##~##

விகடன் வாசகர்களுக்கு பிரபா கல்விமணியின் வணக்கங்கள்...

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது, அதன் கல்வியறிவு 18 சதவிகிதம்தான். ஆனா, சுதந்திரம் அடைஞ்சு 65 வருஷத்துக்குப் பிறகும், உலகில் உள்ள 100 கோடி எழுத்தறிவு இல்லாதவர்களில் பாதிப் பேர் இந்தியாவில்தான் இருக்காங்க. காமராஜர் காலத்துலயே தமிழகத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கணும்னு அரசாங்கம் சொன்னது. ஆனா, இத்தனை ஆண்டுகள் கழித்தும் தமிழகத்தின் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்களில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதே நிலை. ஏதேதோ கலாசாரத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நாம், சீரான கல்விக் கலாசாரத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் விடலாமா? இது தொடர்பான இன்னும் சில அதிர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவா?

இன்று... ஒன்று... நன்று!

நான் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாம் 'தனிப் பயிற்சி’ அதாவது, டியூஷனுக்குச் செல்வது என்பது கேவலமான விஷயம். ஆனால், இப்போது அதுவே பெருமை சேர்க்கும் ஒரு கௌரவமாக மாறிவிட்டது. பகல் முழுக்கப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு, மாலை வேளைதான் சுய சிந்தனைக்கும் தனித் திறனை வளர்த்துக்கொள்ளவும் கிடைக்கும் நேரம். ஆனால், அந்த நேரத்தை அவனை உபயோகப்படுத்திக்கொள்ளச் செய்யாமல், மீண்டும் அதே ஆசிரியரிடம், அதே பாடத்தைப் படிக்க டியூஷனுக்கு அனுப்புவது என்பது கொடுமைதானே. அந்த அபத்த நடைமுறையைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா?

முன்னெல்லாம் கல்வி என்பது ஒரு சேவை. ஆனால், இப்போது அது வியாபாரம். நர்சரிப் பள்ளிகளில் ஆரம்பித்து, பொறியியல் கல்லூரிகள் வரை அனுமதிக்கென கட்டுக்கட்டாகப் பணம் கொட்டிக்கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது. கல்விக்காக அரசு செலவழிக்க மறுப்பதே, தனியார் பள்ளிகளின் இந்த கல்விக் கொள்ளைக்கான ஆணிவேர். தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பற்றிய அதிர்ச்சிகள் உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? நான் சொல்கிறேன்...

குழந்தையின் மனம் மிகவும் மென்மையானது. ஆனால், அவர்களை அடித்து உதைத்துப் படிக்கச் சொல்வது என்ன நியாயம்? நான் எந்தக் குழந்தையைச் சந்தித்தாலும், அவர்களின் பெயர், வகுப்பு, பள்ளிக்கூடம் பற்றி விசாரிப்பது வழக்கம். அப்படிக் கேட்கும்போது, 'பள்ளியில் ஆசிரியர் அடிப்பாரா?’ என்ற கேள்வியையும் தவறாமல் கேட்பேன். அப்படி நான் கேட்ட 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளில் ஒருவர்கூட 'என் ஆசிரியர் அடிக்க மாட்டார்’ என்று சொன்னதே இல்லை. எத்தனை கொடூரம் இது. உங்கள் குழந்தையை அடிக்கும் உரிமை உங்களுக்கே கிடையாது. ஆசிரியர்கள் எப்படிக் கை நீட்டலாம்? இது தொடர்பாகச் சில அவசியப் புரிதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

11.7.13 முதல் 17.7.13 வரை 044 - 66802911 * என்ற எண்ணில் அழையுங்கள். கல்விகுறித்த அவசியத் தகவல்களையும் அவலத் தகவல்களையும் நிறையவே சொல்கிறேன்.

அன்புடன்,

பேராசிரியர் பிரபா கல்விமணி.

அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு