Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##
இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹீரோயின்களுக்குத் திடீரென்று பாலாஜி மீது ஏக கிரேஸ் ஆகிவிட்டது. இந்த பாலாஜி... திருப்பதி பாலாஜி! ஒரே நாளில் ஸ்ரேயாவும் ரிச்சாவும் அடுத்தடுத்து திருமலையில் பாலாஜியைத் தரிசிக்க, சில நாட்களுக்குப் பின் தமன்னாவும் வந்து தரிசித்துச் சென்றிருக்கிறார். கோயிலுக்கு வெளியே கூட்டம் முண்டியடிக்கிறதாம்!

இன்பாக்ஸ்

 அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம். கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்த இடம். அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியான முடிவு இது. மனசுக்குப் பிடிக்காத, பயணம் செல்ல விரும்பாத நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு மூன்றாவது இடம். ஒரு தாய்ப் பிள்ளைகள்!

இன்பாக்ஸ்

 உலகின் மிகமிக அசுத்தமான, சுகாதாரமற்ற சூழல் காரணமாகக் குடிமக்களின் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் இந்தியாவுக்கு. முதலிடம் தென் ஆப்பிரிக்காவுக்கு. 90-களில் டயரியா, 2000-களில் சிக்குன்குனியா, டெங்கு என்று கொத்துக் கொத்தாக இறக்கிறார்களாம் இந்தியாவில். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இந்த முடிவுகளை அலசிவிட்டு, ''உலகிலேயே அழுக்கான நகரங்கள்கொண்ட நாடுகள் என்று போட்டிவைத்து நோபல் பரிசு கொடுத் தால், அதனை நம் நாடு உடனடியாகக் கைப்பற்றிவிடும்!'' என்று துன்பம் நேர்ந்திருக்கையில் யாழெடுத்து மீட்டியிருக்கிறார் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். உங்ககிட்ட ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா...

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 வரலாறு காணாத அளவுக்குப் பூமி மீது சூரியன் உமிழும் வெப்பம் அதிகரித்து இருப்பதாக அதிரவைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகம் முழுவதும் உள்ள 73 ஆராய்ச்சி நிலையங்கள் அளித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 11,300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வெப்ப அளவைக் காட்டிலும் இப்போது 80 சதவிகிதம் வெப்பம் கூடியிருக்கிறதாம். அதான் குளோபல் வார்மிங் பாஸ்!

இன்பாக்ஸ்

இந்த வாரம்... அனுஷ்காவுக்குப் பரபரப்பு வாரம். முதலில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று வதந்தி கிளம்ப, அதைச் சமாளித்து அடக்குவதற்குள் பெரும்பாடுபட்டுப்போனார் அனுஷ். அந்தப் பரபரப்பில் இருந்து மீள்வதற்குள், அதீதக் கவர்ச்சி காட்டி நடிக்கிறார் என்று அவர் மீது வழக்குப் பதிந்திருக்கிறார்களாம். சினிமால இதெல்லாம் சாதாரணமப்பா!

இன்பாக்ஸ்

 அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியர் தங்கள் மகள் ஆராத்யாவுக்காக 54 கோடி ரூபாயில் துபாயில் ஒரு பங்களா வாங்கியிருப்பதாகக் கிளம்பிய செய்திகள் அபிஷேக் பச்சனைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. ''ஆராத்யாவுக்கு இப்போது ஒரு வயதுதான் ஆகிறது. அவளை வைத்து மீடியாக்கள் விளம்பரப்படுத்துவது நல்லதல்ல. அந்தச் செய்திகள் எல்லாம் சுத்தப் பொய். நாங்கள் துபாய்க்கு எல்லாம் செல்லவில்லை. மும்பையில்தான் இருக்கிறோம்!'' எனப் பொரிந்து தள்ளிவிட்டார். கூல் டாடி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ''பவர் ஸ்டார் மாதிரி ஒரு நடிகரை, சிறந்த மனிதரை நான் பார்த்தது இல்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற மாதிரி, படங்களைக் கொடுப்பதில் அவரை யாரும் அடிச்சுக்க முடியாது!'' என வார்த்தைக்கு வார்த்தை பவர் ஸ்டார் புராணம் பாடுகிறார் சமந்தா. 'ஐயையோ... என்ன ஆச்சு இந்தப் பொண்ணுக்கு?’ என்று பதற வேண்டாம். சமந்தா பாராட்டியது டோலிவுட் 'பவர் ஸ்டார்’ பவன் கல்யாணை. அவர் அங்கே டாப் ஹீரோப்பா!

இன்பாக்ஸ்

  வெனிசுலா நாட்டின் பெட்ரோலிய வளத்தை தேசியமயமாக்கியது, ஒருவரிடமே இருந்த அதிக நிலங்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தது, ஆடம்பரம் தவிர்த்து எளிய வாழ்க்கை வாழ்ந்தது... என சமகாலத்தில் கம்யூனிஸ்ட்களின் உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இளமைக் காலம் முதல் 58 வயது வரை சமாளித்தவரால், புற்று நோயை வென்றெடுக்க முடியவில்லை. புற்றுடனான இரண்டு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின், கடந்த வாரம் இறந்திருக்கிறார். 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு சாவேஸின் உடலை வெனிசுலா ராணுவ அருங்காட்சியகத்தில் பதப்படுத்திவைக்க முடிவு எடுத்திருக்கிறது வெனிசுலா அரசாங்கம். சல்யூட் ஹ்யூகோ!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 நீண்ட தேடலுக்குப் பின் அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவரான சுலைமான் அபுகெய்த்தை உயிருடன் பிடித்துள்ளது அமெரிக்கா. அதைவிட ஆச்சர்யம், இந்தச் செய்தியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உலகுக்கு அறிவித்திருப்பதுதான். அல்கொய்தாவின் பி.ஆர்.ஓ., பின்லேடனின் மருமகன் போன்ற சிறப்புத் தகுதிகள்கொண்ட சுலைமான் அபுகெய்த்தை ஜோர்டானில் வைத்து கைதுசெய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் முதல்முறையாக விசாரணைக்காக ஆஜர் செய்யப்படவிருக்கும் அல்கொய்தா தலைவராக சுலைமான் இருப்பார். என்ன பண்ணுவீங்கன்னு தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism