Published:Updated:

"மாத்தேன்... போ!"

க.நாகப்பன், படம்: சி.சுரேஷ்பாபு

"மாத்தேன்... போ!"

க.நாகப்பன், படம்: சி.சுரேஷ்பாபு

Published:Updated:
"மாத்தேன்... போ!"
##~##

ப்போதும் துறுதுறுவென்று ஓடித் திரியும் குழந்தைகளை நாளெல்லாம் ரசித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், அதே குழந்தைகள் அடம்பிடிக்கும்போது மட்டும் நமக்குப் பிடிக்காமல் போகிறது அல்லது வெறுப்பு  உண்டாகிறது. இது ஏன்? குழந்தைகளின் இயல்புத் தன்மை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி என்று யோசிக்காதீர்கள். அடம்பிடிக்கும் இயல்பு இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்று யோசியுங்கள்!'' என்று மாற்றி யோசிக்கச் சொல்லும் மனநல மருத்துவர் செந்தில்வேலன் மேலும் தொடர்கிறார்.

''அந்தக் காலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய நேரம் இருந்தது. தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு பார்வையையும் அசைவையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டார்கள். ஆனால், இந்த ஃபாஸ்ட்ஃபுட் காலகட்டத்தில் பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள நேரம் இல்லை. மூன்று வயதுக் குழந்தை அடம்பிடித்தால், அதோடு சரிக்குச் சமமாக 30 வயது அம்மாவும் சண்டை போடுவது இதனால்தான். குழந்தைகள் எந்தப் பொருள் மீது ஆசைப்பட்டாலும், 'அது எனக்கு இப்போதே வேண்டும்’ என்றுதான் அடம்பிடிப்பார்கள். இதனால் அந்தப் பொருள் எப்படி உருவாகிறது, அது எங்கிருந்து வருகிறது, நமக்கு எப்படிக் கிடைக்கும், இப்போது அது நமக்கு அவசியம் தேவையா என்பதையெல்லாம் அவர்களுக்கு மிக இளம் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும்.

"மாத்தேன்... போ!"

ஒரு குழந்தை தனது இரண்டு வயது வரை ஐம்புலன்களின் வழியாகத்தான் எதையும் ரசிக்கும். குழந்தை வாயில் எதையாவது வைத்துக்கொண்டால், நாம் பிடுங்கக் கூடாது... தட்டிவிடக் கூடாது. ஒரு பொருளை வாயில் வைப்பதன் மூலம்தான் அந்தக் குழந்தை புதிதாகச் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. குழந்தை வாயில் வைத்துச் சப்புவதற்கேற்ற சுத்தமான பொருட்களை மட்டும் குழந்தையின் கைக்கெட்டும் தொலைவில் வைக்க வேண்டும்.

இரண்டு வயது வரை குழந்தைகள் தன் பார்வைக்குள் தெரிவது மட்டும்தான் உலகம் என்று நினைத்துக்கொள்ளும். இதனால்தான் எப்போதும் தன்னைக் கொஞ்சி மடியில் வைத்துக்கொள்ளும் அம்மா தன் கண் பார்வை எல்லையில் இல்லையென்றால், வீறிட்டு அழத் தொடங்கும். ஆனால், இது புரியாமல் குழந்தை எப்போதுமே அழுது அரற்றுவதாக நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல!

ஐந்து வயது முதல் ஏழு வயது வரையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னை இந்த உலகின் ராஜாவாகவே எண்ணிக்கொள்ளும். அவர்களைச் சுற்றி இருக்கும் எல்லாமும் எல்லா ரும் அவர்களுக்காகப் படைக்கப்பட்டதாக நினைப்பார்கள். 'ரம்யா எனக்கு அக்கா’ என்று தான் அப்போது சிந்திப்பார்கள். 'நான் ரம்யாவின் தங்கை’ என்று சிந்திக்கத் தோன்றாது. இந்தச் சிந்தனை பத்து வயதுக்குப் பிறகுதான் மாறும். பொதுவாக, ஐந்து வயது வரை குழந்தைக்கு திருட்டுத்தனம், ஏமாற்றுவது, பொய் சொல்வது தெரியாது. ஆனால், நாம்தான் குழந்தை எதையோ மறைப்பதாகக் கற்பனைசெய்து அதை அதட்டி அப்படியான பழக்கங்களை அறிமுகப்படுத்துகிறோம்.  

சாக்லேட், ஐஸ்க்ரீம், பொம்மை என்று ஒவ்வொரு குழந்தையும் தன் ஆசைக்கு ஏற்ப அடம்பிடிக்கும். அப்போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். தொடர்ந்து

"மாத்தேன்... போ!"

அடம்பிடிக்கும் குழந்தையிடம், 'அப்படிப் பண்ணாதே’ என்று ஒருமுறை அன்பா கச் சொல்லலாம். ஆனால், அதையே திரும்பத் திரும்பச் சொன்னால், நம்மைக் கவனிக்கிறார்கள்... அதனால்தான் எரிச்சலோடும், கோபத்தோடும் பேசுகிறார்கள் என்பதைக் குழந்தை புரிந்துகொள்ளும். பிறகு, தனக்குத் தேவையானதைப் பெற அடம்பிடிப்பதையே ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளும். பெற்றோர்கள் முகத்தில் உணர்ச்சி காட்டினால், பயத்தோடு பார்த்தால்கூட, அப்பா - அம்மாவிடம் தன் ஐடியா வொர்க்அவுட் ஆகிறது என்று குஷி வந்துவிடும்.

குழந்தையிடம் பேசும்போது பலர் இருந்தா லும் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பேச வேண்டும். அப்பா திட்டும்போது, 'சும்மா குழந்தையைத் திட்டாதே’ என்று பாட்டி வக்காலத்து வாங்கினால், 'நமக்கு சப்போர்ட் பண்ணவும் ஆள் இருக்காங்க. தொடர்ந்து இப்படியே இருக்கலாம்’ என நினைக்கும். எந்தக் குழந்தையும் தவறு செய்யும்போது, அதற்கு யாரும் நியாயம் கற்பிக்காமல் இருந்தாலே, குழந்தை ஒழுங்காக வளரும்.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. யு.கே.ஜி. படிக்கும் சிறுவன், 'ஒரே டார்ச்சர்... பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை’ என்கிறான். 10 வயதில் தற்கொலைக்கு முயற்சிக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அந்த நிலைமைக்கு நம் குழந்தையைக் கொண்டுசெல்லாமல் இருப்போம்!'' என்கிறார் செந்தில் வேலன்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்   பிறக்கையிலே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism