Published:Updated:

ஜெயிக்கப்போவது யாரு?

சார்லஸ்

ஜெயிக்கப்போவது யாரு?

சார்லஸ்

Published:Updated:
##~##

லங்கை வீரர்கள் சென்னையில் விளையாடக் கூடாது, விவசாயிகளுக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட உதவித்தொகை கொடுத்துவிட்டு, மும்பை அணி உரிமையாளர்கள் போட்டியை நடத்தலாம் என்கிற சிவசேனாவின் மிரட்டல் என ஐ.பி.எல். சீசன்-6 துவங்குவதற்கு முன்னரே பரபரக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் பல அதிரடிகள் அரங்கேறும். இதற்கிடையில் ஐ.பி.எல். சீசன்-6 கோப்பை வெல்லப்போவது யார்? டாப் அணிகளின் ஸ்கேன் ரிப்போர்ட் இங்கே!

 சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த முறை இறுதிப் போட்டியில் ரன்னர்-அப்தான் ஆக முடிந்ததென்றாலும், எப்போதும் ஐ.பி.எல். போட்டிகளின் நம்பர் ஒன் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான சென்னை அணியில் இந்த முறை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானேஸ், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான கிரிஸ் மாரிஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். பவுலிங்கில் கொஞ்சம் வீக் என்பதால்தான் இத்தனை வேகப் பந்து வீச்சாளர்களை அணிக்குள் இறக்கியிருக்கிறது சென்னை அணி நிர்வாகம். இவர்களைத் தவிர, ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் இருப்பதால், சூப்பர் ஸ்ட்ராங் அணி யாக இருக்கிறது சென்னை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், ஒரு போட்டியில் நான்கு வெளிநாட்டு வீரர்களைத்தான் களம் இறக்க முடியும் என்பதால், பந்து வீச்சாளர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து விளையாடினால், சென்னை அணிக்கு வெற்றி நிச்சயம்!

ஜெயிக்கப்போவது யாரு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

முதல் நான்கு ஐ.பி.எல். போட்டிகளிலுமே மரண அடிவாங்கிய ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி, ஆச்சர்யப்படவைத்தது. அந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், கௌதம் கம்பீரின் தலைமை. தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், நியூஸிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், இங்கிலாந்தின் இயான் மோர்கன், வங்காள தேசத்தின் ஷகிப் அல் ஹசன் என உலகின் மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டிருக்கிறது கொல்கத்தா. பவுலிங்கைப் பொறுத்தவரை ஜேம்ஸ் பேட்டின்சன், பிரட் லீ, சுனில் நரேன், ரையன் மெக்லாரன் போன்ற சர்வதேச வீரர்கள் கொல்கத்தா அணியில் இருக்கிறார்கள். ஆனால், பலவீனமான வியூகம் வகுப்பது, கொல்கத்தா அணியின் ஸ்பெஷல். இந்த முறை கோப்பையை வெல்லும் வியூகம் பலமாக இருந்தால் மட்டுமே, சாம்பியன் கோப்பையைத் தக்கவைக்க முடியும்!

மும்பை இந்தியன்ஸ்!

சச்சின் கேப்டன் பொறுப்பேற்க மறுத்ததால், ரிக்கி பான்டிங் தலைமையில் இந்த முறை களம் இறங்குகிறது மும்பை இந்தியன்ஸ். பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் யாருமே ஏலம் கேட்காத ரிக்கி பான்டிங்கை கேப்டன் பொறுப்புக்கென ஏலத்தில் எடுத்திருப்பார்கள்போல. சச்சின், பான்டிங், ரோஹித் ஷர்மா, அம்பாதி ராயுடு, கீரன் பொலார்டு, டேவியின் ஸ்மித், ஃபிலிப் ஹுக்ஸ் என பேட்டிங்கில் பலமான அணியாக இருக்கிறது மும்பை. 5.3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல், இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், 20/20 போட்டிகளில் பிரகாசிப்பார் என்பது மும்பையின் நம்பிக்கை. முந்தைய தொடர்களில் பேட்டிங் அல்லது பவுலிங் என ஏதேனும் ஒரு துறையில் மட்டுமே ஜொலிக்கும் மும்பை இந்தியன்ஸ். ஒரே போட்டியில் இரண்டு துறைகளிலுமே அடித்துப் பட்டையைக் கிளப்பினால் மட்டுமே, மும்பை இறுதிப் போட்டிக்கேனும் முன்னேற முடியும்!  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

விராட் கோஹ்லி தலைமையில் இந்த முறை களம் இறங்குகிறது பெங்களூர் அணி. ஹென்ரிக்வஸ், கிரிஸ் கெயில், டேனியல் வெட்டோரி, ரவி ராம்பால் என ஆல் ரவுண்டர்களை அதிகம்கொண்ட அணி பெங்களூர்தான். ஆனால், தீர்க்கமான திட்டம் மற்றும் சொதப்பாத செயல் பாடு ஆகிய குணங்கள் இந்த அணியிடம் இதற்கு முன் இருந்தது இல்லை. ஒருவேளை, கோஹ்லி அந்தக் குறையைச் சரிசெய்தால், சாம்பியன் பட்டத்துடன் 10 கோடி ரூபாயையும் தட்டலாம் பெங்களூர் அணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism