Published:Updated:

விஸ்வரூபம் - 2 - திகில் டிரெய்லர்!

சீலன், ஓவியம்: கண்ணா

##~##

‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமே, சரமாரி சர்ச்சைகள்தான். எனவே, அடுத்து வெளிவர இருக்கும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத் துக்கும் ஆர்.டி.எக்ஸ். எதிர்பார்ப்பைக் கிளப்ப வேண்டியது அவசியமாச்சே. பஞ்சாயத்துக்கு எப்படித் திரி கிள்ளலாம்? இதோ... கலைஞானிக்கு நம்மாலான எளிய யோசனைகள்...

'விஸ்வரூபம்’ முதல் பாகத்தில், தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்றிய இந்திய உளவுத் துறை அதிகாரியான கமலுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, மெரினா கடற்கரையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் நன்றி சொல்வதில் இருந்து படம் தொடங்குகிறது. (ஆமாங்க... இந்தப் படத்திலும் இதான் ஓப்பனிங் சீன்!) நம் நாட்டின் எல்லையில் ஒரு பக்கம் பாகிஸ்தானும் இன்னொரு பக்கம் சீனாவும் வாலாட்டிக்கொண்டிருக்க, நம் ஊரில் இருக்கும் பிரச்னையைக் கவனிக்காமல் அமெரிக்காவுக்குச் சென்று பெயரைத் தட்டிச்சென்றது கமலின் உயர் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவியதைக் கவனிக்காமல்விட்டதைக் காரணம் காட்டி, கமலைப் பணி இறக்கம்செய்து தமிழ்நாட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ்நாட்டுக்குப் பணிமாற்றம் பெற்று வந்திருக்கும் உளவுத் துறை அதிகாரி கமல், வீதி நாடகக் குழு ஒன்றை நடத்துகிறார். நாடகம் சொல்லித் தரும் சாக்கில் குழுவில் இருக்கும் ஆண்ட்ரியாவுக்கு மேடையிலேயே அடிக்கடி முத்தம் கொடுக்கிறார். இதைக் கண்ட பா.ம.க-வினர் 'கலாசாரச் சீரழிவைத் தூண்டுகிறார்’ என்று, எங்கே எல்லாம் அவருடைய நாடகம் நடக்கிறதோ, அங்கெல்லாம் அவருக்கு எதிராக கேட்டைப் போடுகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உண்மை தெரியவருகிறது. அதாவது, உள்ளூரில் நடந்த சாதி மோதல்கள்பற்றிய உண்மையான தகவல்களைச் சேகரிக்க வந்த உளவுத் துறை அதிகாரி அவர் என்பது பிறகுதான் அவர்களுக்குத் தெரியவருவதாகக் கதை போகிறது.

விஸ்வரூபம் - 2  - திகில் டிரெய்லர்!

கதை ஓ.கே. படத்தை எப்படி புரமோட் செய்வது?

படத்தில் தங்கள் கட்சியை இழிவுபடுத்துவதாகக் கூறி பா.ம.க-வினர் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். 'தமிழகத்தில் இருக்கும் எங்கள் சாதியினரான இரண்டு கோடிப் பேருக்கும் படத்தைத் திரையிட்டுக் காட்டிவிட்டுத்தான் தியேட்டரில் காட்ட வேண்டும்’ என்று குரல் கொடுக்கிறார்கள் ராமதாஸும் காடுவெட்டி குருவும். 'என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களை இழிவுபடுத்தி நான் படம் எடுக்கவே மாட்டேன். என் படத்தை காடுவெட்டி குருவும் மருத்துவர் ராமதாஸும் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் சகோதரன் கமல் நம்மைப் பெருமைப்படுத்தியிருக்கிறான் என்று பெருமித உணர்வு அடைவார்கள். அந்த நினைப்பிலேயே ஒவ்வொரு ஊரிலும் எனக்கும் என் ரசிகர்களுக் கும் தங்கர்பச்சான் கையால் தமிழர்களின் பாரம்பரிய உணவான கம்பங்கூழை ஊற்ற வேண்டும்’ என்று (வழக்கம்போல) ஒரு குழப்பு குழப்பி வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்தப் பிரச்னைக்கு இடையில் கமல் இன்னொரு புதுமையைச் செய்கிறார். 'படம் தியேட்டரில் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக, ஸ்மார்ட்போனில் படம் ரிலீஸ் செய்யப்படும். இதற்காக செல்போன் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஒருமுறை செல்போனில் படம் பார்ப்பதற்கு 1,000 ரூபாய்’ என்று அறிவிக்கிறார் கமல். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் சேட்டிலைட் சேனல் உரிமையாளர்கள். ஏற்கெனவே தியேட்டர் அதிபர்கள் மீது இந்தியத் தொழில் போட்டி ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதால், இந்த முறை தியேட்டர் அதிபர்கள் கப்சிப். அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத ஓர் இந்திய அரசு நிறுவனத்திடம் சேட்டிலைட் சேனல்காரர் கள் மேல் புகார் கொடுத்து அவர்களையும் ஆஃப் செய்கிறார் கமல்.

இதற்கிடையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்கும் கமல், 'ராம்ராஜ் பனியன் போட்ட ஒருவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும். ராமராஜன் ராம்ராஜ் பனியன் அணிவாரா என்று என்னிடம் கேட்டால், ஆம் என்று சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் நான் இல்லை என்றும் சொல்லாமல் இருக்கலாம்!’ என்று குந்தாங்கூறாகக் குழப்ப, பா.ம.க-வின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை வெளியிடத் தடை விதிக்கிறது தமிழக அரசு.

உடனடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் கமல், 'என்னுடைய படத்துக்குத் தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடையை நீக்காவிட்டால், நிலவில் போய்க் குடியேறுவேன்’ என்று ஒரு போடு போடுகிறார். அப்புறம் என்ன... ஃபேஸ்புக், ட்விட்டரில் எல்லோரும் ஓவர்டைம் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 'விஸ்வரூபம் பார்ட் டூ’வும் விஸ்வரூப வெற்றி என்பதைச் சொல்லவும் வேண்டுமா?