Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு பாரதி பாஸ்கரின் வணக்கம்... இதுவரை பட்டிமன்ற மேடைகளில் உங்களிடம் பேசிவந்த நான், இப்போது காற்றலை மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்...

இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் சாலைகளில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அறிவிப்புகள், விளம்பரங்களை அதிக அளவில் பார்க்க முடியும். ஆனால், இப்போதோ செயற்கைக் கருத்தரிப்புக்கான அறிவிப்புகளே ஆக்கிரமித்துக்கிடக்கின்றன. 'இந்தியா முழுக்க சுமார் 20 மில்லியன் தம்பதிகள் கருத்தரிப்பு சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’ என்கிறது ஒரு சர்வே. அவர்களில் பலர் கருமுட்டை தானம் பெறும்போது, 'வெள்ளை கலர்ல குழந்தை பிறக்கிற மாதிரி கருமுட்டை வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்ற கோரிக்கையுடன் வருகிறார்களாம். இது எவ்வளவு வேதனையான விஷயம்? ஆண்களுக்குக்கூட ஃபேஸ்க்ரீம் விற்பனை செய்யப்படும் அளவுக்கு வெண் சரும மோகம் நம்மவர்களைப் பீடித்திருக்கிறது. இந்த மண் வேண்டும், இந்த மண் தரும் தட்பவெட்பம் வேண்டும், இந்த மண்ணின் பலன்கள் வேண்டும். ஆனால், நிறம் மட்டும் வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்? வெள்ளை நிற மோகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கிறீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று... ஒன்று... நன்று!

அந்நிய மொழி வேண்டாம், தாய்மொழி வேண்டும் எனப் போராடியவர்கள் தமிழர்கள் என்று இன்றைய தலைமுறையினரிடம் சொன்னால் சிரிப்பார்கள். உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய பல தமிழர்கள், 'அங்கு மொழி தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டோம். 'அந்தச் சரிவு பக்கம் செல்வது  ஆபத்து’ என்று அங்கு இருப்பவர்கள் சொல்லியதைக்கூட எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றார்கள், ஆங்கில அறிவு இல்லை, வடமொழி தெரியவில்லை என்பதோடு தமிழ் மொழியையும் ஒழுங்காகக் கற்றதில்லை நாம். மொழிக்காகப் போராடிய போராளிகளின் பேரன், பேத்திகள் பலருக்கு இப்போது தமிழ் எழுதப் படிக்க... ஏன், வாசிக்கக் கூடத் தெரியாது. இந்த முரண்குறித்து கொஞ்சம் பேசலாமா?

'நான் வணங்கும் ராமனும், சீதையும் நகைகள் ஏதும் அணிவது இல்லை’ என்றார் காந்தி. விருதுநகரில் தன் தாய்க்கு கழிப்பறைக் கட்டிக்கொடுக்கும் கோரிக்கையைக்கூட நிராகரித்தவர் காமராஜர். சிறையில் ஒரு வாளி நீரில் தானும் குளித்து தன் வேட்டியையும் துவைத்துக்கொண்டவர் ராஜாஜி. ஆனால், இப்படியான மனிதர்கள் இப்போது அமானுஷ்ய மனிதர்களாகிவிட்டனர். 'இப்படியும் சிலர் இருந்தனர்’ என்றால் நம் குழந்தைகள் அதை நம்பக் கூட மாட்டார்கள். பெருமைப் பித்து பிடித்தலையும் சமூகமாகிவிட்டோம் நாம். அதைப் பற்றியும் சொல்கிறேன்.

25.7.2013 முதல் 31.7.2013 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். அன்றாட வாழ்வின் அபத்தங்கள் சிலவற்றையும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறேன்...

நேசத்துடன்,

பாரதி பாஸ்கர்.

*அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.