Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.

நான் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பேசுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நல்ல தமிழ் நடை பயில்கிறதா? இந்தக் கேள்வியைக் கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்தபோது, ஓர் இளம் பெற்றோர் இரண்டு வயதுக் குழந்தையோடு வந்திருந்தார்கள். அங்கே நான் பார்த்த, கேட்ட விஷயங்களால் இடிந்துபோனேன். அது என்னவென்று சொல்கிறேன். தமிழர்கள்குறித்த சில பெருமைகள், தகவல்களோடு, இப்போது இருக்கும் சில வருத்தங்களையும் பதிவுசெய்கிறேன்.

இன்று... ஒன்று... நன்று!

ஒரு காலத்தில் கருவறைகளாக இருந்த வகுப்பறைகள் இப்போது பாலியல் குற்றங்கள், தற்கொலைகள், பெற்றோர் போராட்டங்கள் எனத் தவறான தலைப்புச் செய்திகளாக மாறுவது வேதனையான விஷயம். பள்ளி வகுப்பறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குள் சில கனவுகள் உண்டு. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு விஷயத்தை உணர்வுபூர்வமாகவும் அணுக முடியும். சிந்தித்து அறிவியல்பூர்வமாகவும் அணுக முடியும். இரண்டில் எது முக்கியம்? எதை, எப்படி அணுகுவது? மதுரையில் நான் பணியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு நடவடிக்கை எடுக்க நினைத்தபோது, எனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன். ஜல்லிக்கட்டு தொடர்பாகவும் சில உண்மைத் தகவல்களைப் பரிமாறுகிறேன்.

'மாற்றம் ஒன்றே நிலையானது. தன்னைத் தகவமைத்துக்கொள்ளாத எந்த உயிரினமும் அழிந்துவிடும்’ என்பதுதான் இயற்கையின் நியதி. இந்த உண்மை தமிழருக்குப் பொருந்தும். ஆனால், தமிழுக்குப் பொருந்துமா? சில விளக்கங்களோடு இதைப் பற்றி விரிவாகப் பேசலாம். தனி மனிதர்கள் வரலாற்றை மாற்றி அமைக்கிறார்களா? அல்லது அவ்வப்போது வரலாறு தன் நாயகர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலை வெகுநாட்கள் நான் யோசித்தது உண்டு. இது தொடர்பாக நான் கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்ததுபற்றி உங்களுக்கும் சொல்கிறேன்.

14.3.13 முதல் 20.3.13 வரை 044-66802911 * என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். சில பெருமைகளையும் பல கடமைகளையும் பேசுவோம்.

அன்புடன்,

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism