Published:Updated:

தாயுமாணவர்கள்

நா.முத்துக்குமார், படம்: உசேன்

தாயுமாணவர்கள்

நா.முத்துக்குமார், படம்: உசேன்

Published:Updated:
##~##

ரு காலைத் தாங்கிப்பிடித்து
மறு காலின் உதவியுடன்
விந்தி விந்தி நடந்து
உண்ணாவிரதப் பந்தலுக்கு
வந்தமர்ந்த தகப்பன்
மயங்கிக்கிடந்த
மகனிடம் சொன்னான்;
''இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல
என் மூட்டெலும்பை உடைச்சாங்க.
அப்ப வெதைச்சது...
இப்ப மொளைக்குது!''

தெருமுனைத் தேநீர்க்கடையில்
நாளிதழில் முகம் மறைந்த
யாரோ ஒருவரின் குரல்;
''பசங்க தெளிவாத்தான் இருக்காங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாகன நெரிசலுக்குள்
தனக்கான வழியைத்
தேர்ந்தெடுத்து ஓட்டியபடியே
புல்லரித்த கைகளைக் காட்டி
ஆட்டோ ஓட்டுனர் சொன்னார்;
''கடற்கரையில் போராட்டம் முடிஞ்சதும்
சுத்தப்படுத்துனாங்க பாருங்க...
அங்கதான் சார் ஒசந்துட்டாங்க!''

தாயுமாணவர்கள்

பூங்காவில் வாக்கிங் முடித்த
பஞ்சாபகேசன் சொன்னார்;
(ரிட்டையர்டு ஏதோ ஓர் அதிகாரி)
''அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி. ஸ்டூடன்ட்ஸ்கூட
ஸ்டிரைக் பண்றாங்களா?
ஐ கான்ட் பிலீவ் திஸ்!''

தொலைக்காட்சியில் செய்தி பார்த்து
மழலையுடன் மகன் சொன்னான்;
''பக்கத்து ஊருல
ஒரு அண்ணாவைக் கொன்னுட்டாங்களாம்
நானும் ஸ்டிரைக் பண்ணப்போறேன்!''

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
நான் சொன்னேன்;
''இந்தப் போராட்டத்தை நடத்துவது
மாணவர்கள் அல்ல...
இவர்களுடன்
மனிதநேயமும் கோபமும்
கொந்தளிக்கும் கண்களுடன்
மாணவிகளும் இருப்பதால்
இதை நடத்துவது;
'தாயுமாணவர்கள்’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism