Published:Updated:

ஃபேஸ்புக் கலாட்டா!

காமெடி குண்டர், ஓவியங்கள்: ஹரன்

ஃபேஸ்புக் கலாட்டா!

காமெடி குண்டர், ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

படத்தை க்ளிக் செய்யவும்

ஃபேஸ்புக் கலாட்டா!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அச்சச்சோ அவார்ட்ஸ்!

''திருச்சியில் காங்கிரஸாருடன் மோதியவர்கள் மாணவர்கள் இல்லை... சமூக விரோதிகள்!'' என்று கூறி அடாவடி செய்த கட்சி நிர்வாகிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஞானதேசிகனுக்கு 'உண்மையைச் சொல்லிட்டாரு உலகநாதன்’ விருது!

நான்கு வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பவும் கோர்ட்டில் ஆஜராகும்போது இரண்டாவது முறையாக ஷூ வீச்சுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு 'ஆயிரம் ஷூ வாங்கப்போகும் அபூர்வ சிந்தாமணி’ விருது!

''கூட்டணி ஆட்சி என்றால், பிரச்னை வரத்தான் செய்யும். இதற்கெல்லாம் அச்சப்படத் தேவையில்லை'' என்று விளக்கம் சொல்லும் மன்மோகன் சிங்குக்கு, 'சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு’ விருது!

''தி.மு.க. ஆட்சியிலே இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதை நாடகம் என்றால், அ.தி.மு.க. ஆட்சியிலே ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது கபட நாடகமா? ஓரங்க நாடகமா?'' என்று அப்பாவியாகக் கேள்வி கேட்கும் கருணாநிதிக்கு, 'ஒரு நடிகர் நாடகம் பார்க்கிறார்’ விருது!

ஃபேஸ்புக் கலாட்டா!

''தமிழகத்தில் தனித்து நிற்பதுதான் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் விருப்பம். இந்த முடிவினைக் கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்துவோம்!'' என்று கொக்கரிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, 'தனிமையிலே இனிமை காண முடியுமா’ விருது!

பாட்டு டெடிகேட் பண்றோம்!

மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தை மாணவர்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்ட ப.சிதம்பரத்துக்கு, 'சட்டை கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிடலாம், நெஞ்சு கிழிஞ்சிருக்கே எங்க முறையிடலாம்’ பாட்டை டெடிகேட் பண்றோம்!

கோயிந்து கொஸ்டீன்

''அண்டை மாநிலங்களில் மது விற்பனை தொடர்கையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டுவருவது சாத்தியம் இல்லை!'' என்று லாஜிக் பேசும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், அண்டை மாநிலங்களில் மின்சாரம் இருக்கும்போது, நமது மாநிலத்தில் மின்சாரம் இல்லாமல் போவதற்குச் சாத்தியப்படும்போது மதுவிலக்கு மட்டும் சாத்தியப்படாதுங்களா?

என்ன கொடுமை சார்

''தமிழக அரசிடம் மதுவிலக்கை எதிர்பார்க்க முடியாது. ஆனால், மக்கள் நலனில் அக்கறைகொண்ட பா.ம.க. 2016-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பின் பிறப்பிக்கும் முதல் உத்தரவே மதுவிலக்காகத்தான் இருக்கும்!''                 - ராமதாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism