Published:Updated:

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

க.நாகப்பன்

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

ரணத்தை வெல்வது சாத்தியமா? பாலாஜியின் விஷயத்தில் அது சாத்தியம் ஆகியிருக்கிறது. மரணத்தின் விளிம்புவரை சென்றவர், ஏழாவது நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்கிறார்.

29 வயது பாலாஜி ஒரு டான்ஸ் மாஸ்டர். தனக்கு நிகழ்ந்த 'மெடிக்கல் மிராக்கிள்’ பற்றி பாலாஜியே கூறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மரணத்தை ரொம்பப் பக்கத்துல பார்த்துட்டேங்க. அப்படியொரு விபத்துக்குப் பிறகு நான் உயிர் பிழைப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து மூணு முறை தென்னிந்தியாவுக்கான சிறந்த டான்ஸர் விருது வாங்கியிருக்கேன். ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்குறதுதான் என் பன்னிரண்டு வருஷக் கனவு. என் ஃப்ரெண்ட் ஜேம்ஸுடன் சேர்ந்து அதுக்கான வேலைகளில் பரபரப்பா இருந்தேன். டான்ஸ் ஸ்கூல் திறப்பு விழாவுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு  ஃப்ளெக்ஸ் போர்டை மாடியில் கட்டும் போது மேல இருந்த மின்கம்பியில் என் கைபட்டிருச்சு. 440 வோல்ட் மின்சாரம் தாக்கி என்னைத் தூக்கி வீசிருச்சு. அப்புறம் என்ன நடந்துச்சுனு எனக்கே தெரியலை!'' என்று பாலாஜி நிறுத்த... ஜேம்ஸ் தொடர்ந்தார்...

இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

''மின்சாரம் தாக்கி ரெண்டாவது மாடில இருந்து பாலாஜி கீழே விழுந்துட்டான். 15 நிமிஷத்துல மியாட் மருத்துவமனைக்குக் கொண்டுபோயிட்டோம். அப்போ பாலாஜிக்கு மூச்சு இல்லை, இதயத் துடிப்பும் இல்லை. டாக்டர்கள் மார்புக்கூட்டை அழுத்தி மின்அதிர்வு சிகிச்சை கொடுத்தும் 20 நிமிஷமா இதயம் துடிக்கலை. மூணாவது முறை மார்புக்கூட்டை அழுத்தும்போது இதயம் துடிச்சது. அப்பவும் பிழைச்சிடுவார்னு முழு நம்பிக்கை இல்லை. 'முயற்சி செய்வோம்’னு நம்பிக்கை கொடுத்தாங்க மருத்துவர்கள். வென்டிலேட்டர் மூலமா செயற்கை சுவாசம் கொடுத்து உடல் இயக்கங்கள் பாதிக்காமப் பார்த்துக்கிட்டாங்க. ஆனா, இதயம் துடிக்காம இருந்த 20 நிமிஷத்துல மூளைக்கு ரத்த ஓட்டம் இல்லாததால, மூளையின் இயக்கத்திலும் பாதிப்பு இருக்குனு மருத்துவர்கள் சொன்னப்போ, எங்களுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போயிருச்சு. ஆனா, விட்டுக்கொடுக்காமப் போராடினார்கள் மருத்துவர்கள். பாலாஜியின் உடல் வெப்பநிலையைக் குறைச்சு உறைநிலையில் வெச்சிருந்தாங்க. மேலும் பல சிகிச்சைகளுக்குப் பிறகு, ஏழாவது நாள் பாலாஜி கண் திறந்தான். செத்துப் பிழைச்சவன்... எமனைப் பார்த்துச் சிரிச்சவன்னு இப்போ அவனைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கோம்!'' என்று ஜேம்ஸ் நிறுத்த, பிரகாசமாகச் சிரிக்கிறார் பாலாஜி.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism