Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

அப்பா - மகன் விளையாட்டு!

நானே கேள்வி... நானே பதில்!

அப்பா - மகன் விளையாட்டு!

Published:Updated:
##~##

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எணணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யுங்கள்!

''சமூகத்தில், இன்றைய பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை ஒன்று..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கவிஞர் செழியரசு-வின் கவிதை ஒன்று சட்டென நினைவுக்கு வருகிறது...

நானே கேள்வி... நானே பதில்!

'எத்தனை விடுதலை பெற்றும்
எவ்வளவு உயரம் அடைந்தும்
இத்தனைக் கால
இழிவின் மிச்சமாய்
உம் வசவுக்கான பின்னிணைப்பு
எம் பிறப்புறுப்பு!’ ''

- அனார்கலி, தஞ்சாவூர்

'' 'ஒரு நாளைக்கு 33 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் அல்ல' என்கிறதே, மத்திய அரசு?''

''ஓ! அப்போ ஒரு நாளைக்கு 33 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால், அவர்களை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கைது செய்வார்களோ?''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி

''வானத்தையும் பூமியையும் அட்டக்கத்தியால் பிளக்க இயலுமா?''

''அது, அட்டக்கத்தியைப் பிடித்திருக்கும் கையைப் பொறுத்தது. புரியவில்லையா?

வானம் - 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி (2ஜி), பூமி - 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி (நிலக்கரி).

நானே கேள்வி... நானே பதில்!

அட்டக்கத்தி - சி.பி.ஐ. அதைப் பிடித்திருக்கும் 'கை’ - ???

இதற்கு விளக்கம் வேறு வேண்டுமா என்ன?''

- பரமத்தி கனகு, ஈரோடு-11

''எம்.ஜி.ஆர்- வாலி... என்ன ஒற்றுமை?''

''எம்.ஜி.ஆர்... ஆட்சிக்கு வந்து வரிபோட்டவர்!

வாலி... எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வர வரிபோட்டவர்!''

நானே கேள்வி... நானே பதில்!

- நா.கி.பிரசாத், கோயம்புத்தூர்.

'' 'அழகிரி - ஸ்டாலின் - கனிமொழி ஆகியோர் உங்களை முட்களாகக் குத்தவில்லையா’ என்று கருணாநிதியிடம் கேட்டால், அந்தக் கேள்வியை அவர் எப்படி சமாளிப்பார்?''

'' 'முட்கள் இல்லாவிட்டால் கடிகாரம் பயன் அற்றது என்றாகிவிடும். என்னை ஓடுகின்ற கடிகாரமாகக் காட்டுவதே அந்த முட்கள்தானே’ என்பாரோ!''

- ஆர்.ஆர்.உமா, திருநெல்வேலி.

''தமிழக முதல்வருக்குப் பிடித்த 'விளையாட்டு’ எது?''

''மற்றவர்கள் யாரும் விளையாட நினைக்காத ஒரு விளையாட்டை ஜெயலலிதா வெகுகாலமாக விளையாடிவருகிறார். அது... 'அப்பா-மகன்’ விளையாட்டு! அவர் முதல்முறை முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதி அளித்து, தன் அப்பாவுக்கு எதிராகப் பேசவைத்தார். பின்னர், தன் இறுதிக் காலத்தில் தி.மு.க- வில் தஞ்சம் அடைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., தாமரைக்கனிக்கு எதிராக அவருடைய மகன் இன்பத்தமிழனையே ஏவி, இருவருக்கும் இடையே சூட்டைக் கிளப்பினார். இப்போது, தி.மு.க-

நானே கேள்வி... நானே பதில்!

விலிருந்து பரிதி இளம்வழுதியை அ.தி.மு.க-வுக்கு இழுத்ததோடு, தந்தைக்கு எதிராகவே அரசியல் செய்த தி.மு.க-வின் 'இளம் சுருதி’யைக் கைது செய்திருக்கிறார்.

ஒன்று கவனித்தீர்களா.. இந்த 'அப்பா - மகன்’ விளையாட்டை ஆடும்  ஒரே ஆட்டக்காரர் ஜெயலலிதா மட்டுமே!''  

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

''எல்லா வசதிகளையும் பெற்றிருந்தாலும், மனிதன் மகிழ்ச்சியை இழந்து கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?''

''ஜென் துறவி ஒருவரிடம், மன்னன் ஒருவன் அவருடைய மகிழ்ச்சியின் ரகசியத்தைக் கேட்டானாம். 'உண்ணும்போது உண்ணவும், உறங்கும் போது உறங்கவும், உழைக்கும்போது உழைக்கவும் மகிழும்போது மகிழவும் கற்றுக்கொண்டு விட்டேன்’ என்றிருக்கிறார் அந்தத் துறவி.

நானே கேள்வி... நானே பதில்!

புரிகிறதா?''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

''எந்த நாட்டு மக்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள்?''

'' ''எந்த தேசத்தின் மக்கள் தாங்கள் விளைவிக்காது வெளிநாட்டு உணவை உண்கிறார்களோ, தாங்கள் நெய்யாது வெளிநாட்டு ஆடைகளை உடுத்துகிறார்களோ, அந்த தேசத்துக்காக அனுதாபப்படுங்கள்’ என்றார் கலீல் ஜிப்ரான். இந்த அம்சம்கூட இல்லாமல்தான் பல நாடுகள் தங்களை 'வல்லரசுகள்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன!''    

- அனார்கலி, தஞ்சாவூர்.