Published:Updated:

தலைவன்!

சார்லஸ்

தலைவன்!

சார்லஸ்

Published:Updated:
##~##

"என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை நான் பாசிட்டிவ்ஆகவே எதிர்கொள்வேன். ஏனென்றால், அந்த விமர்சனங்கள் என்னோடு முடிந்துபோகின்றன. அது என் அணி யினரைப் பாதிப்பது இல்லை. நான் தடுப்புச் சுவராக இருந்து தாங்கிக்கொள்கிறேன். அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தட்டும்!'' - இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் சந்தித்த தொடர் தோல்விக்குப் பின் இப்படிச் சொன்னார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி.

 இன்று உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவைத் தூக்கிப் போட்டுத் துவம்சம் செய்திருக்கிறது டோனியின் படை. 20/20 உலகக் கோப்பை சாம்பியன், ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இடம், இப்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என டோனி, இந்தியா இதுவரை பார்த்திராத கேப்டனாக இருப்பதன் மேஜிக் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிப்படையான அணுகுமுறை!

இந்திய அணிக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பவர் நெருக்கடிகளைச் சமாளிக்கக்கூடியவராகவும், கடினமான சூழல்களில் இருந்து அணியை மீட்பவராகவும், மீடியாக்களிடம் வாய்ச் சவடால் விடாதவராகவும் இருக்க வேண்டியது கட்டாயம். இயல்பில் நண்பர்களுக்கு மத்தியில் டோனிக்குப் பெயரே அதிகம் பேசுபவன் என்பதுதானாம். ஆனால், கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, தேவை இல்லாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டார் டோனி. ஒரு தலைவனின் முக்கியத்

தலைவன்!

தேவையான, வெளிப்படையான அணுகுமுறை டோனியிடம் உண்டு. ஆஸ்திரேலியத் தொடரில் சச்சின், சேவாக், கம்பீரைச் சுழற்சிமுறையில் களம் இறக்கியது, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அஷ்வினுக் குப் பதில் ஸ்ரீசாந்த்தைக் களம் இறக்கியது, யுவராஜ் சிங்குக்கு முன்பாகத் தான் பேட்டிங்கில் இறங்கியது என தான் என்ன முடிவை எடுத்தாலும் அதை எதற்காக எடுத்தேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மை டோனியிடம் உண்டு. தலைவனுக்கு முதல் தகுதி நேர்மையாகவும், எடுக்கும் முடிவுகளில் வெளிப்படையாகவும் இருப்பதுதான். அது டோனியிடம் உண்டு!

எளிய மனநிலை!

கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்ககாரா, மொயின்கான் போன்று திறமையான விக்கெட் கீப்பர் - பேட்ஸ் மேன்கள் இந்திய அணிக்கு வாய்த்ததே இல்லை. எந்தக் கிரிக்கெட் பின்புலமும் இல்லாத, கிரிக்கெட் வாரியத்தில் லாபி செய்வதற்குக்கூட ஆள் இல்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த டோனிக்கு, அணியில் சட்டென இடம் கிடைத்த தற்கு இங்கு நிலவிய விக்கெட் கீப்பர் பற்றாக் குறையே காரணம். ''இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்ற எந்தப் பிரஷருடனும் நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது இல்லை. கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடினேன்'' என்பார் டோனி. ஆமாம்... டோனியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், கிரிக்கெட் மைதானத் துக்குள் இருக்கும்போது அவர் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திப்பதுதான். அடுத்த கேப்டன் நாம்தான், இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியாவின் சிறந்த கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் போன்ற சாதனைகளைப் பற்றி சிந்திப்பவர் அல்ல டோனி. 'அடுத்து என்ன நடக்கும்’ என்று யோசிக்காமல், 'இப்போது என்ன தேவை’ என்று சிந்தித்துச் செயல்படுவதுதான் வெற்றியைக் கொடுக்கும் என்பதை உணர்ந்தவர். அந்த மனநிலைக்கு அணியின் சக வீரர்களையும் பழக்கினார் டோனி. அந்த எளிய மனநிலை ஒரு தலைவனுக்கு வாய்ப்பது அரிது!  

அணியினருடனான கெமிஸ்ட்ரி!

2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் 21 டெஸ்ட், 33 ஒருநாள், 16 ட்வென்டி/ட்வென்டி சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் டோனி. ஆப்கானிஸ்தான் உட்பட 10 நாடுகளுக்கு எதிராக விளையாடி இருப்பதோடு, ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் மட்டும் 40 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இது தவிர, ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் எனக் கிட்டத்தட்ட 40 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆக மொத்தம் இரண்டு ஆண்டுகளில் 110 போட்டி களில் விளையாடி இருக்கிறார் டோனி. இதனால், அணியினரோடு அதிக நேரம் செலவிட டோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அணியில் உள்ள அத்தனை வீரர்களின் ப்ளஸ், மைனஸும் டோனிக்கு அத்துப்படி. அதனால், எந்த வீரரை எந்த நேரத்தில் களமிறக்கலாம், எந்தப் போட்டிக்கு எந்த சுழற்பந்து வீச்சாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது டோனியைத் தவிர,‌ மற்றவர்கள் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில நேரங்களில் டோனியின் முடிவு தவறாக அமைந்தாலும், 'ஒரு போட்டியில் தோற்றுவிட்டதால், என்னால் ரிஸ்க் எடுக்காமல் இருக்க முடியாது. ரிஸ்க் எடுத்தால்தான் நிறையக் கற்றுகொள்ள முடியும்’ என்பார் டோனி. ஒரு தலைவன், ரிஸ்க் எடுக்கப் பயப்படக் கூடாது. டோனி அப்படி ஒருவர்!

கூல் கேப்டன்!

2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பின் டோனியை கேப்டன் பொறுப்பேற்கச் சொன்னபோது, 'என்னால் எந்த மேஜிக்கையும் உடனடியாகச் செய்ய முடியாது. அணியில் பல மாற்றங்கள் அவசியம். புதிய வீரர்கள் செட் ஆக வேண்டும். அதனால் என்னிடம் உடனடி வெற்றிகளை எதிர் பார்க்காதீர்கள்!’ என்றார் டோனி. ஆனால், குறுகிய காலத்திலேயே 20/20 உலகக் கோப்பை சாம்பியன், கேப்டன் பொறுப்பேற்று ஆடிய முதல் உலகக் கோப்பையிலேயே சாம்பியன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நம்பர் ஒன் உச்சங்களைச் சாத்திய மாக்கினார் டோனி. மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் உலகின் நம்பர் ஒன்

தலைவன்!

அணிகளாக இருந்த போது, உலகின் மிகத் திறமைவாய்ந்த வீரர்கள் அந்த அணிகளில் இருந்தார்கள். ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் பெவன், மேத்யூ ஹேடன், மெக்ராத், ஷேன் வார்ன், கில்லெஸ்பி போன்ற பலம் வாய்ந்த படையை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணியாகத் திகழ்ந்தது. ஆனால், ஒரு நடுவாந்திரமான அணியை வைத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆட்டத்துக்கும் ஏற்ற வகையில் சரியான வீரர்களை அணிக்குள் விளையாடவிட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் டோனி. தோல்விகள், அவமானங்கள் தொடர்ந்தபோதும் அதற்குப் பலியாகிவிடாமல், எதிர்த்து நின்று போராடி அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் போர்க் குணம் டோனியிடம் உண்டு!

சிறந்த அணியே சிறந்த தலைவனை உருவாக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சிறந்த தலைவன் சிறந்த அணியை உருவாக்குகிறான் என்பதை டோனி நிரூபித்திருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism