Published:Updated:

முட்டுச்சந்தில் வின்டேஜ் ஜானுவின் செவன்த் ஆக்டேவ்!

உ.கு.சங்கவி

முட்டுச்சந்தில் வின்டேஜ் ஜானுவின் செவன்த் ஆக்டேவ்!

உ.கு.சங்கவி

Published:Updated:
##~##

'நம்மில் யார் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான்?’ விரலில் கீ போர்டும் கண்களில் சினிமா கனவுகளோ டும் சிலர் வாய்ப்புத் தேடிக் கொண்டு இருக்க, 'நம்ம ரேஞ்ச் இவ்வளவுதாம்பா...’ என உள்ளூர் ஆர்கெஸ்ட்ராக்களில் அடைக்கலம் ஆகிவிட்டார்கள் பலர். ஆனால், இந்த இரு துருவங்களுக்கும் இடையில் செம ஸ்டைலாக, மிகத் துடிப்பாக, 'நாங்கதான் கேங்க்; நாங்க போடறதுதான் மெட்டு; நாங்க பாடறதுதான் பாட்டு’ என்று அட்ராசிட்டி பண்ணுகிறார்கள் சில இசைக் குழுவினர். 'மியூஸிக் பேண்ட்’ என்று அடையாளமிடப்படும் இவர்களில் ராக், மெலோ, ஜாஸ் என்று வகைக்கு ஒன்றைப் பார்த்தேன்...

முதலில் சிக்கியது 'வின்டேஜ்’. ''பேண்ட் பேரு இங்கிலீஷ்ல இருந்தாலும், நாங்க பாடுறதெல்லாம் தமிழ்ப் பாட்டுதான். ரஹ்மான், ஹாரீஸ்னு பிரபல இசையமைப் பாளர்களின் ஹிட் நம்பர்ஸ்ல சில பாடல்களை எங்க ஸ்டைல்ல மாத்திட்டு, வேற டேஸ்ட்ல கொடுப்போம். பழசை அடிச்சுப் பொரட்டிப் புதுசாக் கொடுக்குறதால வின்டேஜ்னு பேர்!'' என்று பெயர்க் காரணம் நல்கினார் கீ போர்டு சூர்யா பிரசாத்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆரம்பிச்சப்ப வின்டேஜ் இமேஜ் கொஞ்சம் டேமேஜ்தான். அப்புறம் இளைஞர்களை ஈர்க்கும் இசை வடிவத்தைப் பத்தி நிறையப் படிச்சு, ஆராய்ச்சி பண்ணி ஹிட் அடிக்க ஆரம்பிச்சுட்டோம். இப்போ எந்த ஸ்டேஜ் ஏறினாலும் க்ளாப்ஸ் அள்ளும்!'' என்றபடி 'டும்சிக்... டும்சிக்...’ என வாயிலேயே டிரம்ஸ் அடிக்கிறார் கௌதம்.

முட்டுச்சந்தில் வின்டேஜ் ஜானுவின் செவன்த் ஆக்டேவ்!

''மத்த பேண்டுகள் அதிகம் உபயோகப்படுத்தாத 'ஜாம்-ஹப்’னு ஒரு கருவியை நாங்க உபயோகப் படுத்துறோம். அதுல கனெக்ட் பண்ணிட்டுப் பயிற்சி எடுக்கிறப்போ, டிரம்ஸ், கீபோர்டு, பாடகர்கள்னு ஒவ்வொருவருக்கும் அவங்க பண்ற தப்பு என்னன்னு தெளிவா தெரிஞ்சிரும். யார் சொதப்பினாலும் அடுத்த நொடி கண்டு பிடிச்சுடலாம்... சரி பண்ணிடலாம்!'' என்று கம்பெனி ரகசியம் பகிர்ந்தார் கிடாரிஸ்ட் தினேஷ்.

டுத்ததாக நான் போய் நின்றது 'முட்டுச் சந்து’! அட பேண்ட் பேரே அதுதாங்க.

'' 'அதென்னய்யா முட்டுச்சந்து? ஏன், ஒரு 'நேஷனல் ஹைவே’, 'சர்வீஸ் லைன்’னு வைக்கக் கூடாதா’னு பலர் அக்கறையும் நக்கலுமா கேட்டிருக்காங்க. ஆனா, இந்தப் பேரை ஏன் வெச்சோம்னு நாங்க அர்த்தம் சொன்னதுமே தெறிச்சு ஓடிடுவாங்க!'' என்று ஓப்பனிங் கொடுத்தார் அந்தக் குழுவின் பாடலாசிரியர் மற்றும் பாடகர் குரு.

''ஏன் அப்படிப் பேர் வெச்சீங்க?''

''முட்டுச்சந்துனு தெரியாம ஒரு இடத்துக்குள்ள நீங்க போகும்போது எப்படிப் போவீங்க. ரொம்ப வேகமா போய் படார்னு பிரேக் அடிச்சுப் பதறி நிப்பீங்கள்ல... அப்புறம் ஒரு யூ டர்ன் அடிச்சு, அடுத்த சந்தைத் தேடுவீங்கள்ல. அப்படித்தான் நாங்க. புதுசா ஒரு இசை வடிவத் தைத் தேடிப் போவோம். அதுல கொஞ்சம் டிராவல் பண்ணிட்டே இருக்கும்போது, சட்டுனு டிராக் மாறி அடுத்த சந்தைப் பிடிச்சிருவோம். அதாவது, இன்னொரு இசை வடிவம். எப்படி?''

''தாறுமாறா இருக்கு. அப்படி என்ன பாடுவீங்க?''

