Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
இன்று... ஒன்று... நன்று!
##~##

விகடன் வாசகர்களுக்கு பழநிபாரதியின் வணக்கம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடை விடுமுறை துவங்கிவிட்டது, சுற்றுலாத் தலங்கள் நிரம்பிவழிகின்றன. சந்தோஷம்! ஆனால், பூக்களைப் பார்த்து ரசிக்கக்கூட நமக்கு ஒரு கோடை விடுமுறை தேவைப்படுகிறது என்பதுதான் வருத்தம். நாம் பார்க்கும், ரசிக்கும் பூக்களிடம் மனிதனுக்கான நற்பண்புகள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. அவை என்ன? பூக்களோடு கொஞ்சம் வாசம் செய்யலாமா?

அழகான பெண்ணை அணைத்துக்கொள்ள விரும்பும் இந்தச் சமூகம், அறிவான பெண்ணை அணைத்துவிட முயல்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கான வரவேற்பும் அருந்ததி ராய்க்கான புறக்கணிப்பும் இதனால் தான். அந்த வேறுபாட்டின் வேர் பற்றிக் கொஞ்சம் பேசலாமா..?

'இசைக்கும் விருதுக்கும் என்னப்பா சம்பந்தம்?’ என்கிறார் இசைஞானி இளையராஜா. 'என்னைப் பற்றித் தெரிந்தவர்கள்தான் எனக்கு விருது தர வேண்டும்!’ என்கிறார் வாலி. இசைக்கும் விருதுக்கும் உள்ள தொடர்புபற்றி நான் நேரில் கண்ட, கேட்ட விஷயங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா?

இன்று... ஒன்று... நன்று!

சூர்யா-ஜோதிகாவுக்கு நான் எழுதிய பாடல் ஒன்றை சுனாமி அலைகள் மாற்றி எழுதவைத்தன. கண்ணீர்க் கதை அது. வெகு நாட்கள் ஆகியும் இன்னும் என்னுள் ததும்பிக்கொண்டிருக்கிறது. அந்தக் கதையை உங்களிடம் சொல்ல ஆசை.

திருநங்கைகள் துக்கத்துக்கும் துயரத்துக்கும் பிறந்த கண்ணீர்த் துளிகள். பிறப்பிலேயே ஏமாற்றப்பட்டவர்கள். வட மாநிலங்களில் சிலர் அவர்களை அதிர்ஷ்டம் என்கிறார்கள். நாமோ ஏளனம் செய்கிறோம். இரண்டும் தவறுதானே? அவர்களைப் பார்த்துச் சிரிப்பும் கேலியுமாகக் கடந்துபோகிற நிமிடத்தில் கொஞ்சம் நின்று நிதானித்து யோசித்துப் பார்க்கலாமே!

இன்றைய சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கிறது என்ற கருத்து எட்டுத் திசைகளிலும் ஓங்கி ஒலிக்கிறது. என்னைப் பொறுத்தவரை தெருவில் ஒரு பெண்ணை முத்தமிடுவது ஆபாசம் என்றால், அவளைத் தெருவில் வைத்து அடிப்பதும் ஆபாசம்தான். பெண்கள், ஆபாசம் குறித்தெல்லாம் இப்போது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்திருக்கும் சூழலில் அவற்றைப் பற்றிக் கொஞ்சம் மனம் திறந்து பேசலாமா?  

நம் பிள்ளைகள் எல்லோரும் இன்ஜினீயர்களாகப் போகிறார்கள். நாம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து அரிசி வாங்கப்போகிறோம். இன்ஜினீயர், டாக்டர் மோகம் நம்மில் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. கூடிய சீக்கிரமே பொறியாளர்களும், மருத்துவர்களும் மட்டும்தான் நம் சமூகத்தில் இருக்கப்போகிறோம். அவர்கள் மட்டுமே நம் சமூகத்துக்குப் போதுமா? எங்கு தவறு... என்ன தீர்வு?

18.4.2013 முதல் 24.4.2013 வரை 044 - 66802911* என்ற எண்ணில் அழையுங்கள். கவிதை கலந்த கருத்துகள் பல பகிர்ந்துகொள்கிறேன்...

வாஞ்சையுடன்,

கவிஞர் பழநிபாரதி.

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism