Published:Updated:

நெகிழ்வு நிகழ்வு!

மானா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

நெகிழ்வு நிகழ்வு!

மானா, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

வ்வோர் ஆண்டும் 'இலக்கியச் சிந்தனை’ அமைப்பு அனைத்து தமிழ் இதழ்களிலும் வெளியான சிறுகதைகளை ஆய்வு செய்து, அதில் சிறந்த சிறுகதைக்கு விருது வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வெளி வந்த சிறுகதைகளைப் படித்து, பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் வண்ணதாசன். இந்த வருடம் முதல் பரிசு பெற்றிருப்பது தமிழருவி மணியன் விகடனில் எழுதிய 'ஒற்றைச் சிறகு’ என்ற சிறுகதை. கடந்த வாரம் நடைபெற்ற இதற்கான விழாவின் இன்னொரு சிறப்பு... விகடனில் வெளிவந்த கவிப்பேரரசுவின் 'மூன்றாம் உலகப் போர்’ சிறந்த நாவலுக்குரிய விருது பெற்றது.

விழாவில் 'மூன்றாம் உலகப் போர்’ புத்தக விற்பனை மூலமாகக் கிடைத்த வருவாயிலிருந்து, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால் தற்கொலை செய்துகொண்ட 11 விவசாயிகளின் மனைவிகள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாயை வைரமுத்து வழங்கினார். 11 பெண்மணிகள் கண்ணீர் மல்க மேடைக்கு வந்து, அந்தத் தொகையினைப் பெற்றுக்கொண்டதுதான் விழாவின் நெகிழ்வு நிகழ்வாக அமைந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெகிழ்வு நிகழ்வு!