Published:Updated:

நாலு வயசு மேயர்!

எஸ்.கலீல்ராஜா

நாலு வயசு மேயர்!

எஸ்.கலீல்ராஜா

Published:Updated:
##~##

ங்கள் ஊரில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அதிகாலையில் சாலையைக் கடந்துசென்றால், என்ன செய்வீர்கள்? அமெரிக்காவில் டோர்செட் என்னும் சின்னஞ்சிறு ஊரைச் சேர்ந்த மக்கள் நின்று வணக்கம் வைக்கிறார்கள். ஏனெனில், நான்கு வயது ராபர்ட் டஃப்ட்தான் அந்த ஊரின் மேயர்.

டோர்செட் ஊர் மக்களை மக்கள் என்று சொல்வதைவிடக் கும்பல் என்றே சொல்லலாம். ஏனெனில், மொத்த மக்கள்தொகையே 22 பேர்தான். 'டேஸ்ட் ஆப் டோர்செட்’ என்பது டோர்செட் மக்கள் வருடக் கடைசியில் நடத்தும் திருவிழா. இருப்பதே 22 பேர்தான் என்பதால், அடுத்த வருடத்துக்கான மேயரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது வழக்கம். மேயர் வேட்பாளருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஒரு டாலரைக் கௌரவத் தொகையாக ஊருக்குச் செலுத்தி னால் போதும். சென்ற வருடம் ராபர்ட்டின் அம்மா எம்மா (ரைமிங்லாம் இல்லை... பெயரே அதுதான்!) ஒரு டாலர் கட்டித் தேர்தலில் மகன் பெயரையும் சேர்க்க, குலுக்கலில் வந்தது ராபர்ட் பெயர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாரும் ஜெர்க் ஆகி நிற்க, ''அவன் பேசுற பேச்சுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்'' என்று எம்மா ஜாலியாக அதை ஏற்றுக்கொண்டார். மக்களும் வேறு வழியில்லாமல் கலைந்துவிட்டார்கள். அப்போதைக்கும் மீடியாவுக்குத் தகவல் பரவவில்லை. ஆனால், டோர்செட்டில் நடந்த ஒரு  திறப்பு விழாவுக்கு வந்த சேனல் நிருபர்கள், அந்த உணவகத்தைத் திறந்துவைத்த 'தம்துண்டு’ மேயர் ராபர்ட்டைப் பார்த்து அசந்துவிட்டார்கள்.  

நாலு வயசு மேயர்!

''நான் மீன் பிடிப்பதில் எக்ஸ்பர்ட்...'' என்று ஆரம்பித்த ராபர்ட், 'எப்படி மீன் பிடிக்க வேண்டும்? எதற்கெல்லாம் மீன் மயங்கித் தேடி வரும்? என் கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் சோஃபியா!’ என்று தமிழ் சினிமா சிறுவன் கேரக்டர்களைப் போல ஓவராகப் பேச, அது யூ டியூபில் செம ஹிட்!  

மீடியாக்கள் கவனம், உள்ளூர் மக்களின் மரியாதை ஆகியவற்றால் 'ஓஹோ! இவங்களை நாமதான் பாத்துக்கணும்போல’ என்று புரிந்து கொண்ட ராபர்ட், மேயர் பதவிக்கே பிரத்யேகமான தொப்பி, முழங்கால் வரை ஷூ, கையில் குட்டி ஸ்டிக் என்று தினமும் ஊரை ரவுண்ட் அடித்துக் குறை கேட்க ஆரம்பித்துவிட்டான்.

குட்டி மேயர் என்பது அமெரிக்காவில் அதிசயம் இல்லை. சில வருடங்களுக்கு முன் டெக்சாஸின் ஒரு பகுதி யில் கரோலின் கன்சலே என்ற 11 வயதுச் சிறுமியை ஒருநாள் மேயராகத் தேர்ந்தெடுத்தார்கள். கரோலின் 'முதல்வன்’ அர்ஜுன்போல அதிரடியெல்லாம் பண்ணவில்லை. ஆனால், ஒரு தெருவுக்குத் தனக்குப் பிடித்த பாப் பாடகர் ஜஸ்டின் ஃபைப்பர் பெயரைவைத்துவிட்டாள். இந்த விஷயம் தெரிந்தால், ராபர்ட் தன் ஊருக்கே சோஃபியா என்று பெயரை மாற்றிவிடுவானோ என்பதுதான் டோர்செட் மக்களின் ஒரே கவலை!