##~##

விகடன் வாசகர்களுக்கு ரவிக்குமாரின் பாசமான வணக்கம்...

கத்திரி முடிஞ்சு வெயில் அனல் கொடுமையில் இருந்து விடுபட ஆரம்பிச்சிருக்கோம். மழையும் கொஞ்சம் கொஞ்சம் பூமி நனைக்க ஆரம்பிச் சிருக்கு. ஆனா, நமக்குத் தெரியாத ஒரு பெரிய ஆபத்து, கடல்ல காத்துட்டு இருக்கு! நம்புறதுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அதுதான் உண்மை. சுனாமியைவிட மிகப் பெரிய ஆபத்து அது. அப்படி என்ன ஆபத்து? அதன் விளைவுகள் என்ன? அந்த ஆபத்து நம்மைத் தாக்குவதற்கான காரணம் என்ன? கொஞ்சம் தெளிவாத் தெரிஞ்சுக்கலாமா?

கிரிக்கெட் சூதாட்டத்தைப் பத்தி இப்போ மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசுறோம். கிரிக்கெட் போட்டி களைவிடப் பரபரப்பா சூதாட்டத்தைப் பத்திப் பேசிட்டு இருக்கோம். ஆனா, இந்த சூதாட்டத்தை எல்லாம்விட, ஒரு சுவாரஸ்யமான விஷயம், கம்பராமாயணத்தில் இருக்கு. மிதிலைக் காட்சிப் படலத்தில் சூதாட்டத்தையும் பெண்களையும் தொடர்பு படுத்தும் அந்தப் பாடலையும் அதன் விளக்கத்தையும் சொல்லவா?

இன்று... ஒன்று... நன்று!

தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சாதிக் கொடுமையும் அதன் அடிப்படை யிலான வெறுப்புப் பிரசாரமும். நாட்டில் பேசித் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னைகள் எத்தனையோ இருக்க, இன்னமும் நாம் சாதியைக் கட்டிக்கொண்டு அழிகிறோம். சமீபத்தில் தமிழகத்தின் சாதி மோதல்களைப் பார்க்கும் போது ஈழத்துக் கவிஞர் ஒருவருடைய வலி மிகுந்த நினைவுகள் கண் முன் வருகின்றன. அந்தக் கதையைக் கேளுங்களேன்...

இலங்கை இன அழிப்புப் போரில் நாம் மறந்த மிக முக்கியமான இழப்பு, யாழ் நூலக அழிப்பு. அந்தக் கொடுமையையும், அந்த வரலாற்றுப் பொக்கிஷத்தின் முக்கியத்துவமும் அறிவீர்களா நீங்கள்? அங்கிருக்கும் மக்கள் மீண்டும் அந்த நூலகத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். ஒரு நூலகத்தை அழிப்பவன் மூடன் என்பது உலகம் முழுக்கவே சொல்லப்படும் கருத்து. அந்த முட்டாள்தனத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா?

நவீன இலக்கியம்பற்றிப் பேசும் எல்லோருக்கும் லத்தீன் அமெரிக்காவின் கவிஞர் எட்வார்டோ கலியானோ பற்றியும் தெரிந்திருக்கும். கவிஞர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு புரட்சியாளர். சமீபத்தில் வெளிவந்திருக்கும் அவரின் 'சில்ட்ரன் ஆஃப் தி டேஸ்’ என்ற புத்தகம் புதியதொரு கோணத்தில் உலக வரலாறு பேசுகிறது. அந்தப் புத்தகம்பற்றிய அற்புதங் களைச் சொல்கிறேன்...

13.6.13 முதல் 19.6.13 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். நெருக்கமான, உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துகொள்வோம்.

அன்புடன்,

ரவிக்குமார்

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு