Published:Updated:

இது இறுதி அல்ல!

டி.அருள்எழிலன்

##~##

லகின் ஏதோ ஒரு மூலையில் தினம்தினம் நூற்றுக்கணக்கில் குண்டுகள் வெடித்து ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அப்பாவி மனித உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு குண்டுவெடிப்பில் மூன்று பேர் இறந்தாலே உலகம் பதற்றமடைகிறது என்றால், அந்தக் குண்டு நிச்சயம் அமெரிக்காவில் வெடித்திருக்கிறது என்று பொருள்!

 1987 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர மக்களால் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை நடத்தப்படும் 'திங்கள் மாரத்தானின்’ முடிவு இந்த வருடம் துன்பியல் சம்பவமாக அமைந்துவிட்டது. மாரத்தான் முடிவில் அடுத்தடுத்து வெடித்த இரண்டு குக்கர் குண்டுகள் பாஸ்டன் மக்களின் சகஜ வாழ்வைச் சீர்குலைத்துவிட்டது. விழித்துக்கொண்ட அமெரிக்க எஃப்.பி.ஐ. போலீஸார் துரித

நடவடிக்கையில் இறங்கி தமேர்லான் சர்னயேவ் மற்றும் ஷோய்க்கார் சர்னயேவ் சகோதரர்களைக் குண்டுவெடிப்பின் சூத்ரதாரிகளாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

இது இறுதி அல்ல!

சகோதரர்களில் அண்ணன் தமேர்லான் சுட்டுக் கொல்லப்பட, தம்பி ஷோய்க்கார் பலத்த காயங்களுடன் நினைவற்ற நிலையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அண்ணன், தம்பி இருவரும் குடியிருந்த வீட்டினுள் ஒரு மினி வெடிகுண்டுக் கிடங்கு அளவுக்கு வெடிபொருட்கள் இருந்திருக்கின்றன. இதனாலேயே குடியிருப்புப் பகுதியில்இருந்து விலகிச் சென்று ஆளரவமற்ற சுற்றுப்புறத்தில் தமேர்லானைச் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றிருக்கிறது போலீஸ்.

சர்னயேவ் சகோதரர்கள், செஷன்யாவைச் சார்ந்தவர்கள். ரஷ்ய அரசாங்கத்தின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அகதித் தம்பதிக்குப் பிறந்தவர் கள். அகதியாக அமெரிக்கா வந்து 10 ஆண்டுகளாக வசிப்பவர்கள். 2,500 டாலர் உதவித்தொகையுடன் கல்வி பயின்ற இருவரும் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளும் கல்லூரி சென்றிருக் கிறார்கள்!

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டின் மீதும் அத்துமீறிப் படையெடுக்க திருவிவிலியத்தையே காரணமாகக் காட்டுகிறது என்று தந்தையிடம் அடிக்கடி சொல்வானாம் தமேர்லான். இளையவன் ஷோய்க்காரை ஒரு தேவதூதன் என்கிற தந்தை அன்சோர், 'அவன் இந்த விடுமுறையில் வீட்டுக்கு வருவான்!’ என நம்பிக்கொண்டிருந்தோம் என்கிறார் ரஷ்யாவில் இருந்தபடி.

இது இறுதி அல்ல!

அமெரிக்காவின் கிளப் கலாசாரத்தில் கலக் காமல் எவரோடும் சேராமல் தனித்தே வாழ்ந் திருக்கிறார்கள் சகோதரர்கள் இருவரும். தமேர் லான், 'எனக்கு அமெரிக்காவில் ஒரு நண்பன்கூட இல்லை. அமெரிக்கர்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை!’ என்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதிவைத்திருக்கிறான். இஸ்லாத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட இருவரையும் அடிப்படைவாத முஸ்லிம் குழுக் கள் பயன்படுத்திக்கொண்டனவா அல்லது  அமெரிக்கர்கள் மீதுகொண்ட வெறுப்பால் இணையத்தின் உதவியோடு குக்கர் குண்டுகளைத் தயாரித்தார்களா என்பதெல்லாம் இனி விசாரணை விவரங்கள் விளக்கும்!

அமெரிக்கா இதுவரை சிறியதும் பெரியதுமாக உலகெங்கும் நடத்திய போர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு செய்துள்ளது. போர் நடந்தால் உச்சம் தொடும் ஆயுத வணிகத்தில் ஆதாயம் அடையும் அமெரிக்க முதலாளிகளைப் போலல்ல அமெரிக்க மக்கள். அவர்கள் எப்போதும் தங்கள் நாடு பிற நாடுகள் மீது தொடுக்கும் போர்களுக்கு எதிராகப் போராடியே வந்துள்ளனர். ஆனால், பயங்கரவாதிகள் குறிவைப்பதோ எப்போதும் அந்த அப்பாவி அமெரிக்க மக்களைத்தான்!

அமெரிக்க ராணுவ வீரர்களால் உலகெங்கிலும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிகளும், பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகும் அமெரிக்கர்களும்... அமெரிக்க வெளியுற வுக் கொள்கையின் நேரடி விளைவு களே!  

இந்த பாஸ்டன் குண்டுவெடிப்பு அமெரிக்கர்களுக்கு தெளிவாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது, 'இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்பது இறுதி அல்ல!’