Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

##~##

விகடன் வாசகர்களுக்கு பவா செல்லதுரையின் பணிவான வணக்கங்கள்...

எழுத்தாளர் என்பது எனக்கான அடையாளமாக இருந்தாலும், ஒரு கதைசொல்லியாக என்னை அங்கீகரிப்பதில்தான் நான் பெருமிதம்கொள்வேன். கிழிந்த பாய்களில் அமர்ந்துகொண்டு பறக்கும் கம்பளம்பற்றிய கதைகளைச் சொல்லும் நம் பாட்டிகள் இப்போது தொலைக்காட்சி சீரியல்களுக்குள் அமிழ்ந்து தொலைந்துவிட்டார்கள். இன்றைய தலைமுறை அம்மா, அப்பாக்களுக்கும் கதை சொல்ல நேரம் இல்லை. கதை கேட்கும் சுவாரஸ்யங்களை இழந்துவிட்ட சமூகமாகிவிட்டோம் நாம். நான் சிறு வயதில் கேட்ட கதை ஒன்று இன்றும் என் நினைவில் இருக்கிறது. பஞ்சத்தில் அடிபட்டு தமிழகம் வறுமையில் வாடிய காலகட்டம் ஒன்றில் நடந்த கிராமத்துக் கதை. மனிதமும், இரக்கமும், ஈகையும் வழியும் அந்தக் கதையை உங்களுக்கும் கொஞ்சம் சொல்லட்டா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்று... ஒன்று... நன்று!

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களை நான் கூர்ந்து கவனித்துவருகிறேன். அதில் வெளிதேசத்தவர்கள்தான் அதிகம். இங்கிலாந்தில் இருந்து வந்து தன் பெயரை கோவிந்தா என்று மாற்றிக்கொண்ட பக்தர் ஒருவரின் கதையைச் சொல்கிறேன். வெளிநாட்டவர்கள் நம் திருவண்ணாமலையில் தேடிக் கண்டடைந்து கடைப்பிடிக்கும் ஒன்றை நாம் முற்றிலுமாக மறந்தேவிட்டோம். அந்தக் கதையைச் சொல்லட்டா?

நம் நகரங்கள் அனைத்தும் இப்போது கான்கிரீட் காடுகளாகிவிட்டன. ஆறுகளின் இதயத்தைப் பிளந்து இரவு பகலாக மணலைக் கடத்துகிறோம். 'கட்டடக் கலையின் காந்தி’ என்று சொல்லப்படும் லாரி பெக்கர், உலகின் மிகச் சிறந்த கட்டடக் கலை வல்லுநர். அவர் ஒரு முறை காந்தியடிகளைச் சந்தித்தபோது, காந்தி சொன்ன ஒரு வார்த்தை அவருடைய வாழ்க்கையில், தொழிலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பதில் நமக்கு இப்போது மிகமிக அவசியம். அவர்கள் சந்தித்த கதையையும் இந்தச் சூழலுக்கான தீர்வையும் விளக்கட்டா?

இயக்குநர் மிஷ்கின் தினமும் இரவு 11 மணிக்கு என்னைத் தொடர்புகொண்டு, அவர் படித்த கதைகள், கவிதைகளை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அவர் சொன்ன ஜப்பானியக் கதை ஒன்று என்னை மிரளவைத்தது. குடிகார ஜப்பானியக் குத்துச்சண்டை வீரன்பற்றிய கதை அது. அந்தக் கதையில் ஒரு சுவாரஸ்யமும் அழகான செய்தியும் இருக்கிறது. அந்தக் கதையைப் பேசட்டா?

எங்கள் ஊருக்குப் பேருந்துகள் வந்தே நான்கு நாட்கள் ஆகிவிட்டன. காரணம், சமீபத்தில் நிகழ்ந்த கலவரங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே வேறு மதம், சாதி, மொழி, மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான் திருமணம் முடித்தேன். இன்று வரை சந்தோஷமாக வாழ்கிறோம். இது தொடர்பான என் வாழ்க்கைச் சந்தோஷங்களையும் சில வருத்தங்களையும் பகிர ஆசை. பகிரட்டா?

9.5.2013 முதல் 15.5.2013 வரை 044 - 66802911* என்ற எண்ணில் அழையுங்கள். நிறைய நிறையக் கதை கேட்கலாம்!

நேசத்துடன்,

பவா செல்லதுரை.

*  அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.