இன்று... ஒன்று... நன்று!
##~## |
விகடன் வாசகர்களுக்கு 'எவிடென்ஸ்’ கதிரின் பணிவான வணக்கம்...
அரசியல் என்றாலே சூது, அது தேர்தலுக்கான ஒரு தளம், ஏமாற்றுபவர்களின் கூடாரம், சாக்கடை... இப்படி நாம் அரசியலைத் தள்ளிவைத்தேதான் பார்க்கிறோம். ஆனால், தெளிவான அரசியல் அப்படி இல்லை. அது இளைஞர்களுக்கான தளம். என்னைப் பொறுத்தவரை அரசியல் இல்லாமல் இங்கே யாருமே இல்லை. சாவித்ரி பாய் பூலே பற்றித் தெரியுமா உங்களுக்கு? அவர்களின் வாழ்க்கைக் கதை மூலம் அரசியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோமா?
சமச்சீர் கல்வியில் தொடங்கி அந்நிய முதலீடு, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் என்று நம்மைச் சுற்றி தினம்தினம் போராட்டங்கள் நடக்கின்றன. சாமானியன் வீதியில் இறங்கிப் போராடினால், அவனைத் தீவிரவாதியாகச் சித்திரித்து ஒடுக்க நினைக்கிறது அரசாங்கம். போராட்டம் என்றால் என்ன? அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைக்கும்போது, கஸ்மா என்ற இஸ்லாமியப் பெண் மணி என் நினைவுக்குவருகிறார். கஸ்மாவுக்குப் போராட்டத்துடன் என்ன தொடர்பு என்று சொல்கிறேன்... கேட்கிறீர்களா?

இந்தியாவில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 5,000 கௌரவக் கொலைகள் நடக்கின்றன. அது இல்லாமல் கௌரவச் சித்ரவதைகள், தற்கொலைகள் வேறு. நிலக்கோட்டைக்கு அருகில் பாலசந்தர் என்பவருக்கும் அவரது காதல் மனைவிக்கும் நடந்த கொடூ ரத்தைக் கேளுங்கள். நெஞ்சம் பதைபதைத்துப்போகும்... விண்வெளியில் உலவினாலும் இன்றும் 2,000 வருடத் தீண்டாமையை விட்டுவிடாமல் நம்முடனே வைத்திருக்கிறோம். இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர் ஒருவரின் கதையைக் கேட்டால், 'இன்னமும் யாருங்க சாதி பார்க்குறா’ என்ற உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்வீர்கள்!
காவல் துறையினரை ஒன்று, நாம் பகடி செய்கிறோம். அல்லது கொடூரமானவர்களாக எண்ணி விலகிச் செல்கிறோம். நமக்கு உதவுவதற்காகவே அந்தப் பிரமாண்ட அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறது அரசாங்கம். அவர்களை எந்தவிதத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம், கைது தொடர்பான கட்டாய நடைமுறைகள் என்னென்ன? அறிந்துகொள்ளலாம் தோழர்களே...
27.6.13 முதல் 3.7.13 வரை 044 - 66802911* என்ற எண்ணில் அழையுங்கள். அவசியம் அறிய வேண்டியவற்றை அறிவோம்.
அன்புடன்,
கதிர்.
* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.