Published:Updated:

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’

க.நாகப்பன்

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’

க.நாகப்பன்

Published:Updated:
##~##

த்மநாதன்... தமிழ்த் திரை உலகில் பரிச்சயம் இல்லாத பெயர்தான். 'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’, 'உனக்காக எல்லாம் உனக்காக’, 'குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா’, 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன் அன்புமனங்களில் சிரிக்கின்றான்’ போன்ற கால வெள்ளத்தில் மூழ்காத பாடல்களை எழுதிய கவிஞர் இவர். மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூலை 15-ம் தேதி இயற்கை எய்திவிட்டார் ஆத்மநாதன்.

தன்னுடைய அப்பா குறித்த  நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ஆத்மநாதனின் மகன் இளங்கோவன். ''திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்ல பிறந்த அப்பா ஆரம்பத்தில் ஆபரணத் தொழில்தான் பார்த்துட்டு இருந் தார். ஆனால், நாடகக் கலை மீதுகொண்ட காதலால் 11 வயதில் சென்னைக்கு வந்து விட்டார். டி.கே.சண்முகம் நாடகக் குழுவில் நடிகராக அறிமுகமானவர். பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல தளங்களில் தன்னை நிரூபித்தார். 'ரத்தபாசம்’ படத்தில் 'பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப் பது ஏனோ?’ பாடல் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். 'மல்லிகா’, 'நாடோடி மன்னன்’, 'களத்தூர் கண்ணம்மா’, 'அல்லி’, 'விக்ரமாதித்யன்’, 'மகேஸ்வரி’, 'எதையும் தாங்கும் இதயம்’ உள்பட 75 படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறார். 1978-ம் வருடம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’

'புதையல்’ படத்துக்காக 'விண்ணோடும் முகி லோடும் விளையாடும் வெண்ணிலவே’ பாடலை அப்பா எழுதி முடித்தவுடன்  இசையமைப்பாளர் எம்.எஸ்.வி., 'பாடல் ரொம்ப இலக்கிய நயமா இருக்கே’ என்று கருதியிருக்கிறார். ஆனால், படத்தின் வசனகர்த்தா கலைஞர், 'அதுதான் பாடலின் பெரும்பலம். அப்படியே இருக்கட்டும்’ என்று சொன்னதை அப்பா அடிக்கடி  சிலாகித்துச் சொல்வார்.

என் அக்கா பேரன் கிஷோருக்கு எட்டு வயது. அவன் மஞ்சள் காமா லையால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்று இறந்துவிட்டான். கொள்ளுப்பேரனைப் பறிகொடுத்த அந்த ஏக்கமே அப்பாவை மரண வாசலுக்குள் தள்ளிவிட்டது!'' - கனத்த குரலில் முடிக்கிறார் இளங்கோவன்.