்தி.

''கடவுளே... நான் அக்மார்க் சென்னைப் பொண்ணு. சின்ன வயசுல இருந்தே வீட்ல எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசுவோம். ஸோ... இட் ஹாப்பன்ட். பட், தமிழும் என் பேட்டைதான்!'' என்று சிரித்த பிரியங்கா, ''அட, என்னை விடுங்க... நீங்க எப்படி நிகழ்ச்சி முழுக்க தமிழ்லயே சமாளிக்கிறீங்க?'' என்று ஆர்த்தியிடம் கேட்டார்.

''அது பெரிய கதைம்மா! சுத்தத் தமிழ்ல பேசணும்னு தெரியாமலேயே நேர்காணலுக்கு வந்துட்டேன். சரளமா பேசியதால் உடனே தேர்ந்தெடுத்துட்டாங்க. ஆரம்பத்தில் முழுக்கவே தமிழ்ல பேச ரொம்பவே சிரமமா இருந்துச்சு. அதுவும் எங்க சேனல்ல நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது இங்கிலீஷ் கலந்து பேசிட்டா, கலந்தாய்வுக் கூட்டம் வெச்சுத் திட்டுவாங்க. ஆரம்பத்துல நிறையத் திட்டு வாங்கினேன். 'இனிமே திட்டே வாங்கக் கூடாது’ன்னு முடிவு பண்ணி, தமிழ் பழக ஆரம்பிச்சதுல இப்போ ஒரே பாராட்டு மழை!'' என்று ஆர்த்தி சிரிக்க, ''நல்லவேளை நான் அங்கே வேலை பார்த்தா தினம் தினம் மீட்டிங்தான்... தினம் தினம் திட்டிங்தான்!'' என்று அதிர அதிரச் சிரித்தார் பிரியங்கா.

''உங்க வீட்டைப் பத்திச் சொல்லுங்க ஆர்த்தி?'' பிரியங்காவின் ஆர்வம்.

''ஒரு அக்கா. கல்யாணம் ஆகிருச்சு. அப்பா வுக்குச் சொந்த வணிகம். நான் எம்.ஏ., பிசினஸ் எகனாமிக்ஸ் முடிச்சிருக்கேன். நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலை போக, ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன்!'' என்றார் ஆர்த்தி.

''ஹைய்யோ... நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவங்க. உங்களைப் போய் பெயர் சொல்லிக் கூப்பிடுறேனே!'' என்று நாக்கைக் கடித்தார் பிரியங்கா.

''ஏய்ய்ய்ய்... என்னை நீ பேர் சொல்லியே கூப்பிடலாம். அதான் நாம தோழிகள் ஆயிட்டோமே!'' என்று தோழமையாக தோள் தொட்டார் ஆர்த்தி. உடனே, ''என்ன பிரியங்கா உங்க உடம்பு இவ்வளவு ஜில்லுனு இருக்கு!'' என்று ஆர்த்தி பதற, ''நான் மிஸ்.கூல்ல்ல்ல்... சம்மர்ல வெயில் வெளுத்து எடுத்தாலும் நான்

ஜில்லுனு ஒரு தோழி!

எப்பவும் சில்லுனுதான் இருப்பேன்!'' என்று சிரித்தார் பிரியங்கா. ''ஆனா, பார்க்குறதுக்கு நீங்க செம ஹாட்!'' ஆர்த்தி அர்த்தத்தோடு சிரிக்க, ''ஹையோடா... ஒரு பொண்ணுகிட்டே இருந்து என்னைப்பத்தி இப்படி ஒரு கமென்ட். தேங்க்ஸ்!'' என்று ஆர்த்தியின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார் பிரியங்கா.

''சமத்து!'' என்று நெட்டி முறித்த ஆர்த்தி, மணி பார்த்துவிட்டுப் பதறினார். ''கடவுளே... நிகழ்ச்சிக்கு நேரமாச்சு. இன்னொரு நாள் நிறைய நேரம் உட்கார்ந்து பேசலாம்!'' என்று 'மக்கள் வணக்கம்’ சொல்லிக் கிளம்பினார். அவர் சென்றதுமே பிரியங்கா வேகமாக மொபைல் எடுத்து 'மிஸ் யூ ஆர்த்தி’ என்று தட்டிவிட்டு பதிலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கப்பா!