Published:Updated:

“தனியா டண்டணக்கானு டான்ஸ்!’

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: பொன்.காசிராஜன்

“தனியா டண்டணக்கானு டான்ஸ்!’

ஆ.அலெக்ஸ் பாண்டியன், படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

லிங்குசாமியை இயக்குநராக, கவிஞராக நமக்குத் தெரியும். ஓர் ஓவியராக? தன் எண்ணங்களை அழகிய கவிதைகளாக்கியவர், அதற்கு தானே வரைந்த ஓவியங் கள் மூலம் வண்ணங்களும் கொடுத்துவிட்டார். 23 ஆண்டுகளாகத் தான் எழுதிய ஹைக்கூ கவிதைகளையும், மூன்று மாதங்களாக வரைந்த மாடர்ன் ஆர்ட் ஓவியங்களின் தொகுப்பையும் 'லிங்கூ’ என்ற தலைப்பில் சென்னை ஆர்ட் ஹவுஸில் ஓவியக் கண்காட்சியாக நடத்தினார் லிங்குசாமி.  

'லிங்கூ’வை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட... இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். முதல் ஆளாக மைக் பிடித்த கவிஞர் நா.முத்துக்குமார் ''லிங்குசாமியைப் பார்க்க கடவுளும் கவிஞர்களும் சென்றால், அவர் கடவுளை வெளியே நிறுத்திவிட்டு, கவிஞர்களைத்தான் முதலில் சந்திப்பார். ஏனெனில், அவர் கவிதை மனதுக்காரர்!'' எனச் சிலாகித் தார். அமீரின் பேச்சில் அத்தனை கிண்டல், அவ்வளவு குதூகலம்... ''மகாத்மா காந்தி ரேமண்ட் ஷோ ரூமுக்குள்ள போனா எப்படித் திருதிருனு முழிப்பாரோ, இப்போ, இங்கே நான் அப்படி நிக்குறேன். என் வாழ்க்கையில நானும் ஒரே ஒரு கவிதை எழுதினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தனியா டண்டணக்கானு டான்ஸ்!’

'நான் ரசித்த பெண்கள் பல
அதில் இனித்தது சில
அதில் ஒன்று தேன் பலா
அவளே நான் ஏங்கும் கலா’
னு எழுதினேன். 'என்னடா... டி.ஆருக்குப் போட்டியாக் கௌம்பிட்டியா?’னு என் நண்பர்கள் ஓட்டி எடுத்துட்டாங்க. இயக்குநர் ஆனதும் படத்தின் பாடல் வரிகளில் சின்னச் சின்ன கரெக்ஷன்ஸ் போடுவேன். அப்போ நாமளே பாட்டு எழுதினா என்னன்னு தோணுச்சு. ரொம்ப யோசிச்சு, 'அத்தனைக்கும் ஆசைப்படு... அப்போதான் அர்ணாக்கயிறாச்சும் மிச்சப்படும்’னு எழுதினேன். அதுதான் கடைசி. அப்புறம் யோசிக்கவே இல்லை'' என்று முடிக்க... அரங்கம் வெடித்துச் சிரித்தது.

“தனியா டண்டணக்கானு டான்ஸ்!’

''கவிதைகள் படிக்கும்போது நமக்கே தெரியாம ஒரு மயக்கம் வரும். அந்த மயக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கு. லிங்குசாமியின் கண்கள் எப்பவும் ஸ்மைல் பண்ணிட்டே இருக்கும். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். அந்தச் சிரிப்பு அப்படியே சுத்தி இருக்கிறவங்களுக்கும் பரவும். ரொம்ப ஆரோக்கியமான விஷயம் அது!'' என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சொல்ல, பளிச் புன்னகையால் அதை ஏற்றுக்கொண்டார் லிங்கு.

இறுதியாக மைக் பிடித்த லிங்குசாமி, ''இந்தப் புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் 'இஸ்திரி போடும் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம்’கிற கவிதை நான் கல்லூரி படிக்கும்போது எழுதினது. அந்த முதல் கவிதை விகடன்லதான் பிரசுரம் ஆனது. அப்போ அந்த மூணு வரிக்கு 30 ரூபாய் சன்மானம் கொடுத்தாங்க. சினிமாவுக்குள்ள வரணும்னு ஆசையோட இருந்த எனக்கு, அந்தக் கவிதை பிரசுரமானது அத்தனை நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்துச்சு. சினிமாவில் யாரையுமே தெரியாத நிலைமையில், கவிதை பிரசுரமான தைரியத்தில் சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன். அங்கே தொடங்கிய பயணம், இப்போ விகடனி லேயே ஒரு புத்தகமா வெளியிடும் அளவுக்கு வந்திருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள் இது. எனக்குக் கவிதைகள் அவ்வளவு பிடிக்கும். கவிதைகள்தான் என்னை இதுவரை இயக்கிட்டு இருக்கு. ஷூட்டிங்ல சண்டை, காதல், பாடல்னு எந்தக் காட்சியா இருந்தாலும், நான் என் மனசுக்குள் ஒரு கவிதையோடதான் இருப்பேன். கடந்த 20 வருஷ சென்னை வாழ்க்கையில் இன்னைக்குத் தான் நிம்மதியா ஒரு காபி குடிச்சேன். காரணம், இந்தக் கவிதைத் தொகுப்பு. கவிஞர் அறிவுமதி அண்ணன் எனக்கு மிகப்

“தனியா டண்டணக்கானு டான்ஸ்!’

பெரிய இன்ஸ்பிரேஷன். கடைசி மூன்று மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஓவியம் அறிமுகம். ஓவியர் ஸ்ரீதர் ஒரு அப்ளிகேஷனை என் மொபைலில் இன்ஸ்டால் பண்ணிக்கொடுத்தார். அதன் மூலமாகத்தான் நான் ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். என் கவிதையை யாராவது படிச்சுட்டுப் புகழ்ந்தா, மனசுக்குள்ள தனியா 'டண்டணக்கா’னு டான்ஸ் ஆடியிருக்கேன். மோகன்லால் சார் இந்தக் கவிதை, ஓவியங்களைப் பார்த்துட்டு, அவர் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கார்.

கௌதம்வாசுதேவ் மேனன் இந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்னு சொல்லி, அந்த வேலையில் இறங்கிட்டார். என் அடுத்த படம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அதில் இந்தக் கவிதைகளின் தாக்கம் ரொம்பவே இருக்கும்!'' என நெகிழ்ச்சியுடன் முடிக்க, ஓர் அழகான ஓவியம்போல முடிந்தது அந்த விழா.