Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##
இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரேஷ் ரெய்னாவுக்கும் அனுஷ்காவுக்கும் சம்திங் சம்திங் (பதற வேண்டாம்... இது இந்தி அனுஷ்கா ஷர்மா!) என்று ஒரு வருடமாக உலவிவந்த கிசுகிசு இப்போது உறுதியாகி இருக்கிறது. ''நான் நிறைய இந்திப் படங்கள் பார்ப்பேன். எனக்கு அனுஷ்காவின் நடிப்பு பிடிக்கும். அவர் எனக்கு நல்ல தோழி. எனது வீட்டில் திருமணம்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்று சுரேஷ் ரெய்னா பூடகமாகப் பேட்டி கொடுக்க, வெட்க ரியாக்ஷன் மட்டும் காட்டுகிறார் அனுஷ்கா. இந்த நிலையில், இந்தியாவை மையமாகக்கொண்டு தன் அடுத்த படத்தைத் தொடங்கஇருக்கும் 'ஜுராஸிக் பார்க்’ இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அந்தப் படத்தில் நடிக்க அனுஷ்காவை டிக் அடித்திருக்கிறார். டபுள் கங்கிராட்ஸ்!

இன்பாக்ஸ்

அமெரிக்க உயர் அதிகாரிகளும் ஹாலிவுட் பிரபலங்களும் இப்போது நிஜமாகவே பயந்துபோய்க் கிடக்கிறார்கள். காரணம், தீவிரவாதிகள் அல்ல... கம்ப்யூட்டர் ஹேக்கர்கள்! இணையத்தில் உலவும் சமயம் பெர்சனல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் அனுப்பி வயது, தொலைபேசி எண், வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் போன்ற விவரங்களைக் கடத்தி, பொதுத்தளத்தில் வெளியிட்டால் கிலி பிடிக்கத்தானே செய்யும்? ஹிலாரி கிளின்டன், பிரிட்னி ஸ்பியர்ஸ், நடிகைகள் கிம் காதர்ஷியன், பாரிஸ் ஹில்டன், ராணுவ உயரதிகாரிகள் என வரிசை யாகக் குறிவைத்து, தகவல்களைத் திருடி வெளியிட்டது ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் எனத் தெரியவர, உச்சகட்ட உதறலுடன் விசாரணையில் இறங்கியிருக்கிறது எஃப்.பி.ஐ. இன்டர்நெட் ரவுடீஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் மிடில்டன் கர்ப்பமாக இருப்பது உலகறிந்த உண்மை. இப்போது மிடில்டன் ஜூலை மாதம் பிரசவிக்கவிருப்பது பெண் குழந்தை என்ற செய்தி அடுத்த ஸ்கூப். இந்தத் தகவலை வாய் தவறி உளறியிருப்பது... கேத் மிடில்டனேதான். மிடில்டன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அவருக்குக் கரடி பொம்மையைப் பரிசளித்துள்ளார் ரசிகர் ஒருவர். அதனைப் பெற்றுக்கொண்ட மிடில்டன், விரைவில் அந்தப் பொம்மையைத் தன் மகளுக்குத் தரப்போவதாகச் சொல்ல, 'அட... பெண் குழந்தை என்பது கன்ஃபர்மா?’ என்று அந்த இடத்திலேயே மிடில்டனிடம் கேட்ட தற்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்திருக்கிறார். ஒரு ராணி உருவாகிறாள்!

இன்பாக்ஸ்

இந்தியா முழுக்கப் பணியாற்றும் 6,217 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 1,057 பேர் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட யோசிக்கிறார்களாம். அரசு இயந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 2010-ல் 198 அதிகாரிகளும் 2011-ல் 107 அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. அந்த எண்ணிக்கைதான் 2012-ல் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 பேர். மடியில் கனம்?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ''பெண்கள், உலகில் எவற்றுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்தவர்கள். ஆனால், பரந்த மனம் இல்லாதவர்கள். பெண்களின் வளர்ச்சி மேல் பொறாமை கொண்டவர்கள் அவர்களைப் பின்னுக்கு இழுக்கிறார்கள். அதையும் தாண்டி பெண்களால் சாதிக்க முடியும். ஒரு பெண்ணாக என்னால் எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியும். சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருக்க முடியும்!'' என்று சொல்லியிருப்பது யாராக இருக்கும். நம்புங்கள்... அது நயன்தாரா. அட!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ''எனது இடத்தை வேறொரு ஹீரோயின் வந்து நிரப்புவார் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவே இல்லை. என்னைவிடச் சிறந்த ஹீரோயின் என்று யாரையுமே என்னால் சொல்ல முடியவில்லை!'' என ஸ்டேட்மென்ட் விடுத்திருக்கிறார் கஜோல். ''எனக்கு அயிட்டம் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது. அப்படியரு பாடலுக்கு நான் ஆடத் தயார்!'' என்றும் அறிவித்திருக்கிறார். அம்மணிக்கு வயசு 38.

இன்பாக்ஸ்

ஆஸ்கர் விருது வென்ற கையோடு டி.வி. நாடகம் இயக்கச் செல்வார்களா யாரேனும்? ஆனால், சென்றிருக்கிறார் இயக்குநர் ஆங் லீ. தான் இயக்கிய 'லைஃப் ஆஃப் பை’ படம் நான்கு ஆஸ்கர் விருதுகளைக் குவித்த பிறகு, அமெரிக்கக் குடும்பம் ஒன்றைப் பற்றிய டி.வி. நாடகத்தை இயக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார் லீ. புலி பதுங்கிப் பின் பாயும்!

இன்பாக்ஸ்

வீடு விற்பனையின்போது விதிக்கப்படும் வரியைத் தவிர்க்க கணவன்-மனைவி தங்களுக் குள் விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்துகொள்கிறார்களாம் சீனாவில். அங்கு வீடு விற்பதற்கான வரிகளை வசூலிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக் கின்றன. தனி நபராக இருந்தால் வரி விலக்கு உண்டு. இதனால், குழந்தைகள் பெற்ற வயதான தம்பதிகள்கூட வரிவிலக்குச் சலுகையை அனுபவிக்க, விவாகரத்து செய்து வீட்டை விற்று பின் மீண்டும் இணைந்துகொள்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் 53 ஜோடிகளுக்கு விவாகரத்து வழங்கி சாதனை படைத்துள்ளது ஒரு திருமண அலுவலகம். விவாகரத்து பண்றதுக்கு வரி போடுங்க ஆபீஸர்ஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஒன்றில் சுறா மீன்களிடம் இருந்து குழந்தைகளை ஒருவர் காப்பாற்றும் வீடியோ இப்போது யூடியூப் டிரெண்ட். இங்கிலாந் தைச் சேர்ந்த பால் மார்ஷல்சீ தனது மனைவியுடன் விடுமுறைக்கு ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் 'சன்பாத்’ எடுத்துக்கொண்டு இருந்தபோது, ஆறடி நீளமுள்ள சுறா மீன் ஒன்று குழந்தைகளைத் தாக்க முயற் சித்துள்ளது. உடனே, சுறா மீனின் வாலைப் பிடித்து இழுத்துப்போட்டு, குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார் மார்ஷல்சீ. இதனால் உலகம் முழுக்க மார்ஷல்சீக்குப் பாராட்டு கள் குவிகின்றன. ஆனால், மார்ஷல்சீ பணிபுரிந்த நிறுவனமோ அவரை அதிரடியாக வேலையைவிட்டு நீக்கிஇருக்கிறது. 'மருத்துவ விடுப்பில் உல்லாசச் சுற்றுலா சென்ற காரணத்துக்காக உங்களைப் பணி நீக்கம் செய்கிறோம்!’ என்பது நிறுவனம் சொன்ன காரணம். இந்த வயதில் எப்படி வேறு வேலை தேடுவது எனப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் மார்ஷல்சீ. காரணம், அவரது வயது 62. சுறா உங்களைத் தாக்கிருச்சே!

இன்பாக்ஸ்

ஷேவாக்குக்கு மாற்று அவரது டெல்லி மண்ணிலிருந்தே முளைத்திருக்கிறது. அறிமுகமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டிலேயே அதிரடி சாதனை அடித்திருக்கும் ஷிகார் தவானும் டெல்லிவாலாதான். 28 வயதான ஷிகார் தவான் 2010-ம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானவர். ஆனால், சோபிக்கவில்லை. இப்போது டெஸ்ட் போட்டியிலேயே அதிரடியாக அசத்தியிருக்கும் தவானுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. உஷார் ஷேவாக்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'சச்சினுக்கு ஏன் ராஜ்ய சபா எம்.பி. பதவி?’ என்பது நாடாளுமன்றத்தின் சலசலப்பு. அரசின் நியமனத்தில் ராஜ்யசபா எம்.பி-க்கள் ஆக்கப்பட்ட சச்சினும் நடிகை ரேகாவும் இந்த பட்ஜெட் தொடரில் ஒரு நாள்கூட சபைக்கு வரவில்லை. சச்சின் வராததன் காரணம், ஆஸ்திரேலியா வுடனான கிரிக்கெட் தொடர். சபையில் இந்தப் பிரச்னையை எழுப்பிய சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால், ''அவர்கள் இருவரும் சபைக்கு வருவதே இல்லை. அவர்களுக்கு நீங்கள் ஏன் நிரந்தர விடுமுறை அளித்து மகிழ்விக்கக் கூடாது?'' எனக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். வந்தவங்கள்லாம் என்ன சாதிச்சீங்கனு ரேகா  கேட்டுரப்போறாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism