Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

##~##

விகடன் வாசகர்களுக்கு நம்மாழ்வாரின் பாசமும் பிரியமுமான வணக்கங்க...

நம்மளுடைய முக்கியமான தொழிலா உழவு இருக்கு. இந்த உழவுத் தொழிலைச் செய்யக்கூடிய உழவன் எப்படி இருக்கணும்னு திருவள்ளுவர் சொன்னாரோ, அந்த மாதிரி அவங்கள்லாம் இப்போ இல்லை. அவங்க அப்படி எல்லாம் இல்லாததுனாலதான் உழவுத் தொழில் மோசமாப் போயிடுச்சு. இதுக்கு என்னதான் தீர்வு? அதைப் பத்திக் கொஞ்சம் சிந்திப்போமா?

இன்னிக்கு தமிழ்நாடு முழுக்க 31 மாவட்டங்கள்ல வறட்சி இருக்கு. வறட்சிங்கிறது என்னன்னா, தண்ணி இல்லைங்கிறது. நம்ம உடம்புலயே 80 விழுக்காடு தண்ணிதான். ஆக, தண்ணி மட்டும் இல்லன்னா, நமக்கு வாழ்க்கைனு ஒண்ணு இல்ல. அப்படிப்பட்ட தண்ணியே அருகிட்டு வருதுன்னா, அது எவ்ளோ பெரிய பிரச்னை? அந்தத் தண்ணீரைப் பத்தி திருவள்ளுவர் சொன்ன விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்.

நான் என்கிட்ட இருக்கிறதை மத்தவங்ககூட பரிமாறிக்குவேன். அப்படிப் பரிமாறிக்கிறதுனால எனக்குத் துன்பம் வரும்னா, அதையும் சந்தோஷமாத் தாங்கிக்குவேன். அதைத்தான் ஒப்புரவுனு சொல்றோம். அந்த ஒப்புரவுக்கு ஈடும் இணையும் கிடையாது. எப்படி? நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொதுவான விஷயத்தோட அதை விளக்கிச் சொல்றேன்.

இன்று... ஒன்று... நன்று!

இன்னைக்கு உலகத்துல நெதமும் கிட்டத்தட்ட 84 கோடிப் பேரு பசியோடதான் படுக்கைக்குப் போறாங்க. கிட்டத்தட்ட 300 கோடிப் பேரு சுகாதார மான குடிதண்ணி இல்லாம இருக்காங்க. பாதி சனத்தொகை அவங்க பிழைப்புக்கான ஆதாரமே இல்லாம இருக்காங்க. இது இன்னைக்கு நெலவரம் மட்டுமில்லை. ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி இருந்தே இருக்கு. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? நாஞ் சொல்லுதேன்...

இந்தச் செல்வம் இருக்கே, அது நிலையானது இல்லை. அது வரும்போது கொஞ்சங்கொஞ்சமா வரும். ஆனா, போகும்போது மட்டும் குபுக்னு போய்டும். அப்படி மொத்தமாப் போகாம இருக்க நாம என்ன பண்ணணும்? இதுபத்தி திருக்குறள் சொன்னதை நான் உங்ககிட்ட சொல்றேன்.

யாராலும் குத்தஞ் சொல்ல முடியாத ஒரு மனிதர் உண்டுன்னா, அது புத்தர்தான். ஏன்னா, துன்பத் துக்குக் காரணமான ஆசையை அவர் துறந்தாரு. ஆனா, ஆசையை எப்படித் துறக்குறது? எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். கொஞ்சம் காது கொடுக்கீகளா?

21.3.13-ல இருந்து 27.3.13 வரை 044 - 66802911 *என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். நிறைய அழகாவும் கொஞ்சம் ஆதங்கமாவும் பேசிக்கலாம்!

அன்புடன்,

நம்மாழ்வார்.

*அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு