Published:Updated:

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

இன்று... ஒன்று... நன்று!

Published:Updated:
##~##

''விகடன் தோழர்களுக்கு தொல்.திருமாவளவனின் வணக்கமும் வந்தனமும்!

25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நான் சந்தித்த ஒவ்வோர் அரசியல் தலைவரிடம் இருந்தும் பல விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். அதில் என்னை இன்றளவும் கவர்ந்த தலைவர் ஒருவர் இருக்கிறார். அவருடன் நான் பேசிப் பழகியதே சுவாரஸ்யமான ஓர் அத்தியாயம். அந்த சுவாரஸ்யத்தை உங்களிமுடம்  சொல்ல ஆசை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்படங்களை ரசிக்கும் சமூகமாக இருந்த நாம், இப்போது அதிலேயே திளைத்து மூழ்கிக்கிடக்கும் சமூகமாக மாறிவிட்டோம். உலக மக்களில்,  தமிழர்கள் மட்டும்தான் தங்கள் தலைவர்களை, முதல்வர்களை திரையரங்குகளில் தேடுகிறார்கள். 'ஏன், நடிகர்களுக்கு முதல்வராகும் உரிமை இல்லையா?’ என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது... அவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆனால், அது முழுக்கவே ஆரோக்கியமான விஷயம் இல்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளுங்களேன்...

இன்று... ஒன்று... நன்று!

பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி காடு, கழனிகளில் வேலை பார்ப்பவர்கள் வரை பல தரப்பினரும் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் சூழல் இங்கே. தமிழகத்தில் ஏறக்குறைய 18,000 மதுக் கடைகளை அரசாங்கமே நடத்திவருகிறது. இது ஒருபுறம் இருக்க, வணிக நிறுவனங்களில் பொருட்களின் விலைப் பட்டியல் தொங்கவிடப்படுவது போல, மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் 'சீட்டுக்கு இவ்வளவு விலை’ என விலைப் பட்டியல் தொங்கவிடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் சின்னத் தொடர்பு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? மது அடிமை விளைவுகளுக்கும் கல்வி அவலங்களுக்குமான பிணைப்பைச் சொல்கிறேன்...

காதல், தியானத்தைப் போன்றது. அதனைக் கொச்சைப்படுத்துவது, கூடாத செயல். ஆனால், தந்தை பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் அந்தக் காதல் அரசியல் ஆக்கப்பட்டதால், மூன்று கிராமங்கள் சூறையாடப்பட்டு பல உயிர் பலிகளும் அரங்கேறி உள்ளன. எப்படிப்பார்த்தாலும் இது அசிங்கமான ஓர் அவலம்தான். சாதி ஒழிப்பே மக்களின் உண்மையான விடுதலையாக இருக்கும். அதைப் பற்றி கொஞ்சம் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

பொன் விழா, மணி விழாக்களைக் கடந்துபயணித் துக்கொண்டிருக்கிறது இந்திய சுதந்திரம். ஆனால், நம் நாட்டிலிருந்து வெள்ளைக்காரன் போய்விட்டானே தவிர, உண்மையான விடுதலை இன்னும் நமக்குக் கிடைக்கவே இல்லை. நான் எட்டாம் வகுப்பு படித்ததாக ஞாபகம். அப்போது முதல் நான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது இல்லை. என் தாய் நாட்டை வெறுப் பதாக அர்த்தம்கொள்ளக் கூடாது.  நான் பார்த்த,அனுப வித்த விஷயங்கள் சில அப்படி என்னை மாற்றிவிட்டன. அந்தப் பின்னணியை உங்களிடம் தெரிவிக்கிறேன்...

8.8.13 முதல் 14.8.13 வரை 044 -66802911 * என்ற எண்ணில் அழையுங்கள். சமூகத்தின் இப்போதையை நிலையையும், நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கிறேன்...''  

அன்புடன்,

தொல்.திருமாவளவன்.

* அழைப்பு சாதாரணக் கட்டணங்களுக்கு உட்பட்டது.