Published:Updated:

ஹரி ஓம் சென்னை!

உ.கு.சங்கவி

ஹரி ஓம் சென்னை!

உ.கு.சங்கவி

Published:Updated:
##~##

சை ஆசையாக புரொஃபஷனல் கேமரா வாங்கிவிட்டு, அதை 'ஆட்டோ மோடி’ல் வைத்தே க்ளிக்கிக்கொண்டிருப்பது நம்மவர்களின் பழக்கம். அப்படித்தான் இன்ஜினீயரிங் மாணவரான அச்சுதானந்த் ரவியும் க்ளிக்கிக்கொண்டிருந்தார். ஆனால், இன்று பையன் தான் படித்த இன்ஜினீயரிங்கைக் கண்டுகொள்ளாமல், போட்டோ ஜர்னலிசத்தைத் தன் துறையாக மாற்றிக்கொண்டுஇருக்கிறார். காரணம், MIM. சென்னையின் தொழில்முறைக் கலைஞர்கள் அல்லாத இளம் புகைப்படக்காரர்கள் அடங்கிய ‘Madras In Motion’ அணிக்கு அச்சுதானந்த் தான் 'தல’!

ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து 'போட்டோ வாக்’ செய்வதே MIM-ன் வேலை. ''ஃபேஸ்புக்ல ஆரம்பிச்சு ஃபேஸ்புக் மூலமாவே இயங்குவது எங்க டீம் ஸ்டைல். கடற்கரை டு தலைமைச் செயலகம், வள்ளுவர் கோட்டம் டு லயோலா... இப்படி ரூட் முடிவுபண்ணிட்டு, அதை ஃபேஸ்புக் MIM பேஜ்ல போஸ்ட் பண்ணிடுவோம். அதிகாலை அஞ்சு மணிக்கு வாக் கிளம்புவோம். குறைஞ்சது 50 பேராச்சும் தேறிடுவாங்க. எதிர்பார்க்காத அழகழ கான ஃப்ரேம்கள் கிடைக்கும். அதையெல்லாம் க்ளிக் பண்ணிட்டு எங்க ஃபேஸ்புக் குரூப்ல போஸ்ட் பண்ணுவோம். அந்தப் படங்கள் ஷேர், லைக் எல்லாம் குவிச்சு பல புகைப்படக் கண்காட்சி கள்ல பரிசும் ஜெயிக்கும். அஞ்சு பேர்னு ஆரம்பிச்ச குரூப்ல இப்போ 1,268 ஆக்டிவ் உறுப்பினர்கள்!'' என்கிறார் அச்சுதானந்த்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹரி ஓம் சென்னை!
ஹரி ஓம் சென்னை!
ஹரி ஓம் சென்னை!

MIM-ன் உறுப்பினர்கள் அனைவரையும் அதிரடிக்கும் செம 'அறுந்த வாலு’ வர்ஷினி. ''நாங்க எல்லா ரும் கிட்டத்தட்ட ஒரு குடும்பம் மாதிரி ஆகிட்டோம். இல்லைன்னா, முக்கால்வாசிப் பேர் பசங்களா இருக்கிற ஒரு கும்பலோட ஒரு பெண்ணைத் தனியா அனுப்ப எந்த அம்மா - அப்பாவாவது சம்மதிப்பாங்களா? ஆனா, என்னால பொறுத்துக்க முடியாத ஒரு அக்கிரமம்னா, எங்க குரூப்ல பாதிப் பேரு காலேஜ் முடிச்சவங்க. ஆனா, போட்டோ எடுக்கப்போன இடத்தில் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா தப்பிக்கிறதுக்காக, 'காலேஜ் ஸ்டூடன்ட்’னு சொல்லிடுவாங்க. இதுக்காகவே பழைய காலேஜ் ஐ.டி. கார்டை  இன்னும் வெச்சிருக்காங்க. நம்ம போலீஸும் தேதியைப் பார்க்காம 'சரி, போ போ!’னு விட்டுடுவாங்க!'' என்று கம்பெனி ரகசியத்தைப் போட்டு உடைத்தார் வர்ஷினி.

ஹரி ஓம் சென்னை!

''நடந்துட்டே இருக்கிறப்போ எப்போ, எங்கே நல்ல படம் கிடைக்கும்னு சொல்ல முடியாது. திடீர்னு எதிர்பார்க்காத இடத்தில் செம ஆங்கிள் கிடைச்சா, சம்பந்தப்பட்ட பார்ட்டிகளைத் தொந்தரவு பண்ணாம எங்க ஆட்களை அலெர்ட் பண்ண, 'ஹரி ஓம்’னு சொல்லுவோம். பசங்க உஷார் ஆகிடுவாங்க!'' என்று ஃபினிஷிங் டச் கொடுத்தார் அசோக்.

ஹரி ஓம்!