விகடன் வாசகர்களுக்கு ஞானசம்பந்தனின் அன்பும் வாழ்த்துக்களும்...

 தமிழ் சினிமாவில் பாபநாசம் சிவன் தொடங்கி, பா.விஜய், நா.முத்துக்குமார் வரை பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேரை நமக்குத் தெரியும். ஆனா, உடுமலை நாராயணகவியைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? 'யார் இவர்’னு கேட்கிறீங்களா? கிட்டத்தட்ட நாலு தலைமுறைக்கு சினிமா பாட்டு எழுதியவர். பெரியாருடன் சேர்ந்து மூட நம்பிக்கைக்கு எதிரா பல கருத்துக்களைப் பதியவெச்சவர். இவரைப் பத்தி இன்னும் விரிவாத் தெரிஞ்சுக்கலாமா?

ரத்தம், கண், இதயம், ஏன்... கல்லீரல் வரை இப்போ தானம் செய்றோம். ஆனா, எலும்பு தானம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? எலும்பில் இருக்கும் மஜ்ஜை எனும் பகுதியை நாம தானம் செய்யலாம். திருவள்ளுவர் காலம் தொடங்கி புராணக் கதைகளில் தொடர்ந்து இப்போ அனுஷ்கா நடிச்ச 'அருந்ததி’ படம் வரை அந்த முறை

இன்று... ஒன்று... நன்று!

வழக்கத்தில் இருக்கு. அதைப் பத்திக் கொஞ்சம் புதுசான, வித்தியாசமான தகவல்கள் சொல்றேன்...

அழியாத இலக்கியத்தை எப்படிப் படைப்பதுனு தெரியாம இங்கே பலர் குழம்பிட்டு இருக்காங்க. பலர் பேருக்காக, புகழுக்காக, பொழுதுபோக்குக்காக இலக்கியம் படைக்கிறேன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, சிறைக் கைதி ஒருவர் டாய்லெட் டிஷ்யூ தாள்ல பென்சிலால் எழுதிவெச்சது, அவர் இறந்த பிறகு புத்தகமாக்கப்பட்டு உலகப் புகழ் பெற்ற கதை தெரியுமா? அந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏன், இயக்குநர் ஸ்பீல்பெர்க் கூட அவர் படத்தில் குறிப்பிட்டு இருக்கார். அழியாத இலக்கியமும், அது வந்த ஸ்பீல்பெர்க் படம் பத்தியும் சொல்லட்டா?

நான் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் கோயில்களையும் அதன் கதைகளையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அப்படி மதுரைப் பக்கம் இருக்கும் ஒரு கிராமத்துக்குப் போனப்போ, ஒருத்தர் கல்லறையைப் பத்திக் கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன். அவர் யார், ஏன் அந்த ஆச்சர்யம்? அந்தக் கதையையும் சொல்றேன்...

மதுப் பழக்கம் இருக்கிற ஒருத்தர்கிட்ட, 'ஏன் குடிக்கிறீங்க’னு கேட்டேன். 'என் அப்பா இறந்ததை நினைச்சு வருத்தத்துல குடிக்க ஆரம்பிச்சுட்டேன்’னு சொன்னார். 'அப்பா எப்ப இறந்தார்?’னு கேட்டா, '30 வருஷத்துக்கு முன்னாடி’ன்னார். 'சரி... அதுக்கு ஏன் இன்னமும் குடிக்கிறீங்க’னு கேட்டா, 'அப்போ குடிக்க ஆரம்பிச்சுக் குடிச்சுக் குடிச்சுக் குடிகாரன் ஆயிட்டேனேனு நினைச்சு வருத்தத்துல இப்போ குடிக்கிறேன்’னு சொன்னார். மனுஷனுக்கு எத்தனையோ போதை இருக்கலாம். ஆனா, இந்த மாதிரி செயற்கை போதை ரொம்ப ஆபத்தானது. போதைத் தடுப்பு வழிமுறைகளைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

இந்திய சினிமாவுக்கு வயசு 100. 'சினிமா எப்படி எடுக்கணும்?’னு இங்கிலாந்து போய் தாதா சாஹேப் பால்கே கத்துக்கிட்டு வந்து, இந்தியாவின் முதல் சினிமாவான 'ராஜா ஹரிச்சந்திரா’னு ஹரிச்சந்திரன் கதையைப் பேசாப் படமா எடுத்தாரு. அந்தப் பாரம்பரியத்துல தமிழ் சினிமாவின் முதல் படம், முதல் பாடாலாசிரியர் 'சகலகலா வள்ளி’ டி.பி.நாகலட்சுமி பத்தியும் தெரிஞ்சுக்கலாமா?

23.5.13 முதல் 29.5.13 வரை 044 - 66802911*என்ற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க... பயன் தரும் பல தகவல்களைப் பகிர்ந்துப்போம்.

அன்புடன்,

கு.ஞானசம்பந்தன்

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு