Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் அன்பு வணக்கங்கள்!  

##~##

டென்மார்க் நாட்டின் கோபன்ஹாகென் நகரில் 1908-ம் ஆண்டு பல பெண்கள் அமைப்புகள் நடத்திய போராட்டம், பேரணிதான் நாம் கொண்டாடும் பெண்கள் தினத்துக்குக் காரணம் என்று உங்களுக்குத் தெரியும்தானே? இந்த ஆண்டு பெண்கள் தினத்தை எல்லோரும் சந்தோஷமாகக் கடைப்பிடித்தீர்களா? எத்தனையோ பெண்கள் தினத்தைப் பார்த்துக் கடந்துவிட்ட நான், இந்த ஆண்டு சந்தோஷமாக இல்லை. காரணம், வினோதினி... வித்யா மரணம். கூடுதலாக ஒரே ஆண்டில் 12 பாலியல் வன்முறைகள் நம் தமிழ்நாட்டில். மேலும், அது இப்போது வழக்கத்தில் இருப்பதுபோலக் கொண்டாடப்பட வேண்டிய நாளும் அல்ல; ஏன் தெரியுமா? சந்தோஷமாக அந்த தினத்தைக் கடைப்பிடிப்பதற்கான தீர்வும் இருக்கிறது. எளிய தீர்வுதான். கேட்கிறீர்களா?

ஆங்கிலேயரை எதிர்த்தவர், சுதந்திரத்துக்காகத் தன் உயிரையும் விட்டவர் மாவீரன் பகத்சிங். இவரைப் பற்றி இதுதானே தெரியும் நமக்கெல்லாம். ஆனால், அதைவிடப் ஆச்சர்யப்படவைக்கும் பல தகவல்களை அறிந்து சிலிர்த்துப்போனேன். பகத்சிங் தூக்கிலிடப் படுவதற்கான கடைசி மணித் துளி

இன்று... ஒன்று... நன்று!

வரை லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்’ என்ற நூலைப் படித்துக்கொண்டேதான் இருந்தார். இதுபோல இன்னும் பல விஷயங்களைச் சொல்கிறேன். பகத்சிங்குக் காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கித் தெரிந்துகொள்வோமா?

நம்சட்டத்தை வடிவமைத்தவர் என்ற தகவல் மட்டும்தான்  அம்பேத்கர் பற்றி நம் பாடப் புத்தகங்கள் மூலம் நம் சமூகத்துக்குப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்; இது கிராமங்களில் கற்பிக்கப்படுவது. அந்த மனிதனுக்கு வேறு முகமே கிடையாதா? அம்பேத்கரின் பிறந்த நாளை நாம் கொண்டாடிய இந்த ஏப்ரலில்அவரைப்பற்றிக் கொஞ்சம் புதிதாக அறிந்துகொள்வோமா?

'நண்டு செய்த தொண்டு’ என்ற தலைப்பில் ஜனசக்தி நாளிதழில் பாட்டு எழுதிய பட்டுக்கோட்டை வாலிபர்தான், திரையுலகில் இன்று வரை பெருமையோடு நாம் பார்க்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவர் பாரதிதாசனின் சீடர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

எல்லா வருடமும் ஏப்ரல் 23 உலகப் புத்தகத் தினமாகக் கொண்டா டுகிறோம். ஏன் தெரியுமா? நமக்கு இருப்பது ஒரே வாழ்க்கைதான். ஆனால், ஒவ்வொரு புத்தகம் மூலமும் ஒவ்வொரு புது வாழ்க்கை வாழலாம். நம் அன்றாட நிகழ்வுகளில் சாப்பிட, தூங்க, காத்திருக்க, அரட்டை அடிக்க என எவ்வளவோ நேரம் ஒதுக்குகிறோம். ஆனால், ஒரு புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குகிறோமா? வாசிப்பு என்பது ஒரு புது அனுபவம். கொஞ்சம் தெளிவாக விளக்கட்டுமா?

25.4.2013 முதல் 1.5.2013 வரை 044 - 66802911 என்ற எண்ணில் அழையுங்கள்... நமக்குத் தெரிந்த விஷயங்களின் தெரியாத உண்மைகளைக் கொஞ்சம் மனம்விட்டுப் பேசலாம்.

நேசத்துடன்

ச.தமிழ்ச்செல்வன்.