Published:Updated:

கலகலப்புக்கு மறுபெயர் வாலி!

கவிப்பேரரசு வைரமுத்து

கலகலப்புக்கு மறுபெயர் வாலி!

கவிப்பேரரசு வைரமுத்து

Published:Updated:
##~##

வாலி பாட்டெழுத வந்த காலத்தில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்தார். 'மதுரை வீரன்’, 'நாடோடி மன்னன்’, 'மகாதேவி’, 'ராஜா தேசிங்கு’ போன்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் புகழை நோக்கி வந்துகொண்டிருக்கிற பாடலாசிரியராகவும் கண்ணதாசன் திகழ்ந் தார். வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த  வாலி, கண்ணதாசனை முதன்முதலில் சந்தித்தார்.  

'காட்டுக்குள் தேனீக்கள்
கூட்டுக்குள் வைத்ததனைப்
பாட்டுக்குள் வைத்திருக்கும்
பாவலனே என் வணக்கம்’
- என்று முதல் சந்திப்பிலேயே கவிதையில் வணக்கம் சொல்லி கண்ணதாசனை அசத்தினார். பின்னாளில் 'என் பாட்டு எது, வாலி பாட்டு எதுன்னு எனக்கே சில நேரங்களில் தெரியலப்பா’ என்று கண்ணதாசன் வியக்கும் அளவுக்கு வாலி வளர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலகலப்புக்கு மறுபெயர் வாலி!

நல்லி குப்புசாமி வாலிக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்துஇருந்தார்; அன்றுதான் கவியரசி  சௌந்தரா கைலாசத்துக்கு இரங்கல் கூட்டம். அங்கே இரங்கல் உரை ஆற்றிவிட்டு வாலி விழாவுக்குச் செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். இரங்கல் கூட்டமேடை யில் என்னருகே அமர்ந்திருந்த ரஜினிகாந்த், 'கூட்டம் முடிந்து உங்களுக்கு என்ன புரொகிராம்?’ என்று கேட்டார். 'வாலி விழாவுக்குச் செல்கி றேன்; நீங்களும் வாருங்களேன்’ என்றேன். 'நிகழ்ச்சியில் என் பெயர் இல்லையே’ என்றார். 'என் பெயரும்தான் இல்லை. மூத்தவர்; முன் னோடி. மரியாதை செய்ய வாருங்கள்’ என்றேன். 'ஒரு பொன்னாடைகூட இல்லை’ என்றார். 'என் காரில் இருக்கிறது’ என்றேன். ஒரு குழந்தைபோல் என்னோடு குதூகலமாகப் புறப்பட்டுவிட்டார்.

ரஜினியும் நானும் சபைக்குள் நுழைந்ததும் ரசிகர்களுக்கும், மேடையில் இருந்த கமல், வாலி, உட்பட அத்தனை பேருக்கும் ஆனந்த அதிர்ச்சி. அந்த மேடையில் வாலிக்கு நான் ஒரு தங்க மோதிரம் அணிவித்தேன். அதை வைத்து வாலி ஆடிய சொல் விளையாட்டுத்தான் அந்த விழா வின் உச்சம். 'எல்லாரும் பாருங்கய்யா... என்னமோ வைரமுத்துவும் நானும் மோதுறோம்... மோது றோம்கிறாங்களே!

'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே’னுதான் வைரமுத்து மோதிரமே போட்டுட்டாருய்யா!’ - கலகலப்புக்கு மறு பெயர் வாலி!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism