Published:Updated:

உலகம் சுற்றிய பாதங்கள்!

எஸ்.கலீல் ராஜா

உலகம் சுற்றிய பாதங்கள்!

எஸ்.கலீல் ராஜா

Published:Updated:
##~##

டாம் ராபின்சன் - வெரிட்டி கேர்பெர்ரி மிகவும் வித்தியாசமான தம்பதி. எட்டு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டின் கடற்கரை ஒன்றில் கேர்பெர்ரி அருகில் அமர்ந்திருந்த டாம், நீண்டிருந்த இருவரின் கால்களை மட்டும் சும்மாச்சுக்கும் படம் பிடித்திருக்கிறார். ரிசல்ட் பார்த்தவர்கள் 'அட! இது நல்லா இருக்கே’ என்று செல்லும் இடம் எங்கும் தங்கள் கால்களை மட்டும் நீட்டிவைத்துப் படம் பிடிக்கத் துவங்கிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் அதீத ஆர்வக்கோளாறாகி, வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று வித்தியாசமான லொகேஷன்களில் 'லெக் பீஸ்’ படங்களை க்ளிக்கத் துவங்கிவிட்டார்கள். ஆறு மாதம் வேலை... அடுத்த ஆறு மாதம் சுற்றுலா என்று சுற்றியடித்ததில், எட்டே வருடங்களில் இந்தியா உட்பட 31 நாடுகளில் 90 நகரங்களைச் சுற்றி வந்து விதவிதமான காலணி அணிந்து க்ளிக்கித் தள்ளிவிட்டார்கள். இடையில் கேர்பெர்ரிக்குப் பெண் குழந்தை பிறக்க, இப்போது அதுவும் போட்டோக்களில் கால் நீட்ட ஆரம்பித்துவிட்டது.

உலகம் சுற்றிய பாதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லா பயணத்துக்கும் ஓர் எல்லை உண்டே! இவர்களுக்கு? ''எங்களால் நடக்க முடிகிற வரை  நாங்கள் எங்கள் கால்களை போட்டோ எடுப்போம்!'' என்று சிரிக்கிறார்கள் டாம் - கேர்பெர்ரி தம்பதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism