Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

##~##

விகடன் வாசகர்களுக்கு 'கல்யாணமாலை’ மோகனின் வணக்கங்கள்...

'கல்யாண மாலை’ நிகழ்ச்சியை நான் 14 வருஷமா நடத்திட்டு வர்றேன். ஆனா, என் இருபதாவது வயசுல இருந்தே மத்தவங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிவைக்க ஆரம்பிச்சுட்டேன். அப்போ நான் பார்த்த திருமணம் ஒண்ணு இருக்கு. திருவாரூர்ல அக்கா, தங்கை ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம். பணம், காசு முக்கியமில்லை... ரெண்டு மனசு சேர்ந்தா போதும்னு நினைச்சு நடந்த திருமணம். அந்தத் திருமணம் பத்திச் சொல்லட்டா? நெகிழ்ந்துடுவீங்க!

ஒரு குடும்பம். அங்கே அப்பா ரொம்பப் பொறுப்பானவர். எல்லா விஷயங்களிலும் அக்கறையோடு இருப்பார். அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளை அவ்வளவு அன்பாக் கவனித்துக்கொள்வார். இன்னொரு  குடும்பம். அங்கே அப்பா மொடாக் குடிகாரர். குடும்பத்தின் மீதோ, குழந்தைகள் மீதோ கொஞ்சமும் அக்கறை இல்லாதவர். இரண்டில் எந்தக் குடும்பம் நிம்மதியா இருக்கும்? ஒரு குடும்பத் தலைவனின் செயல்பாடு அந்தக் குடும்பத்தை எப்படிப் பாதிக்கும்?

இன்று... ஒன்று... நன்று!

மன வேற்றுமை காரணமா கணவன்-மனைவி இருவரிடையே பிரிவு உண்டாகிப் பெருகும் விவாகரத்துகள் இப்போ சகஜமாயிடுச்சு. என்னென்னமோ காரணம் சொல்லிப் பிரியுறாங்க. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அந்தப் பிரிவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வலியும் அதிகம். பிறந்ததில் இருந்து தூக்கி வளர்த்த பேரன்களைப் பிரியும் தாத்தாக்களில் இருந்து, பள்ளியை, அம்மாவை, அப்பாவைப் பிரியும் குழந்தைகள் வரை அடுத்தடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் பிரிவுகள் அது. அந்த வலிகளையும் விவாகரத்துகளைக் குறைக்கிற வழியையும்பத்திக் கொஞ்சம் பேசலாமா?

நாம சின்ன வயசுல கத்துக்கிற விஷயம்தான் வளர்ந்த பிறகும் நம்மைத் தொடர்ந்து வரும். அது நல்ல விஷயமாக இருந்தால், நாலு பேருக்கு ரோல் மாடலாக இருப்போம். கெட்ட விஷயமாக இருந்தா, நானூறு பேருக்கு மோசமான உதாரணமா இருப்போம். மின்சாரம்கூட இல்லாத குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னை என் அம்மா சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம்தான் இப்பவும் வழிநடத்துது. அந்த விஷயம் மூலமா பெத்தவங்களுக்கு இருக்கிற முக்கியக் கடமை பத்திக் கொஞ்சம் சொல்லவா?

இப்போ தமிழ் சினிமாவில் புதுப் புது எண்ணங்களும் வண்ணங்களும் ரசனையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோயிருச்சு. ஆனா, இப்பவும் பல படங்களில்  இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்களா, வேலைக்குப் போகாதவர்களா, புகைப் பழக்கம் இருப்பவர்களா, பெண் பித்தர்களா இருக்கிற மாதிரியே காண்பிக்கிறாங்க. ஆனா, நான் இளைஞர்களைத்தான் தினம் தினம் சந்திக்கிறேன். சினிமாவில் காட்டுகிற மாதிரியான இளைஞர்களைப் பார்க்கவே முடியலையே! தமிழகத்தை இயங்கவைத்துக்கொண்டிருக்கும் தற்போதைய இளைஞர்களைப் பத்திக் கொஞ்சம் பேசவா?

20.6.13 முதல் 26.6.13 வரை 044 - 66802911 * என்ற எண்ணில் என்னை அழையுங்கள். அனுபவத்திலிருந்து சுக துக்கம் பகிர்ந்துக்கிறேன்...

அன்புடன்,

மோகன்.

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு