Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

விகடன் வாசகர்களுக்கு, ஷாலினியின் வணக்கங்கள். ஒரு மன நல மருத்துவராக மனித மனங்களைப் பற்றிய, சில புரிதல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை...    

''நாம் எல்லோருமே வெற்றியை நோக்கித்தான்  ஓடிட்டு இருக்கோம். ஒரு விஷயத்தில் ஜெயிச்சுட்டா, அந்த வெற்றிக்கு முழுக்கவும் நாம்தான் காரணம்னு கொண்டாடுவோம். அதுவே அந்த முயற்சி தோல்வியில் முடிஞ்சுட்டா, 'அது சரியில்லை... இவர் சரியில்லை’னு நம்மைச் சுத்தி இருப்பவர்களைக் காரணம் ஆக்கிடுவோம். ஜெயிச்சவங்க எல்லோரும் அதுக்கு முன்னாடி பலமுறை தோல்வியைச் சந்திச்சவங்களாத்தான் இருப்பாங்க. வெற்றி பெறுவதற்கானச் சின்ன ஃபார்முலா ஒண்ணு இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காதல்... ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஏதோ ஒரு சமயத்தில் காதலிக்கணும்னு எல்லோருக்குமே ஆசை வரத்தான் செய்யும். சராசரியா ஒரு மனிதனுக்கு ஆறு முதல் பத்து தடவை வரை காதல் வரும்னு அறிவியல் சொல்லுது. ஆனால், 'அது ஒரு மலர். ஒருமுறை மட்டுமே பூக்கும்... மணக்கும்’னு காதலைத் தவறான கோணத்தில் அணுகுறோம். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் உஷாரா நடந்துப்பாங்க. பெரும்பாலும் தப்பான முடிவு எடுக்க மாட்டாங்க. ஆனா, பசங்கதான் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுத்து  பாதிப்புக்குள் ளாகிறாங்க. காதலைப் பொறுத்தவரை இளைஞர்களின் அணுகுமுறை எப்படி இருக்கணும் தெரியுமா?

இன்று... ஒன்று... நன்று!

இணையதளங்களும் சமூக வலைதளங்களும் உலகத்தை சின்னக் கிராமமாக்கிவிட்டன. அதில் இப்போதைய பிரச்னை... 24 மணி நேரமும் சமூக வலைதளங்களில் சாட் செய்வது. ஆன்லைனுக்கு அடிமை ஆனப் பலரை நான் பார்த்திருக்கிறேன். எப்போதும் இணையத்திலேயே தீவிரமாக இயங்குபவர்கள் உணரவில்லை என்றாலும், அது ஒருவித மன நோய்தான். அதன் அபாயம்குறித்து பேசலாமா?

'படிச்சப் படிப்புக்கு வேலை வேணும்’, 'இதெல்லாம் ஒரு சம்பளமா’, 'என் ஸ்டேட்டஸுக்கு இந்த வேலை செட் ஆகாது’.... இப்படி ஏகப்பட்ட சாக்குச் சொல்லி, படிச்ச இளைஞர்கள் பலர் சும்மா இருக்காங்க. அவர்களுக்கும் லட்சியம், கனவு, அதை அடையும் தகுதிகள் எல்லாமே இருக்கு. ஆனா, வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சின்னப் புள்ளியில் தொடங்கி அதிரடியாக மேலே வந்தவர்கள்தான் என்பதை அவர்கள் புரிஞ்சுக்கலை. அப்படியான சில கதைகளை உங்களுடன் நான் பகிர்ந்துக்கிறேன்.

'நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, அடுத்த அஞ்சு வருஷம் கழித்து என்ன செய்ய வேண்டும்’ என்பது வரை எல்லோருமே திட்டமிடுவோம். ஆனா, அந்தத் திட்டத்தை சரியா நிறைவேற்றுகிறோமா? இந்தக் கேள்விக்கான பதில்... 'இல்லை’! ஏனெனில், அந்தப் பயணத்தில் நாம் சில தவறுகள் செய்வோம். அதெல்லாம் என்னன்னு தெரியுமா? நான் கொஞ்சம் நினைவூட்டுகிறேன்.

1.8.13 முதல் 7.8.13 வரை 044-66802911*என்ற எண்ணில் அழையுங்கள்.  ஒவ்வொரு நொடியும் நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பத்திப் பேசுவேன்!

அன்புடன்,

ஷாலினி.

*அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism