Published:Updated:

“சேலை கட்டிக்கணும்னு ஆசை!”

சார்லஸ், படங்கள்: சு.குமரேசன்

##~##

டோனி சிக்ஸர் சாத்தினால் துள்ளத் துடிக்க ஆட்டம் போடும் சென்னை சூப்பர் கிங்ஸ் சியர் லீடர்களுக்கு, டோனி யாரென்றே தெரியாதாம்! அட, கிரிக்கெட்டே தெரியாதாம் பாஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மைதானங்களில் செம குத்து குத்தும் சியர் லீடர்ஸ் சானே வெஸ்ட்டர், ஆரா அலெக்ஸாண்ட்ரா, நிக்கோலின் ஓ நீல், செரில், லிசே பசான், டொமினிக் ஸ்டெல்லா ஆறு பேரும் தென் ஆப்பிரிக்க இறக்குமதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அங்கே ரக்ஃபி போட்டிகளுக்கு நாங்க சியர் லீடர்ஸ். கிரிக்கெட் பத்தி டீடெய்லா எதுவும் தெரியாது. நார்மல் கிரிக்கெட்டைவிட ஐ.பி.எல். கொஞ்சம் க்விக் கிரிக்கெட்னு மட்டும் தெரியும். இந்தியா கிளம்புறப்போ ரெண்டு மாசம் அங்கே எப்படிச் சமாளிக்கப்போறோம்னு கவலையா இருந்தது. ஆனா, இப்போ சவுத் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போகணுமேனு கவலையா இருக்கு!'' - படபடவெனப் பேசுகிறார் காந்தக் கண்ணழகி நிக்கோலின்.

“சேலை கட்டிக்கணும்னு ஆசை!”

''சென்னை ரொம்ப ஹாட். பசங்க எங்களை எங்கே பார்த்தாலும் உற்சாகமாயிடுறாங்க. ஏகப்பட்ட லவ் புரபோசல்ஸ் வருது. எங்க நாட்டில் கறுப்பா இருக்கும் பொண்ணுங்களைத்தான் பசங்களுக்குப் பிடிக்கும். ஆனா, இங்க வெள்ளையா இருந்தாதான் பசங்களுக்குப் பிடிக்குது. பேசாம இங்கேயே செட்டில் ஆகிரலாமானு பார்க்குறேன்!'' - மின்னும் புன்னகையுடன் சிரிக்கிறார் லிசே பசான்.

''சென்னை பிளேயர்களில் யாரைப் பிடிக்கும்?''

''மைக் ஹஸ்ஸி. மொதல்ல டோனி யாருன்னே எங்களுக்குத் தெரியாது. ஆனா, ரசிகர்கள்கிட்ட அவருக்குக் கிடைக் கிற அப்ளாஸ் பார்த்துட்டு, நாங்களும் அவர் ஃபேன் ஆகிட்டோம். பிராவோ, செம ப்ளேபாய். விக்கெட் விழுந்தா எங்களுக்குப் போட்டியா டான்ஸ்ல கலக்குறார்!'' என்கிறார் டொமினிக்.

“சேலை கட்டிக்கணும்னு ஆசை!”

''சென்னையில் தமிழ்ப் பாட்டு, மும்பையில் இந்திப் பாட்டுனு ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மொழி. உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?''

''நாங்க புரொஃபஷனல் டான்ஸர்ஸ். பாலே, ஹிப் ஹாப், பிரேக் டான்ஸ்னு எல்லா டான்ஸும் எங்களுக்குத் தெரியும். பீட்டுக்கு ஏத்த மாதிரி டான்ஸ். அவ்வளவுதான். அதனால தமிழோ, இந்தியோ பீட்டைப் பிடிச்சுட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப்ஸை மாத்திடுவோம்!'' என்கிறார் செரில்.

“சேலை கட்டிக்கணும்னு ஆசை!”

''இந்தியாவில் இருந்து என்ன வாங்கிட்டுப் போவீங்க?''

''புடைவை. அழகழகா நிறையப் புடைவை வாங்கிட்டுப் போகணும். அப்புறம் ஸ்வீட்ஸ்!'' என்கிறார் ஆரா அலெக்ஸாண்ட்ரா.

“சேலை கட்டிக்கணும்னு ஆசை!”

''இந்தியாவில் நீங்கள் வித்தியாசமாக உணர்ந்தது என்ன?''

''நிறைய! சென்னை, டெல்லி, கொல்கத்தானு ஒவ்வொரு சிட்டியும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. சாலைகள் ஆரம்பிச்சு, உணவு, மொழி, சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதம்னு ஃப்ளைட் ஏறி இறங்கினாலே எல்லாமே மாறிடுது. ஒரு விஷயம் எங்களுக்கு ரொம்ப ஷாக்கிங்காக இருந்தது. அது தெருவில் திரியும் நாய்கள். சவுத் ஆப்பிரிக்காவில் இங்க பார்க்கிற மாதிரி எந்த நாயையும் தெருவில் பார்க்க முடியாது. ஒவ்வொருத்தரும் அவங்க வளர்க்கிற நாய்களை வீட்டுக்குள்ளே வெச்சுப் பத்திரமாப் பார்த்துப்பாங்க. ஆனா, இங்கே தெருவில் நிறைய நாய்கள் சுத்துது. இது எங்களுக்கு அதிர்ச்சியாவும் ஆச்சர்யமாவும் இருந்தது. அப்புறம் ஜிம், மால்னு எங்க போனாலும் பெண்களே எங்களை வித்தியாசமாப் பார்க்கிறாங்க. நாங்களும் கேர்ள்ஸ்தாம்பா!'' என்கிறார் லிசே பசான்.

சியர்ஸ்!