Published:Updated:

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

ஆர்.சரண், ஓவியங்கள்: கண்ணா

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

ஆர்.சரண், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
##~##

ரித்திரத்தில் சில சம்பவங்கள் நடக்காமல் போயிருந்தால்... சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் உல்டாவாக நடந்திருந்தால்... எப்படி இருக்கும் என்று ஒரு ரிலாக்ஸ் கற்பனை!

தி.மு.க-வில் கணக்குக் கேட்டதற்காகக் கட்சியில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். ஒருவேளை கலைஞர் உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக 'இது தான் கணக்கு!’ என ஏதோ பழைய வவுச்சர் பில் பண்டல்களை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போய், அவர் தாவாங்கட்டையைப் பிடித்தபடி, 'என்ன ராமச்சந்திரா! கணக்குக் கேட்டால் சொல்ல வேண்டியது என் கடமை அல்லவா? இதோ இது மாலை வாங்கிய செலவு, இது சால்வை வாங்கிய செலவு, இது மதியம் குஸ்கா சாப்பிட்ட செலவு...’ என மொக்கை பில்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்கு எடுத்துக் காண்பித்திருந்தால், எம்.ஜி.ஆர். பொலபொலவென அழுதிருப்பார். 'என்னை மன்னித்துவிடுங்கள் கலைஞரே. இனி, நீங்கள் மட்டும்தான் என் தலைவன்!’ என நெக்குருகியிருப்பார். அப்புறம், அவர் ஏன் அ.தி.மு.க. ஆரம்பித்திருக்கப்போகிறார்? ஜெயலலிதா ஏன் கொ.ப.செ. ஆகி இருக்கப்போகிறார்? இப்போ அம்மா சி.எம்-மா நம்மை ஆண்டிருக்கவும் மாட்டார். நம்ம முனுசாமி, அம்மா மெஸ்ல சாப்பிடாம, மாமி மெஸ்ல அக்கவுன்ட் வெச்சுச் சாப்பிட்டு இருப்பார். பில் பண்டல் ரெடி பண்ண முடியாத கருணாநிதியின் ஒரு சின்ன சோம்பலில் வரலாறே மாறிடுச்சு பார்த்தீங்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

கேப்டன் ஒரு மாலை மங்கும் நேரத்தில் காரக் கடலை, மினரல் வாட்டரோடு 'அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற யோசனையில் இருக்கிறார். கடலை செரித்த அந்தக் கணத்தில், 'ஏய்... அரசியல்ல குதிக்கலாமா?’ என நண்பர்களிடம் யோசனை கேட்கிறார். 'கரெட்டு கரெட்டு... மெரட்டு மெரட்டு’ என அன்று நண்பர்கள் குழாமும் மனைவி, மச்சானும் ஏற்றிவிட்டதால், கட்சி ஆரம்பித்துக் கஷ்டப்பட்டு, எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தெல்லாம் பெற்று, இன்று எல்லாமே அந்தலைசிந்தலையாகிக் கிடக்கிறது. ஒருவேளை... அன்றே அண்ணி கேப்டனை மூட்-அவுட் செய்திருந்தால்? கேப்டனின் அந்தக் கேள்வியைக் கேட்ட அடுத்த கணம் கண்ணைக் கசக் கிக்கொண்டு, சூட்கே ஸில் நான்கைந்து புடைவைகளை எடுத் துக்கொண்டு, 'நான் என் அம்மா வீட்டுக்கே போறேன்’ என வீட்டு வாசல் வரை அழுதபடி வந்திருந்தால்? கைலியோடு கேப்டன் எழுந்து வந்து, 'ஏய் புள்ள... விளையாட்டுக்குச் சொன்னேன். நாம மெடிக்கல் காலேஜ் கட்டி அப்படியே யுனிவர்சிட்டி ஆக்கிடலாம். இனிமே, அரசியல் பத்திப் பேச மாட்டேன்’ எனக் கெஞ்சிக் கூத்தாடி, தாஜா செய்திருப்பார். இப்போது ஃபேஸ்புக்கில் பொழுதுபோக்கு குறைந்திருக்கும்!  

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

ழகிரி மட்டும் அப்போதே ஒழுங்காகப் படித்து அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக செட்டில் ஆகியிருந்தால்..? மதுரையில் தைரியமாகப் பலர் வாக்கிங் போயிருப்பார்கள். லூஸுத்தனமாக போஸ்டர் மற்றும் பேனர் ஒட்டும் ஓர் இனம் உருவாகாமலே போயிருக்கும். இந்திய உரம் மற்றும் ரசாயனத் துறை வளர்ச்சிப் பாதையில் சென்றிருக் கும். ஸ்டாலின் கூடுதல் உற்சாகத்தோடு வலம் வந்திருப்பார். 'க்ளவுட் நைன்’ தோன்றி இருக்காது. 'பொட்டு’ சுரேஷ், 'புட்டு’ சுரேஷாகப் பழங்காநத்தம் பேருந்து நிலையத்தில் புட்டு வியாபாரம் செய்து 'குட் பாய்’ ஆக செட்டில் ஆகியிருப்பார். மொத்தத் தில், மதுரை அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து, புத்த கயாவுக்கு அடுத்து அமைதியான இடமாக லிம்கா ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கும்.  

ஸ் கண்டக்டர் சிவாஜிராவ் கெய்க்வாட், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகாமல் பஸ் கண்டக்டராகவே இருந்திருந்தால்..? தமிழ் சினிமாவில் பறந்து பறந்து சண்டை போடும் சக்திமான் ஸ்டைல் ஃபைட் வந்திருக்காது. சிவப்பாக இருந்தால்தான் அழகு எனத் தப்பான கற்பிதம் சினிமாவில் எழுதப்படாத விதியாக இன்றும் நீடித்திருக்கும். சிகரெட்டை எல்லோரும் கவனமாக வாயில் வைத்துப் பற்றவைத்திருப்பார்கள். 90-களில் பலர் பரட்டைத் தலையோடு திரியாமல், சீரும் சிறப்புமாக சீவித் திரிந்திருப்பார்கள் என்பதால், அப்போது சலூன் வைத்திருந்தவர்கள் அப்போதே வீடுகீடு வாங்கி செட்டில் ஆகியிருப்பார்கள். 1996 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க பிரபுவையோ, சத்யராஜையோ, விஜயகாந்தையோ மூப்பனார் நச்சரித்திருப்பார். இமயமலையை ஸ்கூல் மேப்பில் குறித்துவிட்டு, அப்படியே மறந்திருப்போம்!

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

டி.ஆர். திரை உலகுக்கு வராமல் போயிருந்தால்? அடுக்குமொழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கலக்கிக்கொண்டு இருந்திருப்பார். சிரிப்போடு ஆரம்பிக்கும் வகுப்புகள் நெகிழ்ச்சிக் கண்ணீரோடு முடிந்திருக்கும். தமிழகத் தில் பல அண்ணன்களுக்குத் தங்கச்சிப் பாசம் என்றால், என்னவென்று தெரியா மலே போயிருக்கும். அடுக்குமொழி வசனக் கவிதைகள் தமிழில் அழிந்தேபோயிருக்கும். அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா, மும்தாஜ் போன்ற ஃபிகர்களை நம் கண்கள் காணாமலே போயிருக்கும். ஆப்பிரிக்கன் கானாவை யும் ஜூலு நாட்டுப்புறப் பாடலையும் அறியாமலே போயிருப்போம். 'சுப்ரமண்ய புரம்’ அழகரும் பரமனும் தாடியில்லாமல் 'க்ளீன் ஷேவ்’வுடன் கழுத்தை அறுத்திருப்பார்கள்.  எல்லா வற்றையும்விட, இந்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மேலான பவர்கொண்ட தமிழ் நாடு சிறுசேமிப்பு வாரியத் தலைவர் பதவிபற்றி நமக்குத் தெரியாமலே போயிருக்கும்!

குட்டி கமல் மட்டும் 'களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்காமல் போயிருந் தால், 'உலக நாயகன்’ தமிழ் நாட்டிலிருந்து தோன்றியிருக்க மாட்டார். எண்பதுகளுக்குப் பிறகு, சினிமாவுக்கு வந்த ஹீரோயின் களின் உதடுகள் தப்பித்திருக்கும். 'சிவாஜிக்குப் பிறகு யாருடா?’ என்ற கேள்விக்கு விடையே கிடைத்திருக்காது. ஜெமினிகணேசனுக்குப் பிறகு, 'காதல் மன்னன்’ பட்டம் அனாமத்தாகப் பறந்தபடி இருக்கும். 'இடக்கரடக்கல்’ என்ற தமிழ் வார்த்தை நம்மவர்களுக்கு பரிச்சியமில்லாமலே போயிருக்கும். குழப்பக் கவிதைகள் கிடைக்காமலே போயிருக்கும். ஆனால், பரமக்குடி வைகையாற்று கலை இலக்கிய இரவுகளில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் கவிதைகள் வாசித்து இரவை நனைத்துக் காயப்போட்டுஇருப்பார். ஆனால், ஒன் பாயின்ட்... ஸ்ருதி என்ற கியூட் கவிதை கிடைக்காமலே போயிருக்கும். அது எவ்வளவு பெரிய பேரிழப்பாக இருந்திருக்கும்?

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

குஷ்பு அறிமுகமான இந்திப் படம் ஃப்ளாப் ஆகி அவர் தமிழ் சினிமாவுக்கு சேவை செய்ய வராமல் இருந்திருந்தால்? தமிழ் சினிமாவுக்கு ஒரு தேவதை கிடைத்திருக்க மாட்டார். ('வருஷம் 16’ காலத்தைச் சொன்னேன்!) நடிகைக்குக் கோயில் கட்டிய 'எஸ்.டீ.டி’ இங்கு நடந்திருக் காது. தமிழ்நாட்டுப் பெண்கள் இவ்வளவு வெரைட்டி  ஜாக்கெட்கள் அணிந்து அலைந்திருக்க மாட்டார்கள். ஹன்சிகாவை அவ்வளவாக ரசித்திருக்க மாட்டோம். 'குழப்பம் செய்த குஷ்பு புயல்’ என அரசியல் வார இதழ்களுக்கு ரேப்பர் ஸ்டோரி கிடைத்திருக்காது. மிக முக்கியமானது பாஸ்... 'குஷ்பு இட்லி’ என்ற டிஷ் நமக்குக் கிடைத்திருக்காது!

நடுவுல கொஞ்சம் சரித்திரத்தைக் காணோம்!

நித்தியானந்தா அறையில் இருந்த அந்த ரகசிய கேமரா அந்த மகா தருணத்தில்  வேலை செய்யாமல் போயிருந்தால்? ஸோ சிம்பிள்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கும். எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடந்துகொண்டு இருந்திருக்கும். (அவருக்குத்தான்!) உலகின் இளம் ஆன்மிகவாதியாக இந்த இரண்டு வருடங்களில் இன்னும் உச்சம் தொட்டி ருப்பார்! (அட... என்ன சொன்னாலும் டபிள் மீனிங்காவே வருதே!) அவரது ஆசிரமங்கள் சர்வதேச அளவில் மேலும் விரிவாக்கப்பட்ட 'முக்தி’ கொள்கைகளுடன் செயல்பட்டுக் கொடிகட்டிப் பறந்திருக்கும். தாஜ்மஹா லுக்கு அடுத்து, இந்தியாவின் 'சுற்றுலா சொர்க்கமாக’ பிடதி ஆசிரமம் புரொமோஷன் வாங்கியிருக்கும். ஏதேனும் ஒரு மத்தியான சீரியலில் வில்லியாக ரஞ்சிதா நடித்துக்கொண்டிருப்பார். இது எல்லா வற்றுக்கும் மேலாக நித்தியின் 'கும்தலக்கடி’ குண்டலினி யோகாவை இப்போது எல்லோரும் சீரியஸாக முயற் சித்தபடி இருப்போம். எவ்வளவு பெரிய பல்பு!