Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

காந்திக்கு கம்ப்யூட்டர் சாம்பிராணி!

##~##
''எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு எதுவும் தெரியாததுபோலவே இருப்பதில் ஒரு சுகம் உண்டாமே, உண்மையா?''

''என்னங்க இது, மன்மோகன் சிங்கிடம் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

''ஒரு பெண் தன் வயதை எப்போதும் குறைத்துச் சொல்கிறாளே, மிச்ச வயதை என்ன செய்வாள்?''

''அவள் மற்றவளின் வயதைச் சொல்லும்போது, அதில் சேர்த்து விடுவாள்!''

நானே கேள்வி... நானே பதில்!

- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

''விலைவாசி உயர்வு, பொருட்களின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் தமிழ் நாட்டில் இருக்கின்றனவா?''

''நீங்கள் கேட்கின்ற விஷயங்களில் சில சிக்கல்கள் முன்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், 'நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த முறை 225 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவோம்’ என்று கருணாநிதி என்று அறிவித்தாரோ, அன்றே அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிட்டன. இதுகூடத் தெரியாத ஆளா பாஸ் நீங்க? உலகம் தெரியாத பச்ச மண்ணா இருக்கீங்களே!''

- அன்புமணி, ஈரோடு.

''கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த விஷயத்திலும் ஒற்றுமையாக இருக்கவே மாட்டார்களா?''

''ஏன், டாஸ்மாக் விஷயத்தில் இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்! ஒவ்வொரு விஷயத்திலும் 'தி.மு.க-தான் ஆரம்பித்தது, அ.தி.மு.க-தான் ஆரம்பித்தது’ என்று சண்டை போட்டுக்கொள்ளும் அவர்கள், 'டாஸ்மாக்’ விஷயத்தில் மட்டும் வாயே திறப்பது இல்லையே!''

- பி.விஜய்கிருஷ்ணா, சென்னை-24.

''இப்போதைய காங்கிரஸ்காரர்களுக்கும் காந்திக்கும் என்ன ஒற்றுமை?''

''கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கும் கம்ப்யூட் டருக்கும் உள்ள ஒற்றுமைதான்!''

- ப.அமுதா, மதுரை.

''பெரிய கோட்டுக்கு அருகில் இன்னொரு பெரிய கோடு போட்டு சின்ன கோடாக்கும் தத்துவத்துக்கு ஓர் உதாரணம், ப்ளீஸ்?''

''போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை.  1987-ம் ஆண்டு போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில்

நானே கேள்வி... நானே பதில்!

60 கோடி கமிஷன் வாங்கியதாகக் குற்றச்சாட்டு. 24 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து 'விசாரணைக்கு மட்டும்

நானே கேள்வி... நானே பதில்!

200 கோடி ரூபாய் வீணாகச் செலவாகிவிட்டது’ என்று குவாத்ரோச்சி மீதான வழக்கையே வாபஸ் வாங்கியிருக்கிறது சி.பி.ஐ. ஊழல்

நானே கேள்வி... நானே பதில்!

60 கோடி, விசாரணை

நானே கேள்வி... நானே பதில்!

200 கோடி. இப்போ புரியுதா சின்ன கோடு, பெரிய கோடு தத்துவம்?''

- அ.மணிமொழி, சேலம்.

நானே கேள்வி... நானே பதில்!