''எங்க சொந்தச் சரக்குதான்!'' என்ற டிரம்மர் ராகுல் ஒரு பாடலைப் பாடினார்.  

''நீதான் என் லைஃப்னு சொல்லுவா...
நான்தான் உன் வைஃப்னு கொஞ்சுவா...
டயலாக்கா அடிச்சுத் தள்ளுவா...
கடைசில ஆப்புவெச்சுக் கொல்லுவா!''

''பேண்ட் பேருக்கு அர்த்தம் சொன்னப்பவே கிளம்பியிருக்கணும். பை பாய்ஸ்!''

முட்டுச்சந்தில் வின்டேஜ் ஜானுவின் செவன்த் ஆக்டேவ்!

டுத்த ஸ்பாட் 'செவன்த் ஆக்டேவ்’!

ஆக்டேவ் கதை சொல்லத் துவங்கினார் பாடகர் குணா. ''ஆக்டேவ்னா, ஸ்வரங்களுக்கு இடையிலான இடைவெளி. உண்மை என்னன்னா, காலேஜ் வகுப்புகளை பங்க் பண்ணத்தான் இந்த பேண்ட் ஆரம்பிச்சோம். ஆனா, ஒரு கல்லூரி விழாவில் எங்க ஷோ பார்த்துட்டு, ஜட்ஜா வந்திருந்த டிரம்மர் சாம் எங்க பேண்ட்ல சேர்ந்துட்டார். 'ல பொங்கல்’, 'டெரரிஸ்ட்ஸ்’னு ஏற்கெனவே பிரபலமா இருந்த பேண்ட்களுக்கு வாசிச்சிட்டு இருந்தவர் சாம். அவர் வழிகாட்டலில் நிறைய வெற்றிகளைப் பார்த்தோம். ஆனா, இவனுங்களை வெச்சுக்கிட்டு மியூஸிக் பண்றது இருக்கே... செம கொடுமை. ஒரு மகளிர் கல்லூரி போட்டியில் கலந்துகிட்டப்ப, 'பாடப்போற பாட்டுக்கு நல்ல இன்ட்ரோ கொடுடா’னு ராகவ்கிட்ட சொல்லி அனுப்பினா, அவன் மேடையேறி, 'நான் இந்த காலேஜ் பொண்ணு ஒருத்தியைக் காதலிச்சேன். அந்தப் பொண்ணுக்கு இந்தப் பாட்டை

டெடிகேட் பண்றோம்’னு உளறிட்டான். ஜட்ஜ், பார்வையாளர்கள், மாணவிகள்னு எல்லாருமே கேர் ஆகிட்டாங்க. சத்தமே இல்லாம எஸ்கேப்!'' என்று குணா சொல்ல, 'ஹிஹிஹிஹிஹி...’ என்று சிரிக்கிறார் கிடாரிஸ்ட் ராகவ்.  

டைசி ராக் பேண்ட் ஜானு’ஸ்!

கிடாரிஸ்ட் ஜானு ஒரு போட்டியில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவரது குழுவின்பெயர் கேட்டிருக்கிறார்கள். அதுவரை பெயர் எதுவும் வைக்காததால், தன் பெயரையே பேண்டின் பெயராக வைத்துவிட்டார் ஜானு. ''எங்க ப்ளஸ் பாயின்ட், சொந்தமா நாங்க எழுதுற லிரிக்தான். எங்க குரூப் மேடையேறிட்டா, சும்மா சுத்திச் சுத்திப் பூந்து விளையாடுவோம். எங்க கிடாரிஸ்ட் ஹர்க்கி கிடார் ப்ளே பண்ணிட்டே செமத்தியா ஆடவும் செய்வான். அவனைப் பார்த்து மொத் தக் கூட்டமும் ஆட ஆரம்பிச்சிரும். பஞ்சாபியா இருந்தாலும் அவன்தான் எங்க டீமோட பலம்!'' என்கிற ஜானுவைத் தொடர்ந்து பஞ்சாபி கலந்த தமிழில் பேசுகிறார் ஹர்க்கி. ''எப்பவுமே ஒரே ஸ்டைல்ல பாடப் பிடிக்காது. எங்க டிராக்கை மாத்திட்டே இருப்போம். இப்ப கொஞ்ச நாளா மெலடி, ஜாஸ்னு பல ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே புது வெர்ஷன் ஒண்ணைக் கொண்டுவருவோம்!'' என்கிறார் ஹர்க்கி.

முட்டுச்சந்தில் வின்டேஜ் ஜானுவின் செவன்த் ஆக்டேவ்!

''எல்லாம் சரி... மிகச் சில பேண்ட்களைத் தவிர, மற்ற பேண்ட்களில் ஏன் பெண்களுக்கு இடமில்லை?'' என்று கேட்டேன்.

கோரஸ் குரலில் பதில் சொன்னார்கள்... ''அதுக்கு மூணு முக்கியமான காரணம் இருக்கு. நம்பர் ஒன், ஒரு பொண்ணு வந்துட்டா, டீமுக்குள்ள எவனும் அவனாவே இருக்க மாட்டானுங்க. ஒரே பீட்டரா இருக்கும். நம்பர் டூ, மேடையில பொண்ணு இருந்தா, கீழே இருக்கிற எவனும் நம்மளைக் கவனிக்க மாட்டானுக. நம்பர் த்ரீ, ஒரு பொண்ணு இருந்தா குழந்தையைப் பார்க்கிற மாதிரி அவங் களைப் பத்திரமா பார்த்துக்கணும். கூடவே, அவங்க அப்பா வேற வருவாரு. அது செம பேஜாரு!''

பசங்க செம ஸ்மார்ட்!