Published:Updated:

முதலாம் பிரான்சிஸ் எதிர்கொள்ளும் சவால்!

டி.அருள் எழிலன்

முதலாம் பிரான்சிஸ் எதிர்கொள்ளும் சவால்!

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

ன்னுடைய பிரதிநிதியாக கடவுள் வானுலகில் இருப்பதுபோல, அவருடைய பிரதிநிதியாக நான் பூமியில் நியமிக்கப்பட்டு இருக்கிறேன்!'' - போப்பாகப் பதவியேற்ற கையோடு ஜார்ஜ் மரியோ பெர் காக்ளியோ ட்வீட்டியது இது! 

இதற்கு முன்னர் பதவியில் இருந்த போப் பதினாறாம் பெனடிக்ட் முதுமை காரணமாகப் பதவி விலகுவதாக அறிவித்தாலும், அவருடைய ராஜினாமாவுக்குப் பின்னால் பலத்த சர்ச்சைகளும் சந்தேகங்களும் இல்லா மல் இல்லை. இந்நிலையில், உலகின் போக்குகளுக்கு அசைந்து கொடுப்பவராகவும், கத்தோலிக்க மாண்புகளை அதன் உன்னதம் குலையாமல் காப்பவராகவும் இருக்கும் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்ற குரல்களுக்கு மத்தியில், வாட்டிகனின் புதிய போப்பாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் மட்டுமே அதிகாரம் மிக்க போப் பதவியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில்,  முதன்முதலாக மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் இடம் பெறும் ஏழை நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர் போப்பாகத்  தேர்வுசெய்யப்பட்டிருப்பது, உலக கிறிஸ்துவர்களிடையே ஆச்சர்யம் விதைத்திருக்கிறது. ஐரோப்பியர்களை வெறுக்கும்  கால் பந்தாட்ட வீரர் மரடோனா, ''நான் அடுத்த முறை இத்தாலி செல்லும்போது புதிய போப்பைச் சந்திப்பேன்'' என்று உருகும் அளவுக்கு அமெரிக்க எதிர்ப்பாளர்களான லத்தீன் அமெரிக்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது புதிய போப் நியமனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலாம் பிரான்சிஸ் எதிர்கொள்ளும் சவால்!

1936-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ 1969-ல் ஒரு பங்குக் குருவாகப் பதவிஏற்றார். பின்னர், பேராயராக உயர்ந்து 2001-ல் கர்தினால் ஆனவர் இப்போது போப் பிரான்சிஸ் ஆகியிருக்கிறார். ஒரு இயேசு சபை பாதிரியாராகத் தன் வாழ்வை அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்சில் துவங்கிய ஜார்ஜ் மரியோ, அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகியவர், எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவர் மீதும் இயேசு சபைப் பாதிரியார்கள் இருவரைக் கடத்தினார் என்ற புகார் கூறப்பட்டு, பின்னர் அது எடுபடாமல் போனதெல்லாம் தனிக் கதை.

ஜார்ஜ் மரியோ ஒரு பங்குக் குருவாக வாழ்வைத் துவங்கியது முதல் இப்போது போப்பாக உயர்ந்தது வரை நவீனத் தொழில்நுட்பத்தைத் தேவாலயத்துக்குள் புகுத்தியவர். ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் லத்தீன், ஸ்பானிஷ், ஜெர்மானிய மொழியில் சகஜமாக உரையாடும் ஜார்ஜ் மரியோ தலைமை ஏற்றிருப்பது பழமையையும் பாரம்பரியத்தையும் மிக இறுக்கமாகப் பேணும் கத்தோலிக்கத் தலைமை பீடத்துக்கு.

முற்போக்கான பாதிரியார்களால் லத்தீன் அமெரிக்காவில் முன்மொழியப்பட்டதுதான் 'விடுதலை இறையியல்’ என்னும் கோட்பாடு. 'வெள்ளை இயேசுவை வெளியேற்றிவிட்டு கறுப்பு இயேசுவை வரவேற்போம்’ என்றும், 'இயேசுவை தேவாலயத்தில் இருந்து மீட்டு, அடித்தட்டு மக்களிடம் கொண்டுசேர்ப்போம்’ என்பதும்தான் அந்தக் கோட்பாடுகளின் அடிப் படை. பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். கத்தோலிக்கப் பெண் துறவிகளுக்கும் ஆண் பாதிரியார்களுக்குரிய சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கையாளர்களைக் கத்தோலிக்கத் தலைமை அங்கீகரிக்க வேண்டும் என்பதெல்லாம் வாட்டிகனை நோக்கி எழுப்பப்படும் பல்வேறு கோரிக்கைகள்.  

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த ஜார்ஜ் மரியோ, முதலாம் பிரான்சிஸாக அந்தக் கோரிக்கைகளை எப்படி எதிர்கொள்வார் என்பது இப்போது உலக கிறிஸ்துவர்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